குழந்தைகளின் பள்ளி செலவுகள் போன்றவை அதிகரித்து வருவதால், இந்தியா போன்ற நாடுகளில் தாய்மார்களின் கருவுறுதல் விகிதம் குறைந்து வருவதாக ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதியம் சமீபத்தில் அறிவித்துள்ளது.
மேலும், குழந்தை வளர்ப்பதால் ஏற்படும் கடுமையான செலவு, பொருத்தமான துணை இல்லாதது போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி பல நூறு மில்லியன் மக்கள் தாங்கள் விரும்பும் எண்ணிக்கையிலான குழந்தைகளை பெற்றுக்கொள்வவதில்லை எனவும் ஐ.நா. கூறியுள்ளது.
14 நாடுகளில் இருந்து 14,000 பேரிடம் அவர்களுடைய கருவுறும் நோக்கம் குறித்து UNFPA ஆய்வு ஒன்றினை நடத்தியது. ஐந்து பேரில் ஒருவர், தாங்கள் விரும்பும் எண்ணிக்கையிலான குழந்தைகளை பெற்றுக்கொள்ளமாட்டோம் என அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆய்வு நடத்தப்பட்ட தென் கொரியா, தாய்லாந்து, இத்தாலி, ஹங்கேரி, ஜெர்மனி, ஸ்வீடன், பிரேசில், மெக்சிகோ, அமெரிக்கா, இந்தியா, இந்தோனீசியா, மொரோக்கோ, தென்னாப்ரிக்கா, நைஜீரியா ஆகிய நாடுகள் உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டிருக்கின்றன
நடுத்தர மற்றும் அதிக வருவாய் கொண்ட நாடுகள்,குறைந்த மற்றும் அதிக கருவுறுதல் விகிதம் கொண்ட நாடுகளின் கலவை அவை. யுஎன்எஃப்பிஏ (UNFPA) இளம் வயது வந்தோரிடமும், தங்களது இனப்பெருக்க காலத்தை கடந்தவர்களிடமும் இந்த ஆய்வினை நடத்தியது.
யுஎன்எஃப்பிஏ அமைப்பின் தலைவரான டாக்டர் நடாலியா கானெம், "கருவுறுதல் விகிதத்தில் உலகம் முன்னெப்போதும் இல்லாத சரிவை தொடங்கியிருக்கிறது," என்கிறார்.
ஆய்வு நடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை விரும்புகின்றனர். கருவுறுதல் விகிதம் குறைய பெருமளவு காரணம் தாங்கள் விரும்பும் குடும்பத்தை உருவாக்க முடியவில்லை என பலரும் நினைப்பதுதான் என்கிறார் அவர்.
ஐரோப்பாவில் கருவுறும் விருப்பங்கள் குறித்து ஆய்வு நடத்தியவரும், பின்லாந்து அரசுக்கு மக்கள்தொகை கொள்கை குறித்து ஆலோசனை வழங்குபவருமான மக்கள் தொகை ஆய்வாளர் அன்னா ராட்கெர்ச் "ஒட்டுமொத்தமாக, கருவுறுதல் நோக்கங்களை மிஞ்சுவதை விட அதைவிட குறைவாக எட்டுவதே அதிகமாக உள்ளது," என்கிறார்.
தாங்கள் விரும்பியதை விட குறைவாகவே குழந்தை பெற்றுக்கொண்டதாக ஆய்வில் பங்கேற்றவர்களில் 50 வயதுக்கு மேற்பட்டோரில் 31%பேர் கூறியிருக்கிறார்கள்.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் 50 நாடுகளில் மேற்கொள்ளப்படவுள்ள ஆய்வின் முன்னோடியாக இந்த ஆய்வு அமைந்துள்ளது.. அனைத்து நாடுகளிலும், 39% பேர் குழந்தை பெற்றுக்கொள்வதை நிதி குறைபாடுகள் தடுப்பதாக தெரிவித்தனர்.
அதிகபட்ச பதில் கொரியாவிலும்(58%), குறைந்தபட்சம் ஸ்வீடனிலும்(19%) பதிவாகியுள்ளன. மொத்தத்தில், 12% பேர் மட்டுமே தாங்கள் விரும்பிய எண்ணிக்கையில் குழந்தைகள் பெற்றுக்கொள்ளாததற்கு கருவுற இயலாமை– அல்லது கருவுறுதலில் சிரமம் என்பதை காரணமாக சொல்லியிருந்தனர். ஆனால் இந்த எண்ணிக்கை தாய்லாந்து(19%), அமெரிக்கா(16%), தென்னாப்பிரிக்கா (15%), நைஜீரியா(14%) மற்றும் இந்தியா(13%) உள்ளிட்ட நாடுகளில் அதிகமாக இருந்தது.
"குறைந்த கருவுறுதல் விகித பிரச்சனைகள் குறித்து [ஐநா] உண்மையில் முழுமையாக முன்னெடுத்துள்ளது இதுதான் முதல்முறை," என்கிறார் ஹாங்காங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் மக்கள் தொகை ஆய்வாளர் ஸ்டூவர் கீடெல்-பாஸ்டென்.
40 வருடங்களுக்கு முன்பு சீனா, கொரியா, ஜப்பான், தாய்லாந்து, துருக்கி ஆகிய நாடுகள் எல்லாம் தங்களது மக்கள் தொகை அதிகமாக இருப்பதாக கவலைப்பட்டன, 2015ஆம் ஆண்டில் அவர்கள் கருவுறுதல் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்பினர்.
குழந்தைகள் பெற்றுக்கொள்வதற்கு பொருளாதாரத்தை விட பெரிய தடையாக இருப்பது போதிய நேரமின்மைதான் என்பதை யுஎன்எஃப்பிஏ (UNFPA) கண்டறிந்தது. இது மும்பையில் இருக்கும் நம்ரதாவுக்கு உண்மையாக் தோன்றுகிறது. அவர் தனது அலுவலகத்திற்கு சென்று வருவதற்கு தினமும் குறைந்தது நான்கு மணி நேரத்தை செலவிடுகிறார்.
அவர் வீடு திரும்பும்போது முற்றிலும் சோர்வடைந்திருக்கிறார், ஆனால் தனது மகளுடன் நேரத்தை செலவிட விரும்புகிறார். அவரது குடும்பத்திற்கு அவ்வளவு தூக்கம் கிடைப்பதில்லை.. எனவே அவர் ஒரே ஒரு குழந்தை மீது மட்டும் கவனம் செலுத்தப் போவதாக கூறுகிறார்.
உலகெங்கும் கூட்டுக் குடும்பமுறை மறைந்து வருகிறது. இந்நிலையில் அணுக்குடும்ப முறையில் இன்றைய தலைமுறையினர் தங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தாலே போதும். இருக்கும் விலைவாசி ஏற்றத்தில் அந்த ஒரு குழந்தையை படிக்க வைத்து ஆளாக்குவதே அவர்களுக்கு பெரிய சவலாக உள்ளது. இந்நிலையில் பல இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ளவே தயாராக இல்லை என்பதே எதார்த்தமான உண்மை. இதனால், பழங்காலத்தில் வழக்கில் இருந்த பல உறவுமுறைகள் காணாமல் போய் வருவதை நம்மால் அன்றாட வாழ்வில் பார்க்க முடிகிறது. இவையெல்லாம் சமூகத்தை எங்கே அழைத்துச் செல்லும் என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.