அமெரிக்கா ஏன் தன் எல்லையைத் தாண்டி ராணுவத்தை நிறுத்தியுள்ளது?

america
americaImg credit: AI Image
Published on
Kalki Strip
Kalki Strip

அமெரிக்கா நீண்ட காலமாக பல்வேறு வெளிநாட்டு இராணுவ தளங்களை (overseas military bases) உபயோகித்து வருகிறது. இதன் மூலம் அதன் எல்லைகளுக்கு அப்பாலும் (beyond its borders) தங்களின் ராணுவ சக்தியை வெளிப்படுத்த முடியும் என்று ஒட்டுமொத்த உலகிற்கும் காட்டிக் கொண்டிருக்கிறது. அவர்களின் ராணுவ சக்தி, ஐரோப்பா (ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து), ஆசியா (ஜப்பான், தென் கொரியா, பிலிப்பைன்ஸ்) மற்றும் மத்திய கிழக்கு (கத்தார், பஹ்ரைன், குவைத், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்) போன்ற பகுதிகளில் பரவியுள்ளன.

தென் கொரியாவில் உள்ள கேம்ப் ஹம்ப்ரேஸ் (Camp Humphreys) மற்றும் கத்தாரில் உள்ள அல் உதெய்ட் விமான தளம் (Al Udeid Air Base) போன்றவை அமெரிக்காவின் முக்கிய தளங்களாக செயல்படுகின்றன. இதுதான் நெருக்கடிகளின்போது விரைவாக படைகள் தேவைப்படும் நாடுகளில் நிலைநிறுத்த அனுமதிக்கின்றன. இந்த உலகளாவிய அணுகல்தான் அமெரிக்காவை சுயமாகவோ அல்லது நட்பு நாடுகளுடன் இணைந்தோ உலகின் பல போர்களில் பங்கேற்பதை எளிதாக்குகிறது.

எதனால் இவர்கள் பிற நாடுகளின் சண்டையில் மூக்கை நுழைகிறார்கள்?

வெளிநாட்டில் இராணுவ வளங்களை இயக்குவதற்கு பின்னால் உள்ள காரணம் அமெரிக்காவின் பன்முகத்தன்மையே. முக்கியமாக இந்த தளங்கள் அமெரிக்காவிற்கு எதிரானவர்களை தலை தூக்க தடுக்கின்றன. அவர்களின் நட்பு நாடுகளுக்கு உதவுகின்றன மற்றும் பெரிதாகபோகும் சண்டைகளை தடுக்க அவர்களால் முன்கூட்டியே விரைவாக செயல்பட வைக்கின்றன. இந்த விஷயங்கள் ஒரு மனிதாபிமான பணிகளாகவும், பேரிடர் நிவாரணமாகவும் மற்றும் உலக அமைதி காக்கவும் என்று அவர்களால் கூறப்படுகிறது.

பொருளாதார ரீதியாக இந்த யுத்த நேரங்களில் பல நாடுகள் பெரும்பாலும் அமெரிக்காவுடன் செலவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன அல்லது அதற்கான தளவாட ஆதரவை (logistical support) வழங்குகின்றன. இது அமெரிக்க நாட்டின் வரி செலுத்துவோர் (People’s tax) மீதான சுமையை குறைக்கிறது.

இதையும் படியுங்கள்:
நடுக்கடலில் தத்தளித்த குடும்பம்... 4 கி.மீ கடலில் நீந்தி ஒற்றை ஆளாக மீட்ட 13 வயது சிறுவன்!
america

இந்த சண்டையில் இழப்புகள் ஏற்படும்போது அது உபகரணங்களாக இருந்தாலும் சரி அல்லது பணியாளர்களாக இருந்தாலும் சரி. அமெரிக்கா அதை பாதுகாப்பு பட்ஜெட்டுகள் (defense budgets), கூட்டணி பங்களிப்புகள் மற்றும் பாதுகாப்பு பொருட்களை தரும் நிறுவனங்களின் நீண்டகால ஒப்பந்தங்கள் மூலம் நிர்வகிக்கிறது. இன்னும் இதன் இழப்பீடு அவர்களின் புவிசார் அரசியல் செல்வாக்கு (geopolitical influence), உலக நாடுகளுடான வர்த்தகம் மற்றும் அவர்களால் வலுப்படுத்தப்பட்ட நாடுகளுடான கூட்டணிகள் (strengthened alliances) போன்ற வழிகளில் வருகிறது.

அவர்களின் ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு என்ன கிடைக்கிறது?

வெளிநாடுகளில் பணியமர்த்தப்பட்ட அமெரிக்க வீரர்களுக்கு நன்மைகளாக. அவர்கள் ஆபத்து ஊதியம் (hazard pay), வரி விலக்குகள், வீட்டுவசதி கொடுப்பனவுகள் (housing allowances) மற்றும் மேம்பட்ட சுகாதார பாதுகாப்புக்கான (advanced healthcare) அணுகலைப் பெறுகிறார்கள். பலர் இதுபோன்ற பன்னாட்டு நடவடிக்கைகளில் உலக அனுபவத்தைப் பெறுகிறார்கள். தங்களின் உலக ராணுவ அறிவை வளர்த்துக் கொள்கிறார்கள்.

இதோடு வெளிநாடுகளில் புரியும் சேவை, அவர்களின் பதவி உயர்வுகளை துரிதப்படுத்துகிறது மற்றும் GI மசோதா (GI Bill) போன்ற திட்டங்கள் மூலம் பல கல்வி நன்மைகளை வழங்குகிறது. இதனால் அவர்களுக்கு கிடைக்கும் நிதி ஊக்கத்தொகைகளுக்கு அப்பால் வெளிநாடுகளில் பணியாற்ற நிறுத்தப்பட்டுள்ள வீரர்கள் பெரும்பாலும் ஒரு தனிப்பட்ட கௌரவத்தையும் தங்கள் வாழ்நாள் முழுக்க அனுபவிக்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com