ஜோக்ஸ்; “நம்ம கட்சி போஸ்டரை தின்னுடுச்சாம்!”

kalki Jokes in tamil
ஓவியங்கள்; பிரபுராம்
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

“இங்கு கூடியிருக்கும் ஆயிரம் பொதுமக்களே!”

“அதெப்படி... தலைவர் கரெக்டா எண்ணிக்கை சொல்றாரு?”

“ஆயிரம் பேருக்குத்தான் பணம் கொடுத்து கூட்டிட்டு வரச் சொன்னார்.”

******************************

“அந்தக் கழுதை மேலே எதுக்கு நம்ம தலைவர் கேஸ் போட்டிருக்கிறார்?”

“நம்ம கட்சி போஸ்டரை தின்னுடுச்சாம்!”

******************************

“என் வீட்டுக்காரருக்கு குழந்தை மனதுடி!”

“அதுக்காக பொம்மை வாட்ச் கையில கட்டி விடறதெல்லாம் டூ மச்!

******************************

“என்ன டாக்டர், மொட்டை மாடியில் ஆபரேஷன் வெச்சிருக்கீங்க?”

“அப்போதான் சீக்கிரமா மேலே போவாங்க.”

******************************

“எப்படிடா மாறுவேடப் போட்டியில இப்படி அசத்தினே?”

“எல்லாம் கடன்காரங்களுக்கு பயந்து போட்ட வேடம்தான்.”

******************************

“என்ன இந்த நாடகத்துக்கு இவ்வளவு பெண்கள் கூட்டம்?”

“சாமியார் நாடகமாம்.”

kalki Jokes in tamil
ஓவியங்கள்; பிரபுராம்

******************************

“நீ முகமூடித் திருடன்னு சொல்றே. ஆனால், முகமூடியே காணோமே...”

 “ மஃப்டியிலே வந்திருக்கேன் சார்!”

******************************

“அந்த டாக்டர் சில்ட்ரன் ஸ்பெஷலிஸ்டுன்னு எப்படிக் கண்டுபிடிச்சீங்க?”

“எல்.கே.ஜி., யு.கே.ஜி., எம்.பி.பி.எஸ்.  ன்னு போர்டு போட்டிருக்காரே!”­­

logo
Kalki Online
kalkionline.com