ஊட்டிக்கு தேவை கல்லூரியா? பூங்காவா?
சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு கிண்டி குதிரை பந்தயம் மற்றும் ஊட்டி குதிரை பந்தயம் மைதானங்களை தன் வசம் எடுத்து கொண்டது. காரணம் மெட்ராஸ் ரேஸ் கிளப் கொடுக்க வேண்டிய குத்தகை பணத்தைத் தரவில்லை. இந்த மோசடி கோடி கணக்கில் உள்ளது. இதுவரை பொறுத்து இருந்த தமிழக அரசு இரண்டு மைதானங்களையும் தன் வசம் எடுத்து கொண்டது.
இதில் உதகை குதிரை பந்தயம் மைதானத்தில் சுற்றசூழல் பூங்கா அமைக்க போவதாக அறிவித்தது. அதற்காக பணிகளையும் துவங்கியது. இது அவசர முடிவு. யோசனை இன்றி எடுத்தது.
ஊட்டியில் ஏற்கனவே தாவரயில் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் படகு இல்லம் முன் சிறுவர் பூங்கா உள்ளது. இதில் மற்றும் ஒரு பூங்காவிற்கு அவசியமே இல்லை.
ஊட்டியில் உள்ள மாணவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பு படிக்க 90 கி. மீ. தூரத்தில் உள்ள கோவைக்கு தான் செல்ல வேண்டும். அது மட்டும் அல்ல. நோயாளிகள் மேல் சிகிச்சைக்காக கோவை தான் செல்ல வேண்டும். இது மக்களுக்கு சிரமத்தை கொடுக்கிறது. பொருளாதார செலவும் அதிகம். இதனால் ஏழைகளால் கோவை செல்ல முடியாது.
இங்கு தான் அரசு யோசித்து இருக்க வேண்டும். குதிரை பந்தயம் மைதானத்தில் ஒரு பொறியியல் கல்லூரி கட்டலாம். ஆனால் இதை விட அரசு மருத்துவ கல்லூரி ஒன்றை ஊட்டியில் கட்டலாம். இதுவே சிறந்த யோசனை.
ஊட்டியில்.. மத்தியில சுற்றுச்சூழல் பூங்காவிற்கு அவசியமே இல்லை. அரசு தனது முடிவை மறு ஆலோசனை செய்ய வேண்டும்.
ஊட்டியில் மருத்துவ கல்லூரி அமைந்தால்… அதை சர்வதேச ரீதியில் அமைத்தால்… கல்லூரி வீரநடை போடும். நீலகரி மாவட்டம் முழுவதும் மிக்க பயன் அடையும். ஊட்டி சீதோஷனம் சிறப்பாக இருப்பதால் அயல்நாடு சார்ந்தவர்களூம் மேல் சிகிச்சைக்காக ஊட்டி வருவார்கள். நீலகரி மாவட்டம் மாணவர்கள் ஊட்டியில் மருத்துவ கல்லூரியிலேயே மருத்துவம் படிக்லாம்.
ஊட்டி மார்க்கெட் துவங்கி ஊட்டி மத்திய பேருந்து நிலையம் வரை உதகை குதிரை பந்தயம் மைதானம் பரப்பளவில் மிக பெரிது. இங்கு சுற்றுசூழல் பூங்கா அமைப்பதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. மருத்துவ கல்லூரி அமைந்தால் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன் அடைவார்கள். மேலும் லட்ச கணக்கில் அங்கு சிகிச்சைக்காக மக்கள் வருவார்கள்.
பூங்காவா..?
மருத்துவ கல்லூரியா..??
நீலகரி மக்களின் நெடுங்கால விருப்பம் மருத்துவ கல்லூரி தான். அதில் நியாயம் இருக்கிறது. அர்த்தம் இருக்கிறது. இருக்கும் மைதானத்தில் மருத்துவ கல்லூரி கட்டினால் எல்லோரும் பயன் அடைவார்கள்.
அங்கேயே மாணவர் விடுதி மற்றும் மாணவி விடுதி கட்டவும் போதுமான இடம் உள்ளது.
ஊட்டியில் பை-பாஸ் சர்ஜரி அல்லது கேட்ரேக்ட் அறுவை சிகிச்சைக்கு கோவை செல்ல வேண்டிய நிலையே உள்ளது.
இது சாதாரண மக்களுக்கு வீண் செலவு.
அரசு அதிகாரிகள் யோசிப்பார்களா… ?
அரசு பொறுப்புடன் முடிவு எடுக்குமா… .??
ஊட்டியின் தேவை மருத்துவ கல்லூரியே..!