
அவல் நம் வீட்டில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ஆகும். அரிசி நெல்லை ஊற வைத்து இடித்து தட்டையாக்கி பயன்படுத்துவது தான் அரிசி அவல். இதை Poha, flatted rice, rice flakes என்று பல பெயர்களில் அழைப்பார்கள். பொதுவாக அவலில் வெள்ளை அவல், சிவப்பு அவல் என்று இருவகை உண்டு. இதில் வெள்ளை நிற அவலை விட சிவப்பு நிற அவலில் தான் சத்துக்கள் அதிகம். சிவப்பு அரிசியில் இருந்து பெறப்படும் சிவப்பு அவலில் கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி போன்ற சத்துக்களும் நிறைந்திருக்கிறது.
1.செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
காலையில் சிவப்பு அவலை எடுத்துக் கொள்வதால் செரிமானம் தொடர்பான பிரச்னைகள் வராது. இதற்கு அவலில் இருக்கும் நார்ச்சத்து தான் காரணம். அவல் ஏற்கனவே பலமணி நேரம் ஊற வைத்து தயாரிக்கப்படுவதால், Probiotics அதிக அளவில் நிறைந்திருக்கிறது. இது வயிற்றில் உள்ள நன்மை செய்யக்கூடிய பாக்டீரியாவை அதிகரிப்பதோடு குடலில் இருக்கும் தேவையில்லாத Toxins ஐ வெளியேற்றி குடலை சுத்தமாக்கும்.
2.அனீமியாவை குணமாக்கும்.
அனீமியா என்று சொல்லக்கூடிய ரத்தச்சோகை ஏற்படுவதற்கு முக்கியமான காரணம் ரத்தத்தில் இரும்புச்சத்து இல்லாமல் இருப்பதேயாகும். சிகப்பு அவலில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. 100 கிராம் சிகப்பு அவலில் 6.1mg இரும்புச்சத்து உள்ளது. ரத்தச்சோகை பிரச்னையால் அவதிப்படுபவர்கள் சிவப்பு அவலை தினமும் சாப்பிட்டு வர புதிய ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும். இதனால் அனீமியா எளிதில் குணமாகும்.
3. கெட்ட கொழுப்பை குறைக்கும்.
சிவப்பு அவலில் அதிகமாக நார்ச்சத்து இருக்கிறது. 100 கிராம் சிகப்பு அவலில் 3.3 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது உடலில் உள்ள Fat metabolismஐ சீராக்குவது மட்டுமில்லாமல் ரத்தத்தில் இருக்கும் LDL என்ற கெட்ட கொழுப்பையும் குறைக்கும். இதன் மூலமாக ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கக்கூடியது சிவப்பு அவல்.
4. புற்றுநோய் வராமல் தடுக்கும்.
சிவப்பு அவலின் சிவப்பு நிறத்திற்கு இதிலிருக்கும் Anthocyanin என்னும் ஆன்டி ஆக்ஸிடென்ட் காரணமாகும். இது உடலில் இருக்கும் ப்ரீ ரேடிக்கல்ஸ் என்னும் செல் கழிவுகளை நீக்கி செல்கள் சேதம் அடைவதை தடுக்கும்.
இதன் மூலமாக கேன்சர் வரும் காரணிகளையும் அழிக்கக்கூடியது சிவப்பு அவல். மேலும் Cancer fighting nutrition என்று சொல்லக்கூடிய செலீனியம் அதிக அளவில் உள்ளது. Breast cancer, lung cancer போன்ற கேன்சர் செல்களை அழிக்கும் ஆற்றல் சிவப்பு அவலுக்கு உண்டு.
5. சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.
சர்க்கரை நோயாளிகள் அளவாக சாப்பிட சிறந்த உணவு சிவப்பு அவல். வெள்ளை அரிசியை விட அவலில் அரிசியின் மூலமாக கிடைக்கக்கூடிய எல்லா சத்துக்களும் சேதாரம் இன்றி கிடைக்கும். இதில் ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கக்கூடிய Dietary fiber, B complex vitamin போன்ற சத்துக்கள் நல்ல அளவில் இருக்கிறது. இது ரத்த சர்க்கரை வேகமாக ஏறுவதை தடுப்பதோடு ரத்த சர்க்கரை சீராக இருக்கவும் உதவுகிறது. எனவே, இனி சிவப்பு அவலை உணவில் சேர்த்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.
முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை அணுகவும்.