பச்சாதாபமின்மை:
அவர்கள் பிறரை தங்களது எண்ணங்கள் மற்றும் ஆசைகளை பூர்த்தி செய்யும் பொருளாக மட்டுமே கருதுவார்கள். இவர்களுக்கு பிறர் மேல் பச்சாதாபம் இருக்காது. பிறருடைய உணர்வுகளை புரிந்து கொள்ள மாட்டார்கள். மேலும் தங்களது தேவையை நிறைவேற்றிக்கொள்ள பிறரின் உணர்ச்சிகளை வருத்தி அவர்களை பலவீனப்படுத்துவார்கள்.
பாராட்டு அங்கீகாரம் தேடுதல்:
தன்னை மற்றவர்கள் தொடர்ந்து பாராட்ட வேண்டும், அங்கீகரிக்க வேண்டும் என்று எப்போதும் செயல்படுவார்கள். தற்பெருமை பேசி தன்னுடைய சாதனைகளை மிகைப்படுத்தி வெளிப்படுத்துவார்கள். தன்னை பிறர் முக்கியமாக நினைக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.
சுரண்டல்:
அவர்கள் தங்கள் சொந்த இலக்குகளை அடைய பிறரை எந்த அளவுக்கும் பயன்படுத்திக் கொள்வார்கள். நிதி ஆதாயம், சமூக அந்தஸ்து அல்லது உணர்ச்சி ரீதியான ஆதரவு என எதுவாக இருந்தாலும் பிறரை சுரண்டி தனது காரியத்தை சாதித்துக் கொள்வார்கள். ஆனால் அது பற்றிய குற்ற உணர்ச்சியோ வருத்தமோ அவர்களுக்குத் துளி கூட இருக்காது. மக்களை அவர்கள் வெறும் கருவிகளாக மட்டுமே எண்ணுவார்கள்.
கேஸ் லைட்டிங்:
பிறருடைய நினைவாற்றல், உணர்வுகள் நல்லறிவு ஆகியவற்றை பற்றி சந்தேகிக்க வைப்பார்கள். நன்றாக இருக்கும் ஒரு நபரை கிட்டத்தட்ட அவர் தான் ஒரு பைத்தியம் என நினைக்கும் அளவிற்கு சூழ்நிலையை உருவாக்கி சம்பந்தப்பட்ட நபரையே குழப்புவார்கள். தான் நினைத்ததை பெறுவதற்காக பிறரை மோசமாக உணர வைப்பார்கள்.
நார்சிசிஸ்டிக் மனநிலை கொண்ட நபர்கள் மிகவும் சுயநலமாக தன்னுடைய சொந்தத் தேவை, ஆசை போன்றவற்றை மட்டுமே குறிக்கோளாக வைத்திருப்பார்கள். பிறரைப் பற்றிய அக்கறையோ புரிதலோ இருக்காது. இந்த மாதிரி மனநிலை கொண்ட நபர்களை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
நார்சிசிஸ்டிக் மனப்பான்மை உள்ளவர்களின் குணாதிசயங்கள்:
அதிகப்படியான சுயநலம்:
இவர்கள் எப்போதும் தான், தனது என்று தன்னை பற்றி மட்டுமே சிந்திப்பார்கள். தனக்கு மட்டுமே முக்கியத்துவம் தர வேண்டும், பிறரை விட தாங்கள் உயர்ந்தவர்கள் என்று எண்ணி, பிறரை மட்டம் தட்டுவார்கள். எப்போதும் தன்னுடைய கருத்துக்கள், சாதனைகள் போன்றவற்றைப் பற்றிப் பேசி பெருமை அடித்துக் கொள்வார்கள். தன்னுடைய பிரச்சனையை பற்றி மட்டுமே பேசுவார்கள். பிறரை பேசவோ அல்லது அவர்கள் பேசுவதை கேட்கவோ மாட்டார்கள்.
பொய் மற்றும் வஞ்சகம்:
பெரும்பாலும் தனது பொறுப்புகளை தவிர்க்க பொய் சொல்வார்கள். கட்டுக்கதையை மிகைப்படுத்தி சொல்வார்கள். தங்கள் தவறுகளுக்கு தோல்விகளுக்கு பொறுப்பெடுக்க மாட்டார்கள். பிறரை குற்றம் சொல்லி, பிறர் மீது பழி போடுவார்கள்.
விமர்சனத்திற்கு அதிக ரியாக்ஷன்:
அவர்களுக்கு ஈகோ அதிகமாக இருந்தாலும் பலவீனமான சுயமரியாதை உள்ளவர்கள். பிறருடைய லேசான விமர்சனம் அல்லது கருத்து வேறுபாடு கூட கடுமையான கோபம், ஆத்திரம் போன்றவற்றை தூண்டும்.
ஆணவம் மற்றும் அவமதிப்பு:
அவர்கள் பெரும்பாலும் மற்றவர்களை இழிவாகப் பார்க்கிறார்கள். பிறரை சிறுமைப்படுத்தி தன்னுடைய மேன்மையைத் தக்க வைத்துக் கொள்ள அவர்களை கீழ்த்தரமாக நடத்துவார்கள்.
எதிர் கொள்வது எப்படி?
இது போன்ற ஆசாமிகளை கையாள்வது மிகவும் சவாலான விஷயம். ஆனாலும் அவர்களின் குணாதிசயங்களை அறிந்து அவற்றை தவிர்க்க தயாராக இருக்க வேண்டும். அவர்கள் தங்களை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். எனவே அவர்களை ஏற்றுக் கொள்ளலாம். இது ஒரு கடினமான காரியம். அவர்களை விமர்சிக்கவோ, மாற்ற முயற்சி செய்வதையோ நிறுத்த வேண்டும்.
அவர்களுடன் உறுதியான எல்லைகளை அமைத்துக் குறைவாக பழக வேண்டும்.
அவர்களுடன் அமைதியாக பேச வேண்டும். நீண்ட விளக்கங்கள் அல்லது நியாயப்படுத்தலை தவிர்க்க வேண்டும்.
அவர்களுடைய உணர்ச்சிகளுக்கு எதிர்வினையாற்றக் கூடாது.
கோபம் சோகம் போன்றவற்றை காட்டக்கூடாது.
உங்கள் கருத்தை நியாயம் செய்து நிரூபிக்க முயற்சி செய்யக் கூடாது. அவர்கள் உங்கள் வார்த்தைகளை திரித்து எரிச்சலூட்டி, முடிவில்லாத விவாதத்திற்கு இட்டுச்செல்வார்கள்.
அவர்களது நடத்தை தாங்க முடியாததாக இருந்தால் அவர்கள் விட்டு விலகுவது உத்தமம்.