
இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன் கண் விடல் (குறள் 517)
இந்த வேலை செய்ய ஏற்ற ஆள் இவர் தான் என்று தேர்ந்தெடுக்க வேண்டும். யாருக்கு என்ன வேலையைக் கொடுப்பது என்று தெரிந்தவர் அந்த பெரிய நிறுவனத்தின் மனித வள மேலாளர். புதிதாக நிறுவனத்தில் சேர்ந்தவர்களில் யாருக்கு என்ன வேலை கொடுப்பது?
புதிதாகச் சேர்ந்தவர்களுக்கு எந்த வேலையைக் கொடுக்கலாம் என்பதைக் கண்டுபிடிப்பதற்காக அவர் தந்த யோசனைகள் இதோ:
500 செங்கற்களை ஒரு மூடிய அறையில் வைத்து விடுங்கள்.
புதிதாக வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை அந்த அறைக்குள் செல்லுமாறு கூறி, பின்னர் அந்த அறையை மூடி விடுங்கள்.
அவர்கள் அங்கேயே இருக்கட்டும். ஆறு மணி நேரம் சென்ற பின்னர் அங்கே செல்லுங்கள்.
நிலைமையை நன்கு ஆய்வு செய்யுங்கள்.
அவர்கள் செங்கற்களை எண்ணிக் கொண்டிருந்தால் அவர்களை அக்கவுண்ட்ஸ் பிரிவிற்கு அனுப்புங்கள்...
அவர்கள் எல்லா செங்கற்களையும் கன்னாபின்னாவென்று குழப்பி வைத்திருந்தால் அவர்களை எஞ்ஜினியரிங்க் பிரிவிற்கு அனுப்பி விடுங்கள்...
அவர்கள் அவற்றை ஒரு விசித்திரமான முறையில் அடுக்கி வைத்திருந்தால் அவர்களை பிளானிங் பிரிவிற்கு அனுப்பி விடுங்கள்...
அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தால் அவர்களை செக்யூரிடி பிரிவிற்கு அனுப்பி விடுங்கள்...
அவர்கள் அந்த செங்கற்களைத் துண்டு துண்டாக உடைத்திருந்தால் அவர்களை இன்ஃபர்மேஷன் தொழில்நுட்பப் பிரிவிற்கு அனுப்பி விடுங்கள்...
அவர்கள் ஒருவர் மீது ஒருவர் செங்கல்லை எறிந்து கொண்டிருந்தால் அவர்களை ஆபரேஷன்ஸ் பிரிவிற்கு அனுப்பி விடுங்கள்...
அவர்கள் சும்மா உட்கார்ந்திருந்தால் அவர்களை மனித வள பிரிவிற்கு அனுப்பி விடுங்கள்...
வெவ்வேறு விதமாக தாங்கள் அவற்றை அடுக்கிப் பார்ப்பதாகவும் இன்னும் கொஞ்சம் அதிக செங்கற்கள் வேண்டும் என்றும் அவர்கள் சொன்னால், ஆனால் ஒரு செங்கல் கூட இடத்தை விட்டு நகராமல் இருந்தால், அவர்களை விற்பனைப் பிரிவிற்கு அனுப்பி விடுங்கள்...
அவர்கள் அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டுப் போய் விட்டார்கள் என்றால் அவர்களை மேலாண்மை நிர்வாகப் பிரிவிற்கு அனுப்பி விடுங்கள்...
அவர்கள் அந்த அறையின் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் அவர்களை நீண்டகால விசேஷ திட்டமிடும் பிரிவிற்கு அனுப்பி விடுங்கள்...
அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்தால், ஒரு செங்கல் கூட இடத்தை விட்டு நகராமல் இருந்தால், அவர்களை நன்கு பாராட்டி விட்டு அவர்கள் நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பிற்கான பிரிவுக்கு அனுப்பி விடுங்கள்...
கடைசி கடைசியாக, அவர்கள் செங்கற்களுடன் சரணாகதி அடைந்து பார்க்க முடியாமலும் கேட்க முடியாத நிலையிலும் இருந்தால் அவர்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்து விடுங்கள்!
என்ன நண்பர்களே, யோசனை எப்பூடி?