தேர்தல் ஆணையத்தின் வசமுள்ள சின்னங்கள் ஆணையத்தின் வேலைவாய்ப்பில் ஒரு வரைவாளர் எம்.எஸ்.சேத்தி என்பவரால் தயாரிக்கப்பட்டது. அவர் 1950 இல் கமிஷனில் சேர்ந்தார் மற்றும் 1992 இல் ஓய்வு பெற்றார்.
இந்தியா சுதந்திரத்திற்குப் பிறகு முதல் தேர்தலை திட்டமிடும்போது அதிகாரியுடன் அமர்ந்து விவாதத்தின் போது வரும் மற்றும் வாக்காளர்கள் எளிதில் நினைவு வைத்து அடையாளம் காணக்கூடிய தினசரி உபயோக பொருட்களின் பென்சில் படங்களை வரைவார். சேத்தியின் ஓய்வுக்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு பிறகு கமிஷன் அவரது நூறு ஓவியங்களின் தொகுப்பை தொகுத்தது. இது இன்று இலவச சின்னங்கள் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு பொது தேர்தலின் போதும் இந்த பட்டியல் நாடுமுழுவதும் பரப்பப்பட்டு நிரந்தர சின்னம் வழங்கப்படாதவர்களுக்கு அதில் ஒன்று ஒதுக்கப்படுகிறது. கட்சியின் பிளவு அல்லது கட்சியின் பெயர் அழகான கொள்கை மாற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் கட்சி சின்னங்கள் மாற்றப்படுகின்றன. வாக்கு சீட்டு பயன்படுத்திய காலம் முதல் மின்னணு வாக்குப்பதிவு நடைபெறும் தற்காலம்வரை வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்குவது என்பது வழக்கமாக இருந்து வருகிறது.
எழுத்தறிவில்லாதவர்கள் பாமரர் உட்பட சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் தேர்தல் நடைமுறையில் பங்கேற்க ஊக்குவிக்கும் பொருட்டு முதல் பொது தேர்தலில் இருந்து சின்னங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பான்மையான வாக்காளர்கள் தாங்கள் வாக்களிக்கும் தருணத்தில் வேட்பாளரின் பெயரை விட அவருடைய சின்னத்தை வாக்குப்பதிவு இயந்திரத்தில் தேடுபவர்களாக இருக்கிறார்கள். வேட்பாளரின் பெயர் அல்லது படத்தைவிட அவர்கள் போட்டியிடும் கட்சியின் சின்னத்தை கண்டறிந்து வாக்களிக்கும் வாக்காளர்கள் நாட்டில் கணிசமாக உள்ளனர்.
வாக்கு சதவீதத்தை உயர்த்தி தேசிய மாநில கட்சியாக அங்கீகாரம் பெறுவதற்கு அரசியல் கட்சிகள் முனைப்பு காட்டுவதற்கும் தங்களுக்கு என தனி சின்னங்களை தக்க வைத்துக் கொள்வதற்கும் முக்கியத்துவம் வாய்ந்த சின்னத்தை பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் மூன்று முறை மாற்றி உள்ளனர். பாரதிய ஜனதா கட்சியின் தாமரை சின்னமும் ,காங்கிரஸ் கட்சியின் கைச்சின்னமும் அந்தந்த அமைப்புகள் தேர்தல் களம் கண்ட மூன்றாவது சின்னம் ஆகும்.
முதல் நான்கு பொதுத்தேர்தலில் இரட்டைக் காளை சின்னத்தில் காங்கிரஸ் போட்டியிட்டது. 1971 இல் நடந்த ஐந்தாவது மக்களை தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் இரண்டு அணிகளாக பிரிந்தது. மொரார்ஜி தேசாய் காமராஜர் உள்ளிட்ட தலைவர்கள் அங்கம் வகித்த நிஜ லிங்கப்பா தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ் இரட்டைக் காளை சின்னத்தை தக்கவைத்தது. அந்த தேர்தலில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அணிக்கு பசுவும் கன்றும் சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்திரா காங்கிரஸ் தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. 1975 இல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவசரநிலை பிரகடனம் செய்த பின்னர் ஓராண்டு தாமதமாக 1977 இல் நடைபெற்ற ஆறாவது மக்களவைத் தேர்தலில் இருந்து காங்கிரஸ் கை சின்னத்தில் போட்டியிட்டு வருகிறது.
முன்னோடி கட்சியாக விளங்கியது பாரதிய ஜனசங்கம் 1951 முதல் 1977 வரை பாரதிய ஜனசங்கம் விளக்கு சின்னத்தில் போட்டியிட்டது. 1977 தேர்தலில் இந்திரா காங்கிரஸுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து ஜனதா கட்சி உருவாக்கிய போது ஏர் உழவன் சின்னம் ஒதுக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 1980இல் ஜனதா கட்சியில் பிளவு ஏற்பட்டது. பாரதிய ஜனதா கட்சி தனியாக உருவானது. அப்போது முதல் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் சின்னமாக தாமரை உள்ளது.
முதன் முதலில் 1951-52 ஆம் ஆண்டு பொது தேர்தலுக்காக கட்சி சின்னங்கள் உருவாக்கப்பட்டன என்பது தனி சிறப்பு. முதலில் பெட்டியில் தான் சின்னங்களின் படம் வரையப்பட்டது பிறகு நிறைய தேசிய கட்சிகள் மாநில கட்சிகள் உருவெடுக்க ஆரம்பித்ததால் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு பெட்டி என்பது தேர்தல் ஆணையத்துக்கு கூடுதல் செலவு என கருதியதால் பெட்டியில் சின்னங்களை பொரிப்பதற்கு பதிலாக சீட்டுகளில் பல சின்னங்கள் அச்சிட்டது. அதன்பின் மக்கள் தங்கள் வாக்குகளை மை கொண்டு சின்னத்தில் முத்திரை குத்தி பெட்டிகளில் செலுத்தினர். பின் அந்த சீட்டுகள் எண்ணப்பட்டன இப்படித்தான் இந்தியாவில் சின்னங்கள் உருவானது.