
நேத்து பஸ்ல போகும்போது ஒரு அழகான பொண்ணு என்கிட்ட பேசினாடா!
கொடுத்து வச்சவன்டா நீ, என்ன பேசினா?
இது "லேடீஸ் சீட், எந்திரி" ன்னு சொன்னா!
********************************
தலைவரே! வாட்ஸாப்ல உங்க பழைய கால வாழ்க்கையைப் பற்றி கதை கதையா எழுதாதீங்க!
ஏன்யா?
அப்புறம் லாக்கப்ல இருக்க வேண்டி வரும்!
********************************
ஆபீஸர் தண்ணி இல்லாத இடத்துக்கு மாத்திடுவேன்னு சொன்னதுக்கா இவ்வளவு பயப்படுறே?
இல்ல, 5ஜி நெட்ஒர்க் இல்லாத இடத்துக்கு மாத்திடுவேன்னு மிரட்டினாரு!
********************************
என்னோட கண்ணுல ஏதோ தகராறு இருக்குது டாக்டர் எப்படிச் சொல்றீங்க?
நித்யா மேனனுக்கும், மாளவிகா மேனனுக்கும் வித்தியாசம் தெரியலையே!
********************************
மாலா! நேத்து உன் கூட பைக்ல போறதை உங்கப்பா பார்த்துட்டார்! பிரச்னை எதாவது வருமா?
ஒரு பிரச்னையும் வராது டியர், போன வாரம் பக்கத்து வீட்டு குமார் கூட நான் பைக்ல போறதைப் பார்த்தும் எங்கப்பா ஒண்ணும் சொல்லலையே!
********************************
நீ என் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறதா கேட்டியாமே?
ஆமா ஆன்ட்டி!
முதல்ல நீ என்கிட்டேயில்லே கேட்டிருக்கணும்?
உங்களுக்கு ரொம்ப வயசாயிடுச்சே!
********************************
யானைப்படை, குதிரைப் படையை போர்க்களத்துக்கு அனுப்பியும் வெற்றி பெறாத மன்னர், எப்படி வெற்றி பெற்றார்?
புலவர் படையை அனுப்பித்தான்!
********************************
டாக்டர்! எங்க பக்கத்து வீட்டு மாலா வைரநெக்லஸ் வாங்கியிருக்கா!
அதை ஏன், என்கிட்ட சொல்றீங்க?
நீங்க தானே டாக்டர் சொன்னீங்க, வயிற்றெரிச்சல்னா வந்து சொல்லுங்கன்னு!
********************************
மாப்பிள்ளைக்கு பெண்ணை ரொம்ப பிடிச்சுப் போச்சு, ஆனா அவ சிரிக்கிறதுதான் அழகா இல்லைன்னு சொல்றார்!
அதுக்கென்ன சார், பல்செட்டை மாத்தினாப்போச்சு!