பாதுகாப்புக்கு உதவும் லிஃப்டுகள்: எங்கே? எப்படி?

Elevator
Elevator
Published on
Kalki Strip
Kalki Strip

உலகில்  மக்கட்தொகை கூடக்கூட கட்டிடங்களும் தங்கள் உயரத்தைக் கூட்டிக் கொள்ள ஆரம்பித்துவிட்டன. முன்பெல்லாம் 50 மாடி, 100 மாடிக் கட்டிடங்களை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மட்டுமே காண முடியும் என்ற நிலையிருந்தது.

அப்புறம் அது மெல்ல வளர்ந்து பல நாடுகளுக்கும் பரவி விட்டது. பல மாடிக் கட்டிடங்கள் அதிக அளவில் முளைக்க ஆரம்பித்து விட்டன. இது எல்லா வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளுக்கும் பொருந்தும்.

கட்டிடங்கள் ஹரிசான்டல் வளர்ச்சியிலிருந்து (Horizontal Growth) வெர்டிகல் வளர்ச்சி (Vertical Growth)க்கு மாறிவிட்டன. இரண்டிலும் சாதக, பாதகங்கள் உண்டு.

வெர்டிகல் வளர்ச்சி விரைந்து நடைபெற பெரிதும் உதவுவது லிப்ட்கள் என்றால் அது மிகையில்லை.

சமீபத்தில் சிங்கப்பூர்,மலேசியா போன்ற நாடுகளுக்குச் செல்ல நேர்ந்தது. அங்கெல்லாங்கூட அதிக உயரம்கொண்ட பில்டிங்குகள் நிறைய வந்துவிட்டன. மலேசியாவில் 36 மாடிகள் கொண்ட ஒரு உயரமான பில்டிங்கின் 12 வது மாடியில் இரண்டு நாட்கள் தங்கினோம். பன்னிரண்டாவது மாடியில் நாங்கள் தங்கியது இரண்டு பெட்ரூம்கள் கொண்ட ஒரு வீட்டில்தான். ஏர் பிஎன்பி (Air bnb) என்றும் ஹோம் ஸ்டே (Home Stay) என்றும் அழைக்கப்படும் இம்முறையில், வீட்டு உரிமையாளர்கள், ஆன்லைனில் தங்கள் வீடுகளை 2,3 நாட்களுக்குக்கூட வாடகைக்கு விடுகிறார்கள். எல்லாமே ஆன்லைன் ட்ரான்சாக்‌ஷன்தான். அப்படித் தங்கியிருக்கையில், நம்மிடம் ஒரு கார்டைக் கொடுத்து விடுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
அடடா! ஆடவரின் அழகுக்கு இப்படி ஓர் இலக்கணமா? இது தெரியாமப் போச்சே!
Elevator

லிப்டின் உள்ளே சென்றதும் அங்குள்ள சென்சாரில் நம் கார்டைக் காட்டினால் மட்டுமே லிப்ட் இயங்க ஆரம்பிக்கிறது. இயங்கும் அந்த லிப்ட் நமது ப்ளோருடன்  (12 வது மாடி) நின்று விடுகிறது. அதற்குமேல் நம்மால் செல்ல முடியாது. ஒரு வேளை 36 வது மாடிக்காரர் நம்முடன் லிப்டில் வந்தால் மட்டுமே நாம் மேற்கொண்டு செல்ல இயலும். இந்தக் கட்டுப்பாடு மேலே செல்லும்போது மட்டுமே! இறங்கி வருகையில் சாதாரண லிப்ட்கள் போலவே இயங்குகின்றன.

அதே முறை, சிங்கப்பூர் ஸ்டார் ஹோட்டலில் தங்கும்போதும் பின்பற்றப்படுவதைக் கண்டோம். அறையில் தங்குபவர்கள்கூட தேவையற்ற இடங்களுக்குச் செல்வதை இம்முறை தடுப்பதுடன், சரியான பாதுகாப்புக்கும் வழி வகுக்கிறது.

உலகின் பல நாடுகளைச் சுற்றியபோதும், வேறு எந்த நாட்டிலும் இந்தக் கட்டுப்பாட்டு முறையை லிப்டில் யாம் கண்டதில்லை. நமது நாட்டில் இனிமேல்தான்  இது புழக்கத்திற்கு வருமென்று தோன்றுகிறது. சீனாவில் இம்முறை கையாளப்படுகிறதா என்று நமக்குத் தெரியவில்லை. ஏனெனில் இன்றைய தேதியில்  விஞ்ஞான முன்னேற்றங்களைக் கையாள்வதில் அந்நாடு முதலிடம் வகித்து வருகிறது.

இதையும் படியுங்கள்:
மனிதர்களின் கண்களில் அரிதாகவே படும் 10 மர்மமான விலங்குகள்!
Elevator

எது எப்படியோ, சில விஞ்ஞான சாதனைகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. நமது வாழ்க்கையை எளிதாக்குகின்றன. அந்த வகையில் லிப்ட்கள் ஒரு வகையில் நம்மை உயரத்திற்குக் கொண்டு செல்கின்றன! உயரத்திற்குக் கொண்டு செல்வதோடு  பாதுகாப்பையும் வழங்க முற்பட்டிருக்கின்றன!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com