அரங்கேறும் பேருந்து விபத்துகள்… தடுப்பது எப்படி?

பேருந்து விபத்துகளில் இருந்து தப்பிக்க ஒரு பயணியாய் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.
Bus accident
Bus accident
Published on

இப்போதெல்லாம் தொடர்ச்சியான பேருந்து விபத்துகளைச் செய்தியில் பார்க்கின்றோம். இதற்குச் சந்தர்ப்பச் சூழ்நிலைகள் ஒரு காரணமாக இருந்தாலும், இதை எப்படித் தடுக்கலாம்? ஒரு பயணியாய் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்வோம்.

இரவுப் பயணங்கள்:

இரவுப் பயண பேருந்து விபத்துகள் பயணிகளுக்குத் தனித்துவமான ஆபத்துகளை ஏற்படுத்துகின்றன. ஏனெனில் அந்நேரங்களில் பெரும்பாலும் பயணிகள் தூங்கிக்கொண்டிருப்பதால்; அவர்கள் சட்டென்று விழித்து உடனே செயல்படும் நேரத்தைக் குறைக்கிறது. அதற்கு இப்போதெல்லாம் சிலர் ‘குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் பயணம் மேற்கொள்ளும்போது விழித்திருப்பது ஒருவித ஆதரவு அளிப்பதாக இருக்கலாம்’ என்று எண்ணுகிறார்கள்; ஆனால், அது ஒரு உத்தரவாதமான பாதுகாப்பு நடவடிக்கை அல்ல.

மிகவும் பயனுள்ள தப்பிக்கும் உத்தி... பேருந்தில் உள்ள அவசரக்கால வெளியேற்றங்கள் (emergency exits) பற்றிய விழிப்புணர்வு, அதில் பயணிக்கும் அனைவருக்கும் முதலில் இருக்க வேண்டும்.

அதற்கு சீட் பெல்ட் இருந்தால் அதை உபயோகிப்பது (Using seatbelts), அலாரங்கள் அல்லது அசாதாரண ஒலிகளுக்கு ஏற்ப எப்படி உடனடியாக செயல்பட வேண்டும் என்பதைக் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். காரணம் அவசரக் காலங்களின்போது நாம் வீணடிக்கும் வினாடிகள்(Seconds) முக்கியமானதாக இருப்பதால் பயணிகள் தூங்குவதற்கு முன்னே வெளியேறும் வழிகளை (exit routes) பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
நேபாளத்தில் பேருந்து விபத்து… இதுவரை சுமார் 41 பேர் பலி!
Bus accident

பேருந்துகளில் உள்ள உலகளாவிய பாதுகாப்பு அம்சங்கள்:

இப்போதுள்ள நவீன பேருந்துகள் மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்புகளோடு(ADAS) ஒருங்கிணைக்கின்றன. இதில் மோதல் தவிர்ப்பு தொழில்நுட்பமும்(collision avoidance technology) சேர்ந்து வரும். தீ விபத்துகளைத் தடுக்க தீ தடுப்பு உட்புறங்கள், தானியங்கி தீ அணைக்கும் அமைப்புகள்(automatic fire suppression systems) மற்றும் தெளிவாகக் குறிக்கப்பட்ட அவசரகால வெளியேற்றங்கள் மூலம் இந்த விபத்துகள் தடுக்கப்படுகின்றன.

ரோல் ஓவர் பாதுகாப்பு (roll over protection), விபத்துகளால் உண்டாகும் அழுத்தங்களைத் தாங்கக்கூடிய வெளிப்புறங்கள் (crash energy absorption) போன்ற கட்டமைப்பு வலுவூட்டல்கள் கடுமையான விபத்துகளில் சமாளிக்க உதவுகின்றன.

கூடுதலாகப் பயணிகள் அனைவரும் விரைவாக வெளியேற உறுதி செய்வதற்காக பல நாடுகளில் அவசரக் கால சுத்தியல்கள், கூரை ஹேட்சுகள்(roof hatches) மற்றும் தப்பிக்க வசதியாக இருக்கும் அகலமான கதவுகள் அனைத்து பேருந்துகளில் உபயோகிக்கப்படுகின்றன.

பழைய பேருந்துகளை உலகளாவிய தரநிலைகளுக்கு மாற்றியமைக்க முடியுமா?

பழைய பேருந்துகளை மேம்படுத்துவது சாத்தியம்... ஆனால் சவாலானது. பேருந்தின் மறுசீரமைப்பில் தீயை அணைக்கும் கருவிகளை நிறுவுதல்(fire extinguishers), அவசர விளக்குகள், சிறந்த வெளியேற்றங்கள்(reinforced exits) மற்றும் இருக்கை பெல்ட்கள்(Seat belts) ஆகியவற்றைப் புகுத்தலாம். இருப்பினும் உலகளாவிய பாதுகாப்பு தரநிலைகளுடன்(ADAS வசதியுடன்) பழைய பஸ்களை மாற்றுவது கொஞ்சம் கடினம்.

இதையும் படியுங்கள்:
பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி!
Bus accident

அதற்கு பெரும்பாலும் முழு பேருந்தையும் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டி இருக்கும் (rebuilding the bus body).

ஆக, விபத்தை யாரும் எதிர்பார்த்து இருப்பதில்லை. தற்செயலாக நடப்பதால்தான் நாம் செய்திகளில் பார்க்கும் இவ்வகையான உயிர்சேதங்கள் நிகழ்கின்றன. எனவே, இனிவரும் காலங்களில் பயணிகள் மற்றும் எல்லா போக்குவரத்துக் கழகங்களும் சேர்ந்து மேலே குறிப்பிட்ட யுக்திகளைக் கடைபிடித்து ஒரு 100% பாதுகாப்பான பயணங்களை உருவாக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com