மனிதர்களின் கண்களில் அரிதாகவே படும் 10 மர்மமான விலங்குகள்!

Rare and mysterious animals
Rare and mysterious animals
Published on

யற்கையால் படைக்கப்பட்ட பறவை மற்றும் விலங்கினங்களில் பல, காலப்போக்கில் முற்றிலுமாக அழிந்துபோவதற்கான வாய்ப்பு உண்டு. அப்படி அழிந்துபோனவற்றில் ஒன்றைக் கூட மீண்டும் காண முடியாது. அவ்வாறு முற்றிலுமாக அழிந்துபோகவில்லையென்றாலும், சில வகை கடல்வாழ் அல்லது காடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் சில மிருகங்கள் மிகவும் அரிதாகவே கண்களில் தென்படும். அப்படிப்பட்ட 10 வகை உயிரினங்கள் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

1. சவோலா (Saola): உலகிலேயே மிகவும் அரிதாகக் கண்களில் தென்படும் அபூர்வமான விலங்கினம் சவோலா. ‘ஆசியன் யூனிகார்ன்’ என அழைக்கப்படும் சவோலா, 1992ல் முதன் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. மிகவும் வெட்கப்படும் குணமுடைய சவோலா, கடைசியாகக் காணப்பட்டது 2013ம் ஆண்டு. மனிதர்களுடனான தொடர்பை முற்றிலுமாகத் தவிர்க்க விரும்பி, அடர்த்தியான காடுகளுக்குள் ரகசியமாக வாழ்ந்து வருகிறது.

இதையும் படியுங்கள்:
மீண்டும் வந்த ‘காட்டின் தோட்டக்காரன்’: நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தென்படும் தென் அமெரிக்க டாபிர்!
Rare and mysterious animals

2. பான்கோலின் (Pangolin): இதைப் பார்க்க விரும்புபவர்கள், அடர்ந்த காடுகளுக்குள் நீண்ட தூரம் தேடிச் சென்றால் மட்டுமே காண முடியும். செதில் செதிலான உடலமைப்பு கொண்டது. எறும்புகளையும் கரையான்களையும் உணவாக உட்கொள்ளும். பான்கோலின் ஒரு தனிமை விரும்பி.

3. ஸ்னோ லியோபர்ட் (Snow Leopard): 'இமயமலை பேய்' (Ghost of Himalayas) எனவும் அழைக்கப்படுகிறது இந்த விலங்கு. சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு தனது உருவ அமைப்பை மாற்றிக்கொள்வதில் நிபுணத்துவம் பெற்றது. மலை உச்சிகளிலும், பனிப் பாறைகளுக்கு இடையேயும் அமைதியாக உலவிக் கொண்டிருக்கும்.

4. ஆயே ஆயே (Aye Aye): மிகத் தனித்துவமான தோற்றம் கொண்ட உயிரினம் இது. சிறிய முகம், பெரிய கண்கள், மெலிதான விரல்கள் கொண்டது. இரவில் நடமாடும் குணம் கொண்ட ஆயே ஆயே, மற்ற நேரங்களில் மரத்தின் உச்சியிலேயே அமர்ந்திருப்பதால் இதைக் கண்டுபிடிப்பது மிகவும் அரிது.

இதையும் படியுங்கள்:
ஆஸ்திரேலியாவில் மட்டுமே வாழும் 10 அதிசய விலங்குகள்!
Rare and mysterious animals

5. ஒகாப்பி (Okapi): வரிக்குதிரை மற்றும் ஒட்டகச் சிவிங்கி ஆகிய இரண்டும் கலந்தது போன்ற தோற்றம் உடைய விலங்கு ஒகாப்பி. இதன் வெட்கப்படும் குணம், இதை அடர்த்தியான காடுகளுக்குள் மறைந்து வாழச் செய்துள்ளது. இந்தக் காரணத்தினாலேயே இதைக் காண்பதோ கண்டுபிடிப்பதோ அரிதாகி விட்டது.

6. நார்வால் (Narwhal): 'கடல்வாழ் யூனிகார்ன்' (Unicorn of the sea) எனவும் அழைக்கப்படுகிறது நார்வால். இதற்கு தலைப் பகுதியிலிருந்து வளரும் நீண்ட சுருள் சுருளான தந்தம் உண்டு. இது பெரும்பாலான நேரம் கடலின் தரைப் பரப்புகளிலேயே வாழ்ந்து வருவதால் இதைக் காண்பது அரிதாக உள்ளது.

Rare and mysterious animals
Rare and mysterious animals

7. ஜவான் ரைனோ (Javan Rhino): இந்தோனேஷியாவில் மட்டுமே வாழ்ந்து வரும் அரிதான விலங்கு இது. இவற்றின் மொத்த எண்ணிக்கை சுமார் எண்பது என்ற  அளவிலேயே உள்ளது. மறைத்து வைக்கப்பட்டுள்ள கேமரா மற்றும் இதன் கால் தடங்கள் மூலமாகவே இதன் இருப்பை அறிந்துகொள்ள முடிகிறது.

இதையும் படியுங்கள்:
கடல் சிங்கங்கள்: உங்களால் நம்ப முடியாத 7 விஷயங்கள்!
Rare and mysterious animals

8. ஜயண்ட் ஸ்குய்ட் (Giant Squid): சமுத்திரத்தின் மிகவும் ஆழமான பகுதிகளில் வாழ்ந்து வரும் அபூர்வ மீனினம். மனிதர்கள் இதை உயிருடன் பார்ப்பதும், கேமராவில் படம் பிடிப்பதும் மிகவும் கடிமான செயல்.

9. மார்கோர் (Markhor): வனப் பகுதியில் வாழும் காட்டு ஆடு இது. சுருள் சுருளான நீண்ட கொம்புகள் கொண்டது. உயரமான, செங்குத்தான பாறைகளில் சுலபமாக ஏறக்கூடிய திறமையுடையது. மனிதர்கள் சுலபமாக செல்ல முடியாத செங்குத்தான பாறைகள் நிறைந்த சூழலில் இவை வாழ்ந்து வருவதால் இவற்றைக் காண்பது அரிது.

10. அமேசானியன் ராயல் ஃபிளைகேச்சர் (Amazonian Royal Flycatcher): மனிதர்கள் உட்புக பாதையில்லாத அடர்ந்த அமேசான் காடுகளின் உள்ளே வாழ்ந்து வரும் மிகவும் அழகிய, அபூர்வமான பறவை இது. தேர்ந்தெடுக்கப்பட்ட, சவால்களைச் சந்திக்கும் துணிவுள்ள, ஒருசில காமிராமேன்களே இப்பறவையைக் கண்டுபிடித்துப் படம் எடுத்து வந்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com