மர்டரஸ் மேரி:  யானையை தூக்கிலிட்டுக் கொன்ற சம்பவம் தெரியுமா?

hanging o mary elephant
hanging of mary elephantImg credit: AI Image
Updated on
Kalki Strip
Kalki Strip

மனிதர்களை தூக்கிலிட்டு கேள்விப்பட்டிருக்கிறீர்கள். யானையை தூக்கிலிட்டுக் கொன்ற விஷயம் உங்களுக்கு தெரியுமா?.

ஆம்! இப்படி ஒரு நிகழ்ச்சி அமெரிக்க டென்னிஸ் மாகாணத்தில் நடந்துள்ளது. அந்த யானையின் பெயர் மர்டரஸ் மேரி. ஸ்பார்க்ஸ் வேர்ல்ட் என்ற சர்க்கஸ் கம்பெனியில் இருந்ததுதான் இந்த மேரி என்ற பெண் யானை. ஒரு நாள் அனுபவமில்லாத ஒரு தற்கால பாகன் அதன் காதோரத்தில் இரும்பு கொக்கியினால் அடித்து விட்டான்.

ஆக்ரோஷமான மேரி அவனை அங்கேயே மிதித்து துவைத்து  கொன்று விட்டது. இந்த செய்தியை அறிந்த பொது மக்கள் யானையை கொல்லவேண்டும் என்று ரகளை செய்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மேரியை கொல்ல  முடிவெடுத்தனர். அவ்வளவு பெரிய யானையை சுட்டுக்  கொல்வது அவ்வளவு சுலபம் இல்லை என்பதால் அதை தூக்கிலிட  தீர்மானிக்கப்பட்டு 100 டன் எடையுள்ள கிரேன்  வரவழைக்கப்பட்டு மேரியை தொங்கவிட்டு கொன்றார்கள். 

முதல் முயற்சி கிரேன் உடைந்ததால் தோல்வியுற்றது. ஆனால்  இரண்டாவது முயற்சியில் யானை இறந்து போனது. பாவம்  மேரியின் இறந்த உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள்,  அதற்கு தாடை ஓரத்தில் ஒரு புரையோடிப் போன சொத்தை பல்  இருந்ததாகவும், அந்த இடத்தில் இறந்து போன பாகன் அடித்ததால்தான் மேரிக்கு கோபம் ஏற்பட்டு பாகனை போட்டு தள்ளியது  என்றும் அறிக்கை கொடுத்தார்கள்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: பணமா? குணமா?
hanging o mary elephant

இந்த உண்மை தெரியாது மேரியை தூக்கிலிட்டு கொன்று விட்டார்களே என்று மிருக  நேயர்கள் கண்டனம் தெரிவித்தார்கள். இந்த சோக நிகழ்ச்சி மிருகங்களை அன்போடு நடத்த வேண்டும் என்ற எண்ணத்தை மேலும் வலுவடைய செய்தது. 

மேரி என்ற இந்த யானை கொன்றதோ ஒரே ஒரு மனிதனை.  அதுவும் அதற்கு ஏற்பட்ட தாங்க முடியாத வலியால் தான். அதற்கு அவளுக்கு கிடைத்த பட்டம் 'Murderous Mary'. 

தற்போது  எத்தனை மனிதர்களை கொன்றாலும் யானைகளை  கொல்ல சட்டம் இடம் தராது. டியர் மேரி வெரி சாரி டு ஹியர்  யுவர் ஸ்டோரி!  

logo
Kalki Online
kalkionline.com