ஜோக்ஸ்: ''ஆபரேஷன் முடிஞ்சா எமதர்மனையே நேர்ல பார்ப்பீங்க''!

kalki jokes
kalki jokes
Published on

பாட்டி! உனக்கு பல் இருக்கா? வயசானதினால எல்லாம் போயிடுச்சுடா பேராண்டி!

அப்ப, இந்த முறுக்கு பாக்கெட்டை  கையில வச்சுக்கோ, நான் விளையாடிட்டு வந்து வாங்கிக்கிறேன்!

-----------------------------------------------------

 டாக்டர்! என் கனவுல சித்திரகுப்தனை பார்க்கிறேன்!

நாளைக்கு ஆபரேஷன் முடிஞ்சா எமதர்மனையே நேர்ல பார்ப்பீங்க!

-----------------------------------------------------

ஏன் தலைவரே, நீங்க ஜெயிலுக்கு வந்து ஒரு மாதமாகியும் கட்சித்தொண்டர்கள் யாரும் உங்களைப் பார்க்க வரவில்லை?

கட்சித் தொண்டர்களும் உள்ளேதான் இருக்காங்க!

-----------------------------------------------------

என் மனைவி,  நான்  என்ன சொன்னாலும் சரின்னுடுவா!

ரொம்பக் கொடுத்து வச்சவர் சார்  நீங்க... சற்று விவரமாச் சொல்லுங்க..!

உதாரணமா நான்தான் சமைப்பேன்னு சொல்லுவேன், சரிம்பா, நான் தான் துவைப்பேன்னு சொல்லுவேன், அதுக்கும் சரின்னுடுவா!

-----------------------------------------------------

போர் ஓலை வந்தது மகாராணிக்கு தெரிந்துவிட்டது மன்னா!

எப்படிச் சொல்கிறீர் அமைச்சரே?

மகாராணி உங்க இன்சூரன்ஸ் பேப்பரைத் தேடிக்கிட்டு இருக்காங்களே!

kalki jokes
kalki jokes

-----------------------------------------------------

ராத்திரி தூக்கத்துல ஏன் சிரிச்சீங்க?

கனவுல சாய் பல்லவி வந்தா!

அப்புறம் ஏன் பயந்துக்கிட்டு கத்தினீங்க?

நடுவுல நீ வந்துட்டே!

-----------------------------------------------------

வீட்டோட வேலைக்காரி கிடைப்பாங்களா?

உங்களுக்குத்தான் வீடே இல்லையே?

அதான் வீட்டோட கிடைப்பாங்களான்னு கேட்டேன்!

-----------------------------------------------------

 அவர் போலி டாக்டர்னு எப்படிச் சொல்றே?

எனக்கு நாட்டுச்சர்க்கரை வியாதி இருக்குன்னு சொல்றாரே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com