'கோடா நூலகம்'?! - உலகின் விசித்திரமான நூலகங்களைப் பார்ப்போமா?

இலக்கியத்தை எளிதாக மக்கள் அணுகுவதை ஊக்குவிக்க, உலகம் முழுவதிலுமிருந்து, வழக்கத்திற்கு மாறாக, அற்புத நூலகங்கள் உருவாகுகின்றன.
கோடா நூலகம், இந்தியா
கோடா நூலகம், இந்தியாThe New Indian Express
Published on
kalki strip

நீங்கள் பல நூலகங்களுக்குச் சென்று வாசிப்பு அனுபவத்தைப் பெற்றிருப்பீர்கள். நூல்களைக் கடனாக வாங்கியும் இருப்பீர்கள். ஒரு குதிரை முழு நூலகமாகவே உங்களை நோக்கி விரைகிறது என்றால், நம்புவீர்களா?

கோடா நூலகம், இந்தியா

குமாவோனில், “கோடா நூலகம்” என்ற பெயர் தாங்கிய ஒரு பதாகையை கழுத்தில் சுமந்து கொண்டு விரையும் குதிரைக் குட்டிகளைப் பார்ப்பது சகஜமான ஒன்று.

குழந்தைகளிடையே வாசிப்பைப் பழக்கப்படுத்தும் நோக்கத்துடன், எளிதில் ஈர்க்கக் கூடிய வகையில், இதைநைனிடாலில் வசிக்கும் சுபம் பதானி தொடங்கியுள்ளார்.

பல்வேறு காரணங்களால் தங்களது கல்வியைத் தொடர முடியாத பெண்களும் இந்நூலகத்தைப் பயன்படுத்துகிறார்கள். உள்ளுர் மக்களும், தன்னார்வலர்களும் பதானிக்கு குதிரைகளையும், புத்தகங்களையும் நன்கொடையாக கொடுத்து உதவுகிறார்கள்.

போர்த் தொட்டி, அர்ஜென்டினா

அர்ஜென்டினாவைச் சேர்ந்த ரவுல் லெமசாஃப், 1979- ஆம் ஆண்டு ஃபோர்டு பால்கன் காரை, பியுனஸ் அயர்ஸ் மற்றும் அருகில் உள்ள நகரங்களின் தெருக்களில் ஓட்டுகிறார். இந்தக் கார் தொட்டி வடிவ நடமாடும் நூலகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. புத்தகங்களை இலவசமாக விநியோகிக்கிறார்.

இதையும் படியுங்கள்:
உலகத் தரத்தில் ஓர் நூலகம் மதுரைக்கே ஓர் மணி மகுடம்!
கோடா நூலகம், இந்தியா

புத்தகங்களை எடுப்பதற்கும், கொடுப்பதற்கும், சேகரிப்பதற்குமாக, இந்த தொட்டி நூலகம் மக்களை மாற்றியிருக்கிறது.

இந்நூலகத்தில் புத்தகங்களை எடுத்துச் செல்வதன் மூலம் வன்முறையை கல்வியறிவாக மாற்றியிருக்கிறது.

ஆயுதங்களை எதிர்ப்பதற்கும், பிற கலாச்சாரங்களுடன் அமைதியான சகவாழ்வை ஊக்குவிப்பதற்கும் தான் இந்நூலகம் தொடங்கப்பட்டது.

ரபனா, பல்கேரியா

ரபனா என்பது பல்கேரியாவில் உள்ள ஒரு தெரு நூலகம். இது 240 மரத்துண்டுகளால் ஆன ஒரு மர அமைப்பாகும். இதன் அமைப்பு தனித்துவமான கடல் நத்தை வடிவத்தில் அனைவரையும் ஈர்க்கும் படியாக இருக்கிறது.

Beach Library China
Beach Library China img credit - archdaily.com

கடற்கரை நூலகம், சீனா

சீனாவின் கின்ஹூவாங்டாவோவில் உள்ள கடற்கரை நூலகம், சாலை வசதி இல்லாத தனிமைப் படுத்தப்பட்ட கடற்கரையில் அமைந்திருப்பதால், உலகின் மிகவும் தனிமையான நூலகம் என்று அழைக்கப்படுகிறது. மணல் நிறைந்த கடல் வழியாக நடந்து சென்ற பிறகு இந்த தனிமையான கட்டிடத்தை அடையலாம். இதன் பின்னணியில் உள்ள கருதுகோல் கடலுடன் ஒரு தொடர்பை வளர்ப்பதாகும்.

பிப்லியோ பர்ரோஸ், கொலம்பியா

ஒரு கழுதை உங்களுக்கு ஒரு புத்தகத்தைப் பெற்றுத் தரும் என்றால், நம்ப முடிகிறதா? கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்பீர்கள். ஆனால், பிப்லியோ பர்ரோஸ் விஷயத்தில் அப்படி சொல்ல முடியாது.

கொலம்பியாவில், ஆசிரியரான லூயிஸ் சோரியானா, வார இறுதி நாட்களில் தனது கழுதைகள் அல்லது பிப்லியோ பர்ரோக்களை கிராமப் புறங்களுக்கு அழைத்துச் செல்வது புத்தக பிரியர்களிடையே படு பிரபலம்.

நூலகக் கப்பல், நார்வே

இது புத்தக வாசிப்பு அனுபவத்தை கப்பலுக்குள் எடுத்துச் செல்கிறது. இது ஹார்ட்லாந்துக்கும் மோரே ஓக்ரோம்ஸ்பாலுக்கும் இடையில் மிதக்கும் எபோஸ் கப்பல். மிதக்கும் நூலகம் அல்லது கப்பல் நூலகமாக செயல்படுகிறது. இந்நூலகத்தில் 6000-க்கும் மேற்பட்ட புத்தகங்களை கொண்டுள்ளது. சுற்றுப்பயணங்களைின் போது 7000-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் அடுக்கி வைக்கப்படும்.

இதையும் படியுங்கள்:
128 ஆண்டுகள் பழமையான, 50,000 புத்தகங்கள் கொண்ட நவீன நூலகம் எங்கு உள்ளது தெரியுமா?
கோடா நூலகம், இந்தியா

ஒட்டக நூலகம், கென்யா

கென்யா தேசிய நூலக சேவையும், எழுத்தறிவைப் பரப்புவதற்கும் இது போன்ற பாதையை பின்பற்றுகிறது. இவர்களின் விருப்பமான வாகனங்கள் “பாலைவனக் கப்பல்கள்“ என்று அழைக்கப்படும் ஒட்டகங்கள். சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பெட்டிகள் கிராமப்புற மற்றும் நாடோடி பள்ளிகளுக்கு புத்தகங்களை மட்டுமல்ல, வகுப்பறைகளுக்கு தேவையான கூடாரங்கள், பாய்கள் கொண்டு வருகின்றன.

பைக் நூலகம், அமெரிக்கா

இந்த முழு சேவை பயண நூலகம் கார்னகி ஸ்டவுட் பொது நூலகத்தின் ஒரு பகுதி. இந்த பைக் நூலகம் புதிய வெளியீடுகள், டிவிடி, குழந்தைகள் புத்தகம் என பல்வேறு புத்தகங்களை, பல்வேறு பூங்காக்களுக்கு பைக்கில் எடுத்துக் கொண்டு செல்கின்றார்கள்.

தோட்ட நூலகம், இஸ்ரேல்

இந்த நூலகம் அகதிகள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக அமைக்கப்பட்டது. புத்தகங்கள் ஒரு அடிப்படை மனித உரிமை என்ற நம்பிக்கையைச் சுற்றியே கட்டமைக்கப்பட்டுள்ளது. புகலிடம் கோருவோர் அதிகம் வசிக்கும் பகுதியில் இது அமைந்துள்ளது.

Jerusalem Street Library
Jerusalem Street Libraryimg credit - english.news.cn

பேருந்து நிறுத்த நூலகம், ஜெருசலேம்

பயணத்தின் போது ஒரு வாசிப்பு அனுபவத்தைத் தருவதற்கென்றே, ஜெருசலேமில் பஸ் ஸ்டாப் நூலகம் தயாராக உள்ளது. பேருந்துக்காக ஒருவர் சீக்கிரம் வந்திருக்கலாம் அல்லது பேருந்து தாமதமாக வரலாம். இந்த இடைவெளி நிமிடங்களை அறிவால் நிரப்ப இந்நூலகம் உதவி செய்கிறது. ஒரு நிறுத்தத்தில் நூல்களை எடுத்து, பயணத்தின் போது வாசித்து விட்டு இறங்க வேண்டிய நிறுத்தத்தில் நூல்களை ஒப்படைத்து விடலாம்.

இலக்கியத்தை எளிதாக மக்கள் அணுகுவதை ஊக்குவிக்க, உலகம் முழுவதிலுமிருந்து, வழக்கத்திற்கு மாறாக, இப்படி அற்புத நூலகங்கள் உருவாகுகின்றன. ஏனென்றால், இலக்கிய வளமே... நாட்டின் வளம்! என்பதை மறுக்கத்தான் முடியுமா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com