தொடர்கதை: ஜாலியா ஒரு கொலை - அத்தியாயம் 4

கணவனின் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு குடும்பம் எடுத்த அதிரடி முடிவு!
Jaliya Oru Kolai - Tamil Serial story
Jaliya Oru Kolai - Tamil Serial storyImage Credit: ChatGPT
ஷாராஜ்

இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 6 சிறுகதைத் தொகுப்புகள், 5 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, மூன்று சிறார் கதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். இவரது உலக சிறுவர் கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகள், 2024-ல், ஓர் அங்குலச் சிறுவன், அமேஸான் கானகத்தில் வழி மறந்த சிறுமி, ஆகாயத்தைத் தின்ற மனிதர்கள் ஆகிய மூன்று நூல்களாக வெளியாகியுள்ளன. இவ் வரிசையில் இன்னும் சில தொகுப்புகள் வரவுள்ளன.

Updated on: 

தொடர்கதை: ஜாலியாக ஒரு கொலை - அத்தியாயம் 4

மறுநாள் ஞாயிறு காலை, வாராந்திர வழக்கப்படி பெருமாள்சாமி கால் கிலோ ஆட்டிறைச்சி எடுத்து வந்தார். மதியம் அவருக்கு மட்டும் இறைச்சித் துண்டுகள் போடும்போது, அப்பால் இருந்து பார்த்துக்கொண்டிருந்த அபிநயா, “ஸாப்டு மவனே ஸாப்டு…! இதுதான் நீ ஸாப்ட்ற கடைசிக் கறிச் சோறு…!” என அடிக்குரலில் கறுவினாள். அருகில் இருந்த சங்கவி அவளை பீதியோடு பார்த்துவிட்டு, கறித்துண்டைச் சுவைத்து மகிழ்ந்துகொண்டிருந்த பெருமாள்சாமியை ஜீவகாருண்யத்தோடு பார்த்தாள். என்றும் இல்லாதபடி அவளுக்கு தந்தை மீது பாசம் பொங்கியது.

அபிநயாவை இழுத்துக்கொண்டு தங்களின் அறைக்குச் சென்றவள், “அப்பாவைக் கண்டிப்பாக் கொன்னுதான் ஆகணுமா?” என்று கேட்டாள்.

“கண்டிப்பா!”

“நான் வேணும்னா பளைய ட்ரஸ்ஸே போட்டுட்டு காலேஜ் போய்க்கறேன். யாரு என்ன கிண்டல் பண்ணுனாலும், அவமானப்படுத்தினாலும் பரவால்ல. அதுக்காக அப்பாவைக் கொல்றதுங்கறது… எனக்கென்னமோ சரியாப் படல அபி…!”

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com