க்ரைம் ஸ்டோரி: கொலையா? தற்கொலையா..? அத்தியாயம் 3

கொலையா அல்லது தற்கொலையா? ஊட்டி தம்பதியினர் கொலை வழகின் அதிர்ச்சித் திருப்புமுனை!
Kolaiya? Tharkolaiya..? - Tamil Serial Story
Kolaiya? Tharkolaiya..? - Tamil Serial StoryImage credit: Chatgpt
அகிலா சிவராமன்

கடந்த 5 வருடங்களாக அகிலா சிவராமனின் கட்டுரைகளும் கதைகளும் கிட்டத்தட்ட 500க்கும் மேல் வெளி வந்துள்ளன. இறைவன் மீது பல பாடல்களை எழுதியுள்ள இவரது முதல் சிறுகதை 'புயலின் மறுபக்கம்' 2025 ஜனவரியில் மங்கையர் மலரில் வெளியானது. தொடர்ந்து கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார். 'கல்கியில் எழுத ஆரம்பித்த பிறகு தான் என்னுடைய திறன் என்னவென்று எனக்கே தெரிய ஆரம்பித்தது' என்று கூறும் அகிலா, சமூக நலன் அடிப்படையிலும், தேச நலன் அடிப்படையிலும் தனது படைப்புகள் அமைய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துபவர்.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

க்ரைம் ஸ்டோரி: கொலையா? தற்கொலையா..? அத்தியாயம் 3

மறுநாள் ஆறுமுகம், சதாசிவம் வீட்டருகே வந்து ‘ஐயா..ஐயா...’ என்று கத்தினார். அங்கிருப்பவர்கள் நடந்ததை கூற ஆறுமுகம் ஒன்றும் தெரியாததுபோல அழுது நடித்தார். இதற்குள் மகேஷும் வந்துவிட்டான்.

“எப்பப்பா வந்தீங்க?”

“அதை விடு... முதல்ல நீ ஏன்டா, ஐயா இறந்ததைச் சொல்லலை.. யாருடா இந்த வீட்டைப் பூட்டி வச்சா?” என்று கூப்பாடு போட்டு ரகளை செய்யவே அருகிலிருப்பவர்கள் இன்ஸ்பெக்டருக்கு கால் செய்யவே, அவரும் அங்கு வந்து அழகாக நாடகமாடினார்.

“ஹலோ... நீங்க யாரு? எதுக்கு இப்பக் கத்தறீங்க?"

“மரியாதையா என் ஐயா வீட்டை திறந்து விடுங்க... அப்புறம் தீபா பாப்பாவை வரவழைங்க... சதாசிவம் ஐயாவையும் அம்மாவையும் யாரோ கொலை பண்ணி இருக்காங்க.. அது யாருன்னு தெரியாம நான் போகமாட்டேன்...” என்று ஜோராக கத்திக்கொண்டிருந்தார் ஆறுமுகம்.

இதற்குள், எதுவும் தெரியாததுபோல விவேக்கும் நாடகத்தின் உள்ளே என்ட்ரி கொடுத்தான்.

போலீஸார் அவனை தடுத்து,

“ஹலோ மிஸ்டர்! நீ யாருப்பா..?”

Loading content, please wait...