நமது உடலுக்கு பல வகையான வைட்டமின்கள் அவசியம் தேவை. அதில் முக்கியமானது வைட்டமின் பி12. இது நரம்புகளின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் இரத்த சிவப்பணுக்கள் உருவாவதற்கும் மிகவும் அவசியம். இதை உணவின் மூலமே பெற முடியும். வைட்டமின் பி12ன் அவசியம் மற்றும் அவை எந்த உணவுகளில் நிறைந்துள்ளன என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
வைட்டமின் பி12ன் அவசியம்: வைட்டமின் பி12 என்பது நீரில் கரையக்கூடிய ஒரு வைட்டமின் ஆகும். ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு வைட்டமின் பி12 மிகவும் இன்றியமையாதது. நமது தலை முடி கேரட்டின் எனப்படும் புரதத்தால் ஆனது. மயிர்க்கால்களின் அடிப்பகுதியில் உள்ள பாப்பிலாவில் இரத்த நாளங்கள் உள்ளன. அவை முடி வளர்ச்சிக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. மனித உடல் வைட்டமின் பி12ஐ உற்பத்தி செய்யாது. அதை உணவில் இருந்துதான் பெற முடியும்.
சிவப்பு இரத்த அணுக்கள், வெள்ளை இரத்த அணுக்கள் மற்றும் பிளேட்லெட்டுகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு இது உதவுகிறது. மனச்சோர்வுக்கு மிகச் சிறந்த மருந்தாக இது விளங்குகிறது. ஞாபக சக்தி மேம்பாட்டிற்கு உதவுகிறது. வயதானவர்களுக்கு ஏற்படும் ஞாபக மறதியைக் குறைக்க மிகவும் உதவும். அதேபோல, படிக்கும் மாணவர்களுக்கு ஞாபக சக்தி மிகவும் அவசியம். அவர்களுக்கும் வைட்டமின் பி12 மிகவும் தேவைப்படுகிறது.
இது உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்க உதவுகிறது. பொதுவாக, வயதானவர்களுக்கு எலும்புகள் பலவீனமாக மாறி உடையக்கூடியதாக மாறிவிடும். அவர்களுக்கு இந்த வைட்டமின் பி12 மிகச்சிறந்த மருந்தாக விளங்குகிறது. இது சிறந்த மூளை ஆரோக்கியத்திற்கும், அறிவாற்றல் செயல்பாட்டிற்கும் மிகவும் அவசியம்.
வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகள்: தசைகள் மற்றும் மூட்டுகள் பலவீனமடைதல், கை கால்களில் உணர்வின்மை, வயிற்றுப்போக்கு, குமட்டல், சோர்வு அல்லது ஆற்றல் இழப்பு, பசியின்மை, படபடப்பு, எரிச்சல் போன்றவை.
வைட்டமின் பி12 நிறைந்த உணவுகள்:
வாழைப்பழங்கள்: மிகவும் எளிதாகக் கிடைக்கக்கூடிய வாழைப்பழங்களில் பொட்டாசியம், நார்ச்சத்து நிரம்பியுள்ளன. இது மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்னைகளைப் போக்க உதவுகிறது. மேலும், இதில் வைட்டமின் பி12 நிறைந்துள்ளது.
ஆப்பிள்கள்: இவற்றிலும் பி12, ஆன்டி ஆக்சிடென்ட்கள், பாலிபினால்கள் நிரம்பியுள்ளன. இவை நிறைந்த ஊட்டச்சத்துக்கள் கொண்டவை. தினசரி ஒரு ஆப்பிள் வயதானவர்களுக்கும் படிக்கும் மாணவ, மாணவியருக்கும் மிகவும் அவசியம்.
அவுரி நெல்லிகள்: பிரிரேடிக்கல்களால் ஏற்படும் அழற்சி மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திற்கு எதிராகப் போராட உதவுகின்றன. சரும சுருக்கங்கள், சரும தடிப்பு அழற்சி போன்றவற்றின் அபாயத்தை குறைக்க இது உதவுகிறது.
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் பி12, ஆக்சிடென்ட்கள், வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. மாம்பழங்ளில் அதிக அளவு வைட்டமின் பி12 நிறைந்துள்ளது. வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவையும் இதில் உள்ளன. கண் பார்வை சக்தியும், நோய் எதிர்ப்பு சக்தியும் இதன் மூலம் கிடைக்கிறது.
காய்கறிகள்: பீட்ரூட் மற்றும் கீரைகளில் பசலைக் கீரை வைட்டமின் பி12ன் சிறந்த மூலமாகவும், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் ஏ, சியும் இதில் நிறைந்துள்ளன.
உருளைக்கிழங்கு: மலிவாகவும் எளிதாகவும் கிடைக்கக்கூடிய உருளைக்கிழங்கு வைட்டமின் பி12 நிறைந்தது. மேலும், இதில் பொட்டாசியம், சோடியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
அசைவ உணவுகளில் சிவப்பு இறைச்சி, மீன்களில் மட்டி மற்றும் மத்தி ஆகிய மீன்களிலும், முட்டைகளிலும், பால், கோழி போன்றவற்றிலும் பி12 நிறைந்துள்ளது.