மதுரை மீனாட்சியம்மன் கோயில் மறைக்கப்பட்ட வரலாறும் ஆலயப் பிரவேசப் புரட்சியும்!

மாலிக் காபூரின் மதுரை கொள்ளை, மீனாட்சியம்மன் கோயில் ரகசியங்கள் மற்றும் 1939 ஆலயப் பிரவேச வரலாற்றை விரிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் | Madurai Meenakshi Amman Temple
மதுரை மீனாட்சியம்மன் கோயில் | Madurai Meenakshi Amman TempleImage credit: Chatgpt
Updated on: 
Kalki Strip
Kalki Strip

டெல்லி சுல்தான்களின் படையெடுப்பில் சூறையாடப்பட்ட மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகளும், சாதித் தடைகளைத் தகர்த்து 1939-ல் அரங்கேறிய வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயப் பிரவேசப் புரட்சியும் பலரும் அறியாத வியக்க வைக்கும் பல உண்மைகளை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி நுஸ்ரத்கானால் குஜராத் படையெடுப்பின்போது மாலிக்காபூர் அடிமையாக பிடித்துச் செல்லப்பட்டு, டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் இராணுவத் தலைமைத் தளபதியானவர். இந்துவாக இருந்த இவர் பிற்காலத்தில் இஸ்லாமாக மாறினார்.

மாலிக்காபூர் பிறப்பால் ஒரு ஆணாக இருந்தாலும், இளம் வயதிலேயே அவர் அலிசாப் திருநங்கை (Eunuch) போன்ற மாற்றுத்திறன் கொண்ட நபராக ஆக்கப்பட்டார்.

அலாவுதீன் கில்ஜிக்கு மாலிக்காபூர் மீது மிகுந்த ஈர்ப்பும் காதலும் இருந்தது. இவர்களின் உறவு வெறும் அரசியல் மற்றும் இராணுவ விசுவாசத்தைத் தாண்டி, ஓரினச்சேர்க்கை (Homosexual) அல்லது காதல் சார்ந்த பிணைப்பு இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். மாலிக் காபூரின் அழகிலும் திறமையிலும் சுல்தான் முற்றிலும் மயங்கியிருந்தார்.

கி. பி 1311ல் வீரபாண்டியன் மற்றும் சுந்தர பாண்டியன் வாரிசுரிமைபோரைப் பயன்படுத்தி மதுரையின் மீதுபடையெடுத்தான் மாலிக் காபூர்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com