
அப்போதைய பா.ஜ.க பிரதமர் வாஜ்பாய் அமெரிக்கா சென்றபோது அந்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அந்நாட்டின் உட்கட்டமைப்பு மற்றும் விரைவாகச் செல்லக்கூடிய சாலைகள்தான் என்பதை அறிந்து வந்து நம்நாட்டில் செயல்படுத்தியதுதான் நான்கு வழி மற்றும் ஆறு வழிச்சாலைத் திட்டங்கள்.
ஆனால், எதற்காக சுங்கச்சாவடிகள் அமைத்து வாகனங்களில் பணம் பெற வேண்டும் என்ற கேள்வி நம்மிடம் நீண்ட நாட்களாக இருந்து வருகின்றன. இதற்கான காரணத்தை ஒரு வாகன ஓட்டுனர் கூறுவதைக் கேட்போம்.
நான் ஒரு லாரி உரிமையாளராக முன்பு இருந்தேன். ஓரிடத்திலிருந்து ஒரு மில்லிற்கு தினமும் 15 லாரி மணல் அனுப்புவேன். அந்தப் பாதை குண்டும் குழியும் இருக்கும் தார்ச்சாலைகள் விரைவில் மோசமடைந்துவிடும். எனது ஒரு லாரி மாட்டி கிரவுன் அடிபட்டால் நான் ஆயிரங்களில் செலவு செய்ய நேரிடும்.
அதனால் வேலை ஆரம்பிப்பதற்கு முன்பே குண்டு குழிகளை எனது சொந்தப் பணத்தில் ஓரளவு சரிசெய்தேன், ஓரளவிற்கு தங்குதடையில்லாமல், பெருத்த சேதம் இல்லாமல் எனது வேலை நடந்தது.
இதே நிலைமையில்தான் இந்தியா முழுவதும் முன்பு சாலைகள் இருந்தன. நான்குவழிச்சாலைகள் வந்தபிறகு நாம் செல்லும் வேகமும் இரு மடங்கானது, வாகன பராமரிப்புச் செலவு பாதியானது, விரைவான பாதுகாப்பான சேவை. டோல்கேட்டில் கட்டணம் தர யோசிக்கும் நமக்கு முந்தைய சாலைகளின் நினைவு வரவே வராது.
முதலில் பெருவழி சாலைகள் எவ்வாறு அமைக்கப்படுகின்றன, சுங்கச்சாவடிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஒரு தேசிய நெடுஞ்சாலையின் திட்ட மதிப்பீட்டில் மத்திய அரசு 30% to 40% முதலீடு செய்யும், மீதியை சாலைபோடும் உரிமம் பெற்ற கம்பெனி முதலீடு செய்யும். மொத்தமாக 15 வருடம் என்றால் 3 வருடங்களில் சாலை அமைத்து 12 வருடங்கள் Toll வசூல் செய்ய அரசு அனுமதிக்கும். அப்படி வசூல் செய்வதிலும் 30% to 40% த்தை NHAI க்கு செலுத்த வேண்டும்.
இது பழைய முறை. இப்படி வசூலாகும் பணத்தில் 30% to 40% பணத்தை அரசுக்கு செலுத்தக் கூடாது என்பதற்காக பல சுங்கச்சாவடிகளில் நம்பர் 2 ரசீதுகள் வழங்கப்பட்டன.
இன்று Fast Tag முறை வந்தபிறகு ஒரே நாளில் ரூ.22 கோடிக்கும் அதிகமான வசூல் என்றால் இருபது வருடங்களில் எத்தனை கோடி கொள்ளை அடிக்கப்பட்டிருக்கும் என்பதை கணக்கிட்டுப் பாருங்கள். அதனால்தான் Fasttag கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கிறது.
அதற்குப் பிறகு நடந்துவரும் மாற்றங்களையும் புரிந்து கொள்ளுங்கள் . இப்பொழுதெல்லாம் EPC, HAL என்ற முறைகளில்தான் இந்த வேலைகள் நடக்கின்றன. EPC என்றால் Engineering, Procurement and Construction. HAL என்றால் - Hybrid Analytical Logic அதாவது நீ வேலை செய்யும் அளவிற்கு பணத்தை வாங்கிக்கொள். அத்தோடு முடிந்துவிடும் என்று அர்த்தம். இனிவரும் காலங்களில் Tollgate களில் நாம் செலுத்தும் பணம் முழுமையாக நேரடியாக நமது அரசுக்கே செல்லும்.
வசதியாக, பாதுகாப்பான, வேகமான சாலைகளுக்காக நாம் செலுத்தும் சிறு தொகைக்கு மதிப்பிருக்கிறதா இல்லையா? இப்பொழுது சொல்லுங்கள்.