மினி கதை: ம்மா…! என்ன சுவை…?!

costly food
mini story in tamil enna suvai
Published on
Kalki Strip
Kalki Strip

சாப்பாடு வாழ்வில் முக்கியமானது. என்ன தான் வீட்டில் சாப்பிட்டாலும்… ஹோட்டல் சாப்பாடு மிகவும் ருசியாக இருக்கும். சென்னையில் பல பிரசித்தி பெற்ற ஹோட்டல்கள் உள்ளன.

சென்னை வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை ஹோட்டலில் சாப்பிடுவது மிகக்குறைவு. என் அக்கா மகன் ரமேஷ் என்னை நல்ல ஹோட்டலுக்கு அழைத்து செல்வார். எனக்கு நார்த் இண்டியன் சாப்பாடு மற்றும் டிபன் பற்றி ஒன்றும் தெரியாது.

போன மாதம் ரமேஷ்… விருகம்பாக்கத்தில் இருந்த ஹோட்டலுக்கு அழைத்து சென்றார்.

எனக்கு உணவு வகைகள் விலை தெரியாது. மெனு கார்ட்டை பார்த்தேன்.

அசந்து போனேன். நான் ரமேஷிடம் இங்கு விலை அதிகமாக இருக்கு என்று சொன்னேன். அதற்கு… ரமேஷ்...

“ மாமா.. அதை பத்தி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.. ” என்று சொன்னார்.

“முதலில் என்ன சாப்பிடலாம்..?

ஸ்டார்டர் என்ன… ?

“எனக்கு ஐடியா இல்லை… !”

“சரி… நான் ஒரு கோபி மஞ்சூரியன் ஆர்டர் செய்கிறேன்… ! ”

“அப்படின்னா… ? ”

“காலிஃப்ளவர் மாமா… சாப்பிட்டு பாருங்கள்… ! ”

கோபி மஞ்சூரியன் வந்தது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: ஆபத்பாந்தவன்!
costly food

இருவரும் ஷேர் செய்தோம்.

இதுதான் முதல் முறையாக நான் அதை சாப்பிடுகிறேன்.

அம்மம்மா… அப்பப்பா..! என்ன சுவை..? பிரமாதமாக இருந்தது..!

எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது.

“அடுத்து என்ன மாமா.. ? நாண் சொல்லலாமா… ? பட்டர் நாண்..!”

“ சரி… ! ”

"சைட் டிஷ் என்ன வேண்டும்… ?" ரமேஷ் கேட்டார்.

நான் பீஸ் மசாலா கேட்டேன். அதற்கு ரமேஷ் "நீங்கள் ஆலு மட்டர் வாங்கி கொள்ளுங்கள்," என்றார்.

அவர் பன்னீர் பட்டர் மசாலா ஆர்டர் செய்தார்.

அம்மா… !

இப்படி ஒரு பட்டர் நாணை நான் சாப்பிட்டதே இல்லை. எனக்கு சைட் டிஷ் ஆலு மட்டர். பட்டாணி மற்றும் உருளை கிழங்கு சேர்த்து செய்வது. அது எனக்கு அமிர்தம் போன்று இருந்தது.

பிறகு ரொட்டி ஆர்டர் செய்தார். அது சப்பாத்தி தான், ஒருவருக்கு 2 பீஸ்கள். சைட் டிஷ் இருந்தது. ரொட்டி மற்றும் ஆலு மட்டர் பிரமாதமாக இருந்தது.

இப்படி ஒரு சுவையான உணவை சாப்பிட்டதே இல்லை.

கடைசியாக 2 காபி ஆர்டர் செய்தார். ஃபில்டர் காபி மிகவும் சுவையாக இருந்தது.

காபி குடித்ததும் பில் வந்தது. ரமேஷ் அட்டையில் பணம் வைத்தார். பின்னர் சர்வர் மீதி பணத்தை கொண்டு வந்தார். ரமேஷ் அவருக்கு ₹10 டிப்ஸ் கொடுத்தார். நான் பில்லை எடுத்து பார்க்க ஆரம்பித்தேன்.

கோபி மஞ்சூரியன் - ₹95

ஆலு மட்டர் - ₹295

பட்டர் நாண் - ₹100

ரொட்டி - ₹100

காபி…… ₹45

இது நான் சாப்பிட்டதை மட்டுமே எழுதி உள்ளேன். எனக்கு மட்டுமே ₹600 ஐ தாண்டியது. எனக்கு ஷாக். அதிர்ச்சி.

“ரமேஷ்… எல்லாமே ரொம்ப காஸ்ட்லியாக இருக்கிறதே…? ” என்று கேட்டேன்.

“ உங்களுக்கு பிடித்து இருந்ததா… ? ”

“ சூப்பர்… சூப்பர்… ரொம்ப பிடிச்சு இருந்தது… ! ”

“ அப்புறம் என்ன… ? கவலையை விடுங்க… போலாமா… ? ”

“ எஸ்… ! “

கிளம்பினோம்.

காசு இருந்தால் இனி இங்கே தான் சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்தேன். மாதம் ஒருமுறை சென்று சாப்பிடுவேன்.

பட்டர் நாண் ₹100

ஆலு பட்டர் ₹295

ரொட்டி ₹90

மினி காபி ₹35

ஒரு வேளை சாப்பிட ₹450க்கு மேல் ஆகும்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: விஸ்வரூபம் எடுத்தேன்
costly food

எனக்கு நன்கு தெரியும். இது என் சக்தியை விட மிகவும் மேலானது. ஆனால் சுவையை நாக்கு விரும்பியது.

ஆம்.

மாதம் 'ஒரே ஒருமுறை' இந்த காஸ்ட்லி உணவு சாப்பிடுவேன்.

ம்மா… ! என்ன சுவை… ??

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com