சுதந்திரம் கொண்டாடாதவர் காந்தி!
1947..!
நான் பெரியார் பற்றி பேசவில்லை. அவர் சுதந்திரம் துக்க தினம் என்றார்.
நான் பேச வந்தது காந்தி பற்றித்தான்.
ஆகஸ்ட் 15 டில்லியில் நேரு, ராஜாஜி, அம்பேத்கர், படேல் போன்ற தேசிய தலைவர்கள் சுதந்திரத் தினக் கொண்டாட்டத்தில் இருந்தபோது காந்தி அங்கே இல்லை. அவருக்கு பாகிஸ்தான் உருவாவது பிடிக்கவில்லை.
ஆனால், பாகிஸ்தான் உருவாகிவிட்டது.
பிரச்னை என்னவென்றால் இந்து - முஸ்லீம் கலவரம் வடக்கே தோன்றியது. கலவரம் மிகவும் கொடுமையாக இருந்தது. அப்போது நவகாளியில் கலவரம் பெரிதாகத் துவங்கியது.
காந்தியால் சும்மா இருக்க முடியவில்லை. நடைபயணமாக நவகாளி சென்றார். முஸ்லிம் வீட்டில் தங்கினார். நவகாளி முழுக்க முழுக்க அமைதி ஊர்வலம் நடத்தினார். மக்கள் காந்திக்கு மரியாதை கொடுத்தார்கள். கலவரம் படிப்படியாக குறைந்தது.
இங்குதான் காந்தி இருக்கிறார். சுதந்திரம் கிடைத்ததைக்கூட கண்டு கொள்ளாமல் இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்குப் பாடுபட்டார்.
அதனால்தான் அவர் மகாத்மா. ஆம். மகா மகாத்மா.
காந்தி சுதந்திரப் போராட்டத்தில் எப்போதும் ஒரே நிலையில்தான் இருந்தார். அதாவது அகிம்சை. அகிம்சை என்றால் முழுக்க முழுக்க இந்தியர்களுக்கு மட்டுமே. பிரிட்டிஷ், இந்திய மக்களை கொன்று குவித்தபோதும் அகிம்சை வழியில் தான் நாம் செல்ல வேண்டும் என்று காந்தி சொன்னார்.
இது பலருக்குப் பிடிக்கவில்லை.
* ஒருமுறை நாடு முழுவதும் ‘ஒத்துழையாமை இயக்கம்’ நடத்தினார்.
அப்போது அமைதியாக ஒத்துழையாமை இயக்கம் நடத்தி வந்த இருவரை பிரிட்டிஷ் போலீஸ் கொன்றது.
கோபம் அடைந்த மக்கள் போலீஸ்காரர்களை போலீஸ் ஸ்டேஷனில் தள்ளி, தீ வைத்து, அவர்களைக் கொன்றார்கள்.
இது அறிந்து உடனே காந்தி ‘ஒத்துழையாமை இயக்கம்’ நிறுத்தினார்.
பிரிட்டிஷ் அகிம்சை வழியில் செல்லாமல் இருக்கலாம். ஆனால் என்றுமே இந்தியர்களுக்கு அகிம்சை வழிதான் என்று வலியுறுத்தி தனது கருத்தை காங்கிரஸில் வைத்தார்.
பல தலைவர்கள் இதை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் மக்கள் காந்தி வழியைப் பின்பற்றி நடந்துகொண்டார்கள்.
காந்தி மீது அளவு கடந்த அன்பு, பாசம், மதிப்பு, மரியாதை கொண்டு இருந்தார்கள்.
* மற்றொறு சம்பவம்.
பகத்சிங், ராஜகுரு, மற்றும் குருதேவ் மூவருக்கும் பிரிட்டிஷ் அரசு மரண தண்டனை விதித்தது. அவர் செய்த குற்றம் பாராளுமன்றத்தில் நோட்டீஸ் வீசி எறிந்து சுதந்திர விருப்பத்தைப் பரப்பினார்கள்.
காங்கிரஸில் உள்ள தீவிரவாதிகள் திலகர் உட்பட அந்த 3 புரட்சியாளர்களையும் விடுவிக்க காந்தியை பிரிட்டிஷ் அரசிடம் பேசச் சொன்னார்கள். அல்லது விண்ணப்பம் அளிக்க சொன்னார்கள். ஆனால், காந்தி மறுத்துவிட்டார். அவருக்குக் கம்யூனிசம் பிடிக்காது.
பிரிட்டிஷ் இம்சையை ஏற்றுக்கொண்டு… மக்கள் அகிம்சையைத்தான் பின்பற்ற வேண்டும் என்று சொன்னார்.
ஆயிரம் சொன்னாலும்… காந்தி தனக்கு என்று ஒரு கொள்கையை வைத்துக்கொண்டு பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போராடினார்.
பல முறை சிறை சென்றாலும் அவர் கொள்கையை விடவில்லை.
நாட்டிற்காக தனது இன்னுயிரைத் தந்தவர்.
அவர் உண்மையில் நிஜமாகவே…
மகாத்மா… !
உலகிலேயே உண்மையான ஒருவர் மட்டுமே மகாத்மா என்று எல்லோரும் சொன்னார்கள்.
ஆம்.
மகாத்மா வாழ்க..!