கூட்டணி ஆட்சி!

'கூட்டணி ஆட்சி' என்ற அரசியல் சொல்லாடல் வாழ்வின் பல்வேறு பரிமாணங்களோடு மிக அழகாகவும் சுவாரசியமாகவும் ஒப்பிட்டுப் பேசுகிறது.
Our very body is greatest symbol of coalition government
Our very body is greatest symbol of coalition governmentImage credit-AI Image
Updated on
Kalki strip
Kalki strip

கூட்டணி ஆட்சி என்பது புதிதல்ல. காலம் காலமாக நடந்து வருவது. வெவ்வேறு சிந்தனைகள் உடைய இருவர் அல்லது பலர் இணைந்து நடத்தும் ஆட்சி கூட்டணி ஆட்சி. சிலர் உள்ளிருந்தும் சிலர் வெளியே இருந்தும் ஆதரவு தருவார்கள். கூட்டணி ஆட்சி சிறப்பானதாக இருக்கும். எப்படி என்பதை பார்க்கலாம்.

நம் உடம்பே கூட்டணி ஆட்சியின் மிகப்பெரிய அடையாளம். உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரையில் பல உறுப்புகள் உள்ளன. அவை அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட்டால் இயக்கம் நடைபெறும். ஒருமித்து இருந்தால் தனி மனிதன் சிறப்பாக வாழ்வான். ஏதோ ஒன்று சரியில்லை என்றால் மனித ஆட்சி சரியில்லாமல் போக ஆரம்பிக்கும்.

எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம். அதுதான் கோட்டை. அந்த கோட்டையில் மூளை தான் முதல்வன். உத்தரவுகளை, ஆணைகளை பிறப்பிப்பது அந்த முதல்வன் தான். நமக்குள்ளே இப்படி ஒரு ஆட்சி இருப்பது நமக்கு தெரியுமா...

இந்த ஆட்சியின் பெயர் என்ன? 5 வருடங்களுக்கு ஒருமுறை இங்கு ஆட்சி மாற்றம் வருமா...? எல்லா கேள்விகளும் எழுவது இயல்பு. வயது கூட கூட மாற்றங்கள் உள்ளே வரும். அது தூய சக்தியா... இல்ல தீய சக்தியா... இரண்டுமே இல்லாத வேறா...? மனிதன் எதை நோக்கி செல்கிறானோ அதற்கு தகுந்தாற்போல் அவனது உள்ளாட்சிக்கு பெயர் வரும்.

வெளியில் நடக்கும் ஆட்சி பற்றி பார்ப்போம்.

இதையும் படியுங்கள்:
தேன் கூட்டில் நடக்கும் ரகசிய அரசியல்... ராணி தேனீ எப்படி உருவாகிறது என்ற மிரள வைக்கும் உண்மை!
Our very body is greatest symbol of coalition government

பக்கத்து வீடு பக்கத்து தெரு பள்ளிக்கூடம் இவைகள் புதிய கூட்டணி ஆட்சி அமைய காரணமாக இருப்பவை. அது நட்பு வட்டம். அந்த நட்புக் கூட்டணி கல்லூரி தாண்டி ஒரே இடத்தில் வேலை வரை சிலருக்கு தொடரும். அடுத்தது காதல் கூட்டணி அது எப்போது வரும், எப்படி வரும், சரியா கணிக்க முடிக்க முடியாது. அது EXIT POLL கணிப்பு போல் இந்த வயதில் தான் வரும் வராது என்று உறுதியாக சொல்ல முடியாது.

அந்த காதல் கூட்டணி பெரும்பான்மை பெற்று கல்யாணத்தில் முடிந்தால் சந்தோஷமான இல்வாழ்க்கை ஆட்சி தொடரும். இந்த ஆட்சி தொடர வெளியில் இருந்து இருவரின் பெற்றோர்கள் நிபந்தனையற்ற ஆதரவு தர வேண்டும். சமூகம் தான் எதிர்க்கட்சி.

சமூகம் என்பது எத்தனை உறுப்பினர்களை கொண்டது? நம் அக்கம் பக்கம், உறவினர்கள், நண்பர்கள் இவர்களை கணக்கில் எடுத்தால் 50 அல்லது அதற்கும் குறைவாகவும் இருக்கலாம்.... கூடவும் இருக்கலாம்.

இந்த எதிர்கட்சிகள் அடிக்கடி வெளிநடப்பு செய்யாது. வீட்டிலும் வெளியிலும் நமது செயல்பாடுகளை விமர்சனம் செய்பவை. அந்த விமர்சனங்களால் அதிரடியாக ஒன்றை தொடர்ந்து செய்வது அல்லது பின்வாங்குவது நடக்கலாம்.

கூட்டணி ஆட்சிக்கு சிறந்த உதாரணம் கிரிக்கெட். சுனில் கவாஸ்கர்-ஸ்ரீகாந்த் கூட்டணி 80களில் அதிரடியான தொடக்கத்தை தந்து இந்திய அணி வெற்றி பெற உதவினார்கள். ஒருவர் அதிரடி ஆட்டம் ஒருவர் தடுத்தாடும் ஆட்டம். இன்னொரு ஜோடி விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா. இந்த இருவரும் இந்திய அளவில் சிறந்த ஜோடி/சிறந்த கூட்டணி ஆட்சியில் ஒரு நாள் சர்வதேச போட்டியில் 5000க்கு மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார்கள்.

திரையுலகில் கூட்டணி ஆட்சியால் அபார வெற்றி பெற்றது விஸ்வநாதன்-ராமமூர்த்தி கூட்டணி ஆட்சி. சங்கர்-கணேஷ் , இயக்குனர்கள் வரிசையில் கிருஷ்ணன்-பஞ்சு, பாரதி-வாசு (சில வருடங்கள்) எடிட்டர்கள் பி.லெனின்-வி.டி., விஜயன் - இப்படி கூட்டணி ஆட்சி அமைத்து வெற்றி கண்ட சிலரையும் சொல்லலாம்.

எழுத்தாளர் சுபா இன்னொரு உதாரணம்... சுரேஷ்-பாலகிருஷ்ணன். இவர்கள் கூட்டணி பல நாவல்களை தந்துள்ளது. கோ, ஐ உட்பட பல திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார்கள். மேலும் பாரதிராஜா-பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன்-இளையராஜா என்று கூட்டணி ஆட்சி அமைத்து வெற்றி கண்டவர்களைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

பெண் எழுத்தாளர்கள் இந்துமதி, சிவசங்கரி இருவரும் இணைந்து 80களில் வார இதழ் ஒன்றில் 'இரண்டு பேர்' என்ற தலைப்பில் ஒரு தொடர்கதை எழுதியுள்ளார்கள்.

இதையும் படியுங்கள்:
பஞ்சாங்க கணிப்பு பலித்தது: தமிழகத்தில் உருவானது கூட்டணி ஆட்சி! அடுத்தடுத்து நடக்கும் அரசியல் திருப்பங்கள்..!!
Our very body is greatest symbol of coalition government

கூட்டணி ஆட்சி என்பது முடிவே இல்லாதது. பூக்களோடு வண்டுகளும் , மரங்களோடு பறவைகளும், நீர் நிலைகளோடு மீன்களும், பழங்களோடு அணில்களும் கூட்டணி ஆட்சி நடத்திக் கொண்டுதான் இருக்கும்.

நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ இதுதான் நிரந்தரம்.

logo
Kalki Online
kalkionline.com