

ரயிலில் பயணிக்கும் போது சுத்தமாக வைத்திருக்க ரயில்வே வழங்கும் Clean My coach என்ற சேவையை பயன்படுத்தலாம். உங்கள் இருக்கை அல்லது பி.என்.ஆர் எண்ணை பயன்படுத்தி அதிகாரப்பூர்வ Rail Madad செயலி மூலம் கோரிக்கை விடுத்தால் துப்புரவு பணியாளர்கள் உடனடியாக வந்து சுத்தம் செய்வார்கள்.
ரயிலில் உள்ள கழிவுகள் எப்படி சுத்தம் செய்யப்படுகின்றன?பெரும்பாலும் ரயில்களில் DRDO என்ற அமைப்பால் வடிவமைக்கப்பட்ட பயோ-டாய்லெட் வசதி உள்ளது.
இதில் உள்ள பிரத்தியேக பாக்டீரியாக்கள் மனித கழிவுகளை இயற்கை முறையில் நீராகவும் வாய்வு ஆகவும் மாற்றுகின்றன.
பயோ டாய்லெட் வசதியில் அடைப்பு ஏற்பட்டாலோ அல்லது கழிவுகள் முழுமையாக வெளியேற்ற வேண்டி இருந்தாலும் ரயில் நிலையங்களில் பிரத்தியேக உறிஞ்சும் இயந்திரங்கள் மூலம் பத்து நிமிடங்களில் சுத்தம் செய்யப்படுகிறது.
பிளாஸ்டிக் கப்புகள், நாப்கின்கள், சானிட்டரி பேடுகள் இவற்றை கழிவறையில் போடக்கூடாது. அதற்கென கழிவறை அருகே உள்ள பிளாஸ்டிக் தொட்டியில் போட வேண்டும். அவ்வாறு டாய்லெட்டில் போட்டால் டாய்லெட் அடைத்துக்கொள்ளும். எனவே பிளாஸ்டிக் கழிவுகள், கப்புகள், சானிட்டரி நாப்கின்கள் போன்றவற்றை வாசலில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியில் தான் போட வேண்டும்.
ஏதேனும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டால் 139 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது அனைத்து மாநில ரயில்களிலும் 'ஈ டாய்லெட்' வசதி உள்ளது. முன்பெல்லாம் மனிதக் கழிவுகள் தண்டவாளத்தில் வெளியேற்றப்பட்டு வந்தது. இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால் தற்போது அனைத்து ரயில்களிலும் 'பயோ டாய்லெட்' வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த பயோ-டாய்லெட் சுத்தம் செய்வது எளிது. பயணிகளும் முகத்தை சுளிக்காமல் இதை எளிதாக பயன்படுத்துகின்றனர். இந்த பயோ-டாய்லெட்களில் சேரும் கழிவுகள் நீர் மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு மற்றும் பாக்டீரியாவாக மாறுகிறது.
ஒவ்வொரு கழிப்பறை அறையிலும் இனோக்குலம் எனப்படும் பாக்டீரியா குழம்பு உள்ளது. இந்த குழம்பு கழிப்பறையின் கீழ் உள்ள ஆறு அறைகள் கொண்ட தொட்டியில் நிரப்பப்படுகிறது.
ஆரம்பத்தில் 120 லிட்டர் இனோக்குலம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ஆறு முதல் எட்டு மணி நேரத்தில் திடக்கழிவுகளை விரைவாக உடைக்கின்றன. கழிவுகள் பதப்படுத்தப்படுவதால் கடைசியில் நீர் குளோரின் மாத்திரைகள் மூலம் சுத்திகரிக்கப்பட்டு பாதுகாப்பாக வெளியேற்றப்படுகிறது. மேலும் பாக்டீரியா அளவுகள் கண்காணிக்கப்படுகிறது. அளவுகள் குறைந்தால் அதில் இனோகுலம் சேர்க்கப்படுகிறது.
பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் மூலம் அடைப்பு ஏற்பட்டால் அதை அகற்ற உறுஞ்சும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பயோ-டாய்லெட்டை தண்ணீர் சேமிப்பு வசதியும் உள்ளது. ஃப்ளெஷ் செய்வதன் மூலம் தேவையான தண்ணீர் மட்டும் கொடுக்கப்படுகிறது.
இந்த நவீன முறை இந்தியாவில் கொண்டுவரப்பட்ட மிகப்பெரிய சாதனையாகும். ஒவ்வொரு ரயிலிலும் அடிப்பகுதியில் பெரிய எஃகு தொட்டிகள் உள்ளன. இதற்கு அண்டர் கேரேஜ் டேங்க் என்று பெயர். இங்குதான் தண்ணீர் சேமித்து வைக்கப்படுகிறது. ஒவ்வொரு தொட்டிகளும் 500 லிட்டர் வரை தண்ணீர் இருக்கும். இதில் உள்ள தண்ணீர் அளவு குறைந்தால் அருகில் நிற்கும் ரயில் நிலையத்தில் இருந்து குழாய் மூலம் விரைவாக நீர் நிரப்பப்படுகிறது.
இப்படி பல வசதிகளுடன் இந்தியா முழுவதும் உள்ள ரயில்களில் பயோ-டாய்லெட் அமைக்கப்பட்டு கழிவுகள் விரைவாக சுத்தம் செய்யப்படுகிறது.
பயணிகளும் முகம் சுளிக்காமல் இதை பயன்படுத்துகின்றனர். ரயில்வே நிர்வாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பயோ-டாய்லெட்கள் பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
இந்தத் தொழில்நுட்பத்தைப் புரிந்துகொள்வதன் மூலம், ஒரு பொறுப்பான பயணியாக உங்கள் பயணத்தை சுகாதாரமானதாகவும், நவீன ரயில்வே கட்டமைப்புக்கு ஒத்துழைப்பு அளிப்பவராகவும் உங்களை மாற்றிக்கொள்ளலாம்.