தேனி மாவட்டப் புத்தகத் திருவிழாவிற்கு கோம்பை நாய் உருவ இலச்சினை வந்தது எப்படி?

Theni Book Fair 2024
Theni Book Fair 2024
Published on

தமிழக நாய் இனங்களிலேயே மிகப் பழமையான நாய் இனம் என்றால், அது கோம்பை நாய் இனம்தான் என்கின்றனர். பல நூற்றாண்டுகளாக, பழங்குடி மக்களின் வேட்டைத் துணைவனாகவும், காட்டு விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பாதுகாப்பு விலங்காகவும் வாழ்ந்து வந்த கோம்பை நாய்கள், மான், காட்டுப் பன்றிகள், மிளா போன்றவற்றை வேட்டையாடுவதற்குப் பெருமளவில் பயன்பட்டன. தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள கோம்பை எனும் ஊரின் பெயரால் அழைக்கப்படும் இந்த நாய் இனம், கோம்பை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான தேவாரம், உத்தமபாளையம், கம்பம், போடி பகுதிகளில் அதிக அளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன.

தேனி மாவட்ட்த்தில் பேரூராட்சி நிலையில் செயல்படும் கோம்பை எனும் ஊரின் கிழக்கிலும், மேற்கிலும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி இருக்கின்றது. இந்த ஊருக்குள் வனவிலங்குகளின் ஊடுருவல் காரணமாகவும், தன் சூழல் காரணமாகவும், எப்போதும் விழிப்புடனும், பாதுகாப்பு உணர்வுடனும், இயங்கும்படியான தன்னுணர்வோடு இந்த நாய்கள் பரிணாம வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றன. தேனி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் கரும்புக்கு நல்ல பெயருண்டு. அதற்கு அடுத்த நிலையில், இந்த கோம்பை நாய்கள் இருக்கின்றன.

தேனி மாவட்டத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடத்தப்பெற்ற முதல் புத்தகத் திருவிழாவிற்குத் தனி இலச்சினை (Logo) ஒன்றினை உருவாக்க மாவட்ட நிருவாகம் முயன்ற போது, மாவட்ட அதிகாரிகள், விலங்குகள் நல ஆர்வலர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் தேனி மாவட்டத்திற்குப் பெருமை தரும் கோம்பை நாயை முதன்மையாகக் கொண்டு இலச்சினையை உருவாக்கலாம் என்று பரிந்துரைத்தனர்.

இதையும் படியுங்கள்:
'கோட்டியா' பற்றிக் கேள்விப்பட்டதுண்டா?
Theni Book Fair 2024

அப்போது, புதிதாகப் பதவியேற்றிருந்த தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி. ஷஜீவனா அவர்களும், அப்பரிந்துரையினை ஏற்றுக் கொண்டார். அதன்படி, கோம்பை நாய்க் குட்டி ஒன்று கண்ணாடி அணிந்து, புத்தகம் படிப்பது போன்ற புதிய இலச்சினை உருவாக்கப்பட்டது. இந்த இலச்சினையில் நாய்க்குட்டி உருவத்தின் கீழ், தமிழ்நாடு அரசு இலச்சினை, புத்தகத் திருவிழா - ஆண்டு, நடைபெறும் இடம், நாட்கள் போன்ற குறிப்புகளும், அதன் கீழாக “வாசிப்பை வசமாக்குவோம்” என்கிற வாசகமும் இடம் பெற்றது.

Theni Book Fair 2024
Theni Book Fair 2024

இந்த நாய்க்குட்டி இலச்சினைக்கு, தமிழ்ச் சங்கங்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடமும் நல்ல வரவேற்பு இருந்ததால், தேனி மாவட்ட இரண்டாவது புத்தகத் திருவிழா - 2024 நிகழ்விற்கும் கோம்பை நாய்க்குட்டி இலச்சினையேப் பயன்படுத்தப்பட்டது. இனி வரும் ஆண்டுகளிலும் தேனி மாவட்டப் புத்தகத்

திருவிழாக்களுக்கு இந்த இலச்சினையேத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்படும் என்று நம்பலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com