
என்ன அமைச்சரே, வெண்சாமரம் வீசும் பெண்கள் இன்னைக்கு வேலைக்கு வரலியா?
அய்யோ மன்னா, தற்போது தாங்கள் இருப்பது பதுங்குக்குழியில்!
***********************
மன்னர் பதவியில் இருக்கும் என் சாதனை என்ன அமைச்சரே?
எதிரியிடம் சிக்காமல் நீங்க உயிரோட இருப்பதே ஒரு சாதனைதானே மன்னா!
***********************
தலைவர் ஏன் உன்னைக் கட்சியில சேர்த்துக்க மாட்டேன்னு சொன்னார்?
இதுவரை என் பேர்ல ஒரு போலீஸ் கேஸ் கூட இல்லைன்னு சொன்னேன்!
***********************
தேர்தல்ல தோற்றுப்போன தலைவர் எதுக்காக ஃபைனான்ஸ் கம்பெனி ஆரம்பிச்சிருக்கார்?
அதுலேயாவது டெபாசிட் கிடைக்குமேன்னுதான்!
***********************
எங்க கட்சியில உறுப்பினராச் சேர உனக்கு என்ன தகுதி இருக்கு?
போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கிற ரவுடி லிஸ்ட்ல என்னோட பேர் இருக்கு தலைவரே!
***********************
மன்னர் வேட்டைக்கு போனால் மானைப் பிடித்துக்கொண்டு வருவார்!
போருக்குப் போனால்? உயிரைப் பிடித்துக்கொண்டு வருவார்!
***********************
சென்னையில வீடு கட்டப்போற நீங்க எதுக்கு ஜோசியரைப் பார்க்கப் போனீங்க?
தண்ணியில கண்டம் இருக்கான்னு தெரிஞ்சுக்கத்தான்!
***********************
தலைவருக்கு அரசியல்ல கண்டம்னு ஜோசியர் சொன்னாரா?
அப்படி சொல்லியிருந்தா பரவாயில்லையே, நீங்க அரசியலுக்கு வந்ததே தண்டம்னு சொன்னாராம்!