ஊடகங்கள், சீரியல்கள் பார்த்தால் மரண தண்டனை! ரத்தத்தை உறைய வைக்கும் சட்டங்கள்! எங்கே?

ஒருவர் மட்டுமே நிற்கும் தேர்தல்! உலகிலேயே விசித்திரமான ஜனநாயகம்.
north korea
north korea Img credit: AI Image
Updated on
Kalki Strip
Kalki Strip

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிகாரப்பூர்வ மாளிகை தலைநகர் பியோ யாங்கில் உள்ளது. இது மிக உயர்ந்த பாதுகாப்புடன் நிலத்தடி சுரங்கப்பாதைகள், விளையாட்டு மைதானங்கள், சொகுசு வசதிகளுடன் காணப்படுகிறது. மிகவும் பகட்டான மாளிகை என வர்ணிக்கப்படுகிறது. 

அதிபர் குறித்த தகவல்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்படுகின்றன. 

இவரது மகளுக்கு இளவரசி போன்று வாழும் வகையான மாளிகை அமைக்கப்பட்டுள்ளது. இது பல அடுக்கு பாதுகாப்பு வசதி கொண்டது. 

அதிபர் மாளிகை அணுசக்தி மற்றும் ஏவுகணை திட்டங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. அதிபரும் மகளும் பாதுகாப்பான கவச வாகனங்களில் செல்கிறார்கள். அதிபருக்கு பல மாளிகைகள் இருந்தாலும் அவர் எங்கு தங்கியிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. அந்த அளவுக்கு ரகசியம் காக்கப்படுகிறது. 

அவரது பயணங்களின் போது நவீன பீரங்கிகள் மற்றும் ஏவுகணை தடுப்புகள் உடன் செல்கின்றன. 

சமீப காலமாக தனது இளம் வயது மகளை வெளி உலகத்திற்கு அறிமுகம் செய்கிறார். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையின் போது மகள் உடன் இருந்தார். 

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தன் மகளை அதிபர் பதவியில் அமர்த்த ஏற்பாடுகள் செய்து வருகிறார். அதிபருக்கு பிறகு அவரது மகள் பொறுப்பேற்பார் என கூறுகிறார்கள்.

தற்போது அவரது மகளுக்கு 14 வயது ஆகிறது. ராணுவம் தொடர்பான நிகழ்ச்சிகளில் மகள் அதிகம் பங்கேற்கிறார். கிம் ஜாங் உன் உடல் நிலை காரணமாக மகள் பொறுப்பு ஏற்பார் என கூறப்படுகிறது.

அதிபர் 140 கிலோ எடையுடன் இருப்பதால் அவருக்கு இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் இருப்பதாக கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்:
அரசியல் பற்றி அறிஞர்களின் வித்தியாசமான பார்வைகள்..!
north korea

வடகொரியாவில் மரண தண்டனை மற்றும் சித்திரவதை முகாம்கள் அதிகம் உள்ளன.

கொலை, திருட்டு, தேசத் துரோகம், போதை மருந்து கடத்தல், ஊடகங்கள் பார்த்தல், மத நம்பிக்கை போன்றவற்றிற்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த மரண தண்டனை பெரும்பாலும் பொதுவெளியில் நிறைவேற்றப்படும். 

அரசியல் எதிர்ப்பாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு சித்தரவதை, நீண்ட கால சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. 

தென்கொரிய சீரியல்கள் தொலைக்காட்சியை பார்ப்பதில் பொது அவமானமாக கருதி மரண தண்டனை விதிக்கப்படுகிறது. 

குற்றவாளியுடன் சேர்ந்து அவரது குடும்பத்தினரும் தண்டனையை அனுபவிக்க வேண்டும். 

வடகொரியாவில் வெள்ளை உடை அணிவது மற்றும் சன் கிளாஸ் அணிவது குற்றமாக கருதப்படுகிறது. 

வடகொரியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சிக்கி ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இதை தடுக்க தவறிய 30 அரசு அதிகாரிகளுக்கு பொதுவெளியில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அங்கு நடக்கும் பெரும்பாலான விஷயங்கள் வெளி உலகத்துக்கு தெரியாது. அந்த அளவுக்கு ரகசியம் காக்கப்படுகிறது. 

உலகில் உள்ள மற்ற நாடுகளுக்கும் வடகொரியாவுக்கும் எந்த தொடர்பும் இருப்பதில்லை. அனைத்துக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. 

தென்கொரியா தொழில் நுட்ப வளர்ச்சியில் சிறந்து விளங்குகிறது. 

அதே சமயம் வடகொரியா சர்வாதிகார நாடாக உள்ளது. தென்கொரியாவை எதிரி நாடாக வடகொரியா கருதுகிறது. தென் கொரிய சீரியல்களை கூட வடகொரியாவில் பார்க்க முடியாது. 

இவ்வளவு கட்டுப்பாடுகளையும் தாண்டி தென் கொரிய சீரியல் பென்டிரைவ் மூலம் கடத்தப்பட்டு கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டு வருகிறார்கள். வடகொரிய டீன் ஏஜ் பருவத்தினர் இந்த சீரியல்களை அதிகம் பார்க்கின்றனர். 

இதையும் படியுங்கள்:
சிறுகதை: ஹோர்முஸ் ஜலசந்தியும் பாலுவின் தாத்தா பேச்சு வார்த்தையும்!
north korea

இந்த நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காக 30 நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இங்கு இன்டர்நெட் கிடையாது. சமூக வலைத்தளம் கிடையாது. 

நாமெல்லாம் 21 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இவர்களோ இன்னும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். தனது தாத்தா மறைவு தினத்தன்று பொதுமக்கள் சிரிக்க தடை விதித்தார்! 

வடகொரியா ஒரு ஜனநாயக நாடு. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கும். மேயர் தேர்தலில் தொடங்கி அதிபர் வரை ஒரு நபரே நிற்பார். அவருக்கு அனைவரும் ஓட்டு போட வேண்டும். 

தேர்தலில் வாக்களிக்க தவறினால் தண்டனை நிச்சயம். ஒரு தவறு செய்தால் மூன்று தலைமுறைக்கும் சேர்த்து தண்டனை வழங்கப்படும். 

ஒருமுறை உரத்தட்டுப்பாடு ஏற்பட்டது.  பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்கு இத்தனை பவுண்டு மலம் அளிக்க வேண்டும் என சட்டம் கொண்டுவரப்பட்டது! மலம் குறைவாக கொடுத்தால் அதற்கேற்ற அபராதம் விதிக்கப்பட்டது. இரவு நேரத்தில் மின்தடை இருக்கும்.

பொதுமக்கள் என்ன ஹேர் ஸ்டைல் வைக்க வேண்டும் என்பதை அரசு தான் முடிவு செய்யும். குறிப்பிட்ட ஹேர் ஸ்டைல் மட்டும் அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதிபருக்கு கூடைப்பந்து மிகவும் பிடிக்கும். அதனால் பொதுமக்கள் அனைவரும் கூடை வந்து கட்டாயமாக விளையாட வேண்டும்.

அனைத்து நாடுகளும் 5ஜி, 7ஜி என போய்க்கொண்டு இருக்கும் நிலையில் இங்கு இன்னும் 2 ஜி, 3ஜி தாண்டவில்லை. இங்குள்ள மக்கள் வெளி உலகம் தெரியக்கூடாது என்பதில் கண்டிப்பாக இருக்கிறார்கள். 

இங்குள்ள நடைமுறைகள் பழக்கவழக்கங்கள் வெளியுலகுக்கு தெரிந்தால் அதனால் பிரச்னைகள் வரும் என கருதி கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். எனவே இங்குள்ள மக்கள் வெளி நாடுகளுக்கு செல்லக்கூடாது; வெளிநாடுகளில் இருந்து யாரும் இங்கு வரக்கூடாது என கடுமையான சட்ட திட்டம் உள்ளது. 

மீறுபவர்களுக்கு மரண தண்டனை தான். இன்னும் எவ்வளவோ ரகசியங்கள் இங்கு புதைந்து கிடக்கின்றன. ராணுவத்திற்கும் அணுசக்தி சோதனை இவற்றுக்கு மட்டும் அதிக அளவில் செலவழித்து வருகிறார்கள். 

வடகொரியா என்றாலே அதிசயமும் ஆச்சரியமும் கலந்த நாடாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com