

குணசேகரனிடம் விவரங்களை எல்லாம் கூறி, தீபாவின் நம்பரைப் பற்றி கேட்டதற்கு, அவர், “ஐயோ சார், நானே என்னோட சதா போயிட்டான் என்று துக்கத்தில் இருக்கிறேன், நீங்கள் இந்த தீபாவைப் பற்றி ஏன் கேட்கிறீர்கள்? அவளால்தானே என் சதா உயிரிழந்தான். அவளைப் பற்றி என் முன்னே பேசாதீர்கள். எனக்கு அவள் நம்பரும் தெரியாது ஒன்னும் தெரியாது” என்று அழுது நாடகமாடினார்.
மகேஷும் குணசேகரனைப் போலவே சேம் டயலாக் சேம் டிராமா செய்தான்.
போலீஸார் இவர்களுக்குத் தெரியாமல் சதாசிவத்தின் மொபைலில் இருந்து தீபாவின் நம்பருக்கு கால் செய்தார்கள்.. இரண்டு முறை முயற்சி செய்தும் அவள் எடுக்காத காரணத்தினால் விட்டுவிட்டார்கள். எப்படியும் மிஸ்டுகாலை பார்த்தால் போன் செய்வாள் என்ற நம்பிக்கையில் இருந்தார்கள். ஆனால் அவளிடமிருந்து போன் வரவில்லை.
குணசேகரன் போலீஸாரிடம், “சார் நானும் வந்துவிட்டேன். இன்னும் யாருக்காக நீங்கள் காத்துக்கொண்டிருக்கிறீர்கள்? சதாவின் பாடியை தகனம் செய்ய ஏற்பாடு செய்யுங்கள்...” என்றார்.
போலீஸார் “இல்லை, நாங்கள் தீபாவிற்குப் போன் செய்தோம்.. அவள் எடுக்கவில்லை.. அவளுடைய போனிற்காக நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம்...” என்றார்கள்..