ராணுவ வீரருக்கு நேர்ந்த அவமானம்: பாடம் புகட்டிய ஹாலிவுட் நடிகர் மோர்கன் ப்ரீமேன்!

Morgan Freeman
Morgan Freeman
எம். ஆர். ஆனந்த்

I am a retired Bank officer. I have written articles in English for News Papers. I have written poems in English and Tamil 

Updated on

மோர்கன் ப்ரீமேன் (Morgan Freeman) ஒரு புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர். இவர் ஒரு அப்ரோ அமெரிக்கர். ஒரு முறை அவர் நியூயார்கிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு செல்லும் விமானத்தில் அமர்ந்திருந்தார். விமானம் புறப்பட தயாராக இருந்தது.

அப்போது ஒரு முதியவர் தன்னுடைய சீட் எது என்று தெரியாமல் குழம்பிய நிலையில் விமான பணிப்பெண்ணிடம் தன் பயண சீட்டை காண்பித்து நான் எங்கு அமர வேண்டும் என்று கேட்டார். அப்போது அந்த பணிப்பெண் "இப்போது எங்கே வேண்டுமானாலும் உட்கார்ந்து தொலையுங்கள் விமானம் டேக் ஆப் செய்ய போகிறது" என்று சிடுசிடுப்போடு கூறினார். இந்த காட்சியை பார்த்து கொண்டிருந்த மோர்கனுக்கு மிகவும் வருத்தமாகி விட்டது. தன் முதல் வகுப்பு இருக்கையிலிருந்து எழுந்த அவர் அந்த வயதானவரிடம் சென்று விசாரித்தார்.

அந்த முதியவர் தான் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ வீரர் என்றும் தன் மகளை பார்க்க ஹவாய்க்கு லாஸ் ஏஞ்சல்ஸ் வழியாக பயணிப்பதாகவும் கூறினார். "நீங்கள் ஒரு ராணுவ வீரராக எங்களுக்கெல்லாம் உயிரை பணயம் வைத்து பணியாற்றியிருக்கிறார்கள். உங்களுக்குத்தான் முதல் இடம் தரவேண்டும். வாருங்கள் என்னுடன். அமருங்கள் என்னுடைய முதல் வகுப்பு ஆசனத்தில்" என்று கூறி அவரை கையை பிடித்து அழைத்து போய் தன் இருக்கையில் அமரவைத்துவிட்டு அவர் ராணுவ வீரரின் எகானமி வகுப்பு இருக்கையில் உட்கார்ந்து நான்கு மணி நேரம் பயணித்தார்.

இதையும் படியுங்கள்:
தோல்விகளைத் தாங்க முடியாத இன்றைய இளைஞர்கள்... ஒற்றைக் குழந்தை குடும்பங்கள் தான் காரணமா?
Morgan Freeman

விமானம் தரை இறங்கியதும் மோர்கன் ரிட்டயர்டு ராணுவ வீரரிடம் அவரது பெயரையும் விலாசத்தையும் வாங்கி கொண்டார். இது நடந்த ஒரு வாரத்துக்குள் மோர்கன் அந்த வீரருக்கு நியூ யார்க்குக்கும் ஹவாய்க்கும் இரு முறை போய்வர முதல் வகுப்பு ரிட்டர்ன் டிக்கட்டுகளை அனுப்பி வைத்தார்.

டிக்கட்டுகளோடு அவர் ஒரு கடிதத்தையும் இணைத்திருந்தார். அதில் ஹாவாயிலிருக்கும் உங்கள் மகளை நிம்மதியாய் பார்த்து வாருங்கள். இந்த கடித்ததை தன் வீட்டில் பிரேம் போட்டு வைத்துள்ளார் டொனால்டு என்ற அந்த ஒய்வு பெற்ற ராணுவ வீரர்.

logo
Kalki Online
kalkionline.com