மக்கள் உங்களை இன்னும் சரியா புரிஞ்சுக்கலை தலைவரே!

Jokes in tamil
kalki jokes
Published on

இதே தொகுதியில நான் ஐந்து முறை ஜெயிச்சிருக்கேன், இதில் இருந்து உனக்கு என்னய்யா தெரியுது?

தொகுதி மக்கள் உங்களை இன்னும் சரியா புரிஞ்சுக்கலைன்னுதான் தலைவரே!

******************************

எதிரியை வெல்ல ஆயிரம் வழிகள் இருக்கிறது தளபதி!

அப்புறம் ஏன் மன்னா, உங்களுக்கு ஒரு வழிகூட தெரியாமல் போச்சு!

******************************

மரியாதையா கிரிக்கெட் சேனல் வை மாலா!

வைக்கலேன்னா என்ன பண்ணுவீங்க?

பாத்துக்கறேன்!

என்ன பாத்துக்கறேன்?

நீ என்ன சேனல் வைக்கிறயோ அதை பார்த்துக்கறேன்!

******************************

நம்ம தலைவர் எதுக்கு திடீர்னு எக்ஸ்ரே எடுக்கப்போறார்?

எதிர்க்கட்சித் தலைவர் நேத்து மீட்டிங்ல நம்ம தலைவரை முதுகு எலும்பு இல்லாதவர்னு திட்டினாராம்!

******************************

கட்சியில எந்த முடிவையும் நான்தான் எடுப்பேன்னு நீங்க கட்சிக்கூட்டத்துல பேசினது தப்பாப் போச்சு தலைவரே!

என்னாச்சுய்யா?

கட்சியிலிருந்தே உங்களை எடுத்துட் டாங்க!

******************************

ஏங்க, வெங்காயம் நறுக்கும்போது உங்களுக்கு இன்னைக்கு கண்ணுல அதிகமா கண்ணீர் வருது?

நறுக்கறது நீ செய்யப்போற உப்புமாவுக்குன்னு தெரிஞ்சதினாலதாண்டி!

******************************

உடம்புல சத்து குறைஞ்சு போச்சுன்னு ரெண்டு வருஷமா என்கிட்ட டிரீட்மென்ட் எடுக்கறீங்களே, இப்ப எப்படி?

என் சொத்தும் குறைஞ்சு போச்சு டாக்டர்!

kalki jokes
kalki jokes

******************************

உன் கனவு நிறைவேறும்னு ஜோசியர் சொன்னதுக்கு ஜோசியரை அடிக்கப் போனியா, ஏன்?

என்னை போலீஸ் பிடிச்சுக்கிட்டுப் போற மாதிரி கனவு கண்டேன்!

******************************

நம்ம கட்சி எப்படிய்யா, தேர்தல்ல தோத்துப்போச்சு!

ஊழலை ஒழிப்பேன்னு மீட்டிங்ல பேசறதுக்குப் பதிலா ஊழலை ஒளிப்பேன்னு நீங்க பேசினது தப்பாப் போச்சு தலைவரே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com