மாதம் 145 கூட்டங்கள்; ஒரே நாளில் 27 கூட்டங்களில் கூட பேசியிருக்கிறாராம் பேரறிஞர்!

பேச்சு, எழுத்து, ஓவியம், சினிமா, கலை, இலக்கியம், அரசியல் என்று அனைத்து துறைகளிலும் கோலோச்சிய முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா.
பேரறிஞர் அண்ணா
பேரறிஞர் அண்ணா
Published on

அறிஞர் அண்ணாவின் உயரிய பண்பு என்றால் அவரை ஒரு நாகரிக தலைவன் என்று கூறுவார்கள். அரசியல் என்பது நாகரிகமும் நாணயமும் கலந்த மனித உணர்வுகளின் அடிப்படையில் கட்ட வேண்டிய பளிங்கு மாளிகையேத் தவிர வெறுப்பு, பகை, பழி என்ற அநாகரிக அஸ்திவாரத்தின் மேல் கட்டப்படுகின்ற அரக்கு மாளிகை அல்ல என்பதை செயலில் காட்டியவர் அண்ணா. தன்னுடைய சொந்தக் கட்சியினரை மட்டுமல்ல; மாற்றுக் கட்சியினரையும் அவர்களுக்கே உரிய அடையாளங்களோடு பொதுவெளியில் அடைமொழியில் அழைத்தவர் அண்ணா.

அதனால்தான் எதிரணியில் இருந்த ராஜாஜியை மூதறிஞர் என்றார். மாபொசியை சிலம்புச் செல்வர் என்றார். முழுக்க எதிர்த்து செயல்பட்ட காமராஜரையே பெருந்தலைவர் என்றவர் அண்ணா. ஆச்சரியமூட்டும் வகையில் அண்ணா பயன்படுத்திய சொல்லாடல்களே அவர்களுக்கு நிலைத்தும் போயிற்று. இப்படி மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று அவர்களுக்கு உரிய மரியாதையும், மதிப்பையும் கொடுத்து அனைவரின் உள்ளத்திலும் உயர்ந்து நின்றவர் அண்ணா என்றால் மிகையாகாது.

அவரை மிகவும் பொறுமைசாலி என்று கூறுவர். அப்படி பொறுமையாக இருந்ததற்கு என்ன காரணம் தெரியுமா? தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

அண்ணா மிகவும் வேகமாக எழுதுபவர் தான். ஆனால் எளிதில் எழுதி விடமாட்டார். காலம் கடத்துவார். தள்ளிப் போடுவார். ஆனால் மனதிலோ சொல்ல வேண்டிய விஷயங்கள் குறித்து தீராத சிந்தனையில் மூழ்கி இருப்பார். எழுதத் தொடங்கி விட்டால் நிறுத்த மாட்டார். யாருடைய குறுக்கீடும் இருக்கக் கூடாது என்பதற்காகவே இரவு நேரத்தை எழுத தேர்ந்தெடுத்தார். அவர் பேசிய எழுதிய பல விஷயங்கள் இன்றும் முன்னோடியானவை.

இதையும் படியுங்கள்:
“ஆதாரம் இதோ!” - சட்டப் பேரவையில் அறிஞர் அண்ணா!
பேரறிஞர் அண்ணா

காலத்தை முந்தி கொண்டவை. அவ்வளவு தீவிரமான விஷயங்களை பெரிய படிப்பு இல்லாத ஒரு பெரும் கூட்டத்துக்குப் புரியும் வகையில் வெளிப்படுத்த வேண்டிய நிர்பந்தம் அண்ணாவுக்கு இருந்தது. தொண்டர்களுக்கு புரியாது என்று தீவிரமான விஷயங்களை தவிர்க்க மாட்டார். அவர்களுக்கு கற்பிப்பதற்கான கருவியாகவே எழுத்தை அவர் கையாண்டார்.

நீண்ட கட்டுரைகள் நெடிய உரைகளுக்கு மட்டும் பேர் போனவர் அல்ல அண்ணா. சுருங்கச் சொல்வதிலும் மன்னர். நள்ளிரவு தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்றவர் ஒரு கூட்டத்தை நான்கே வரிகளில் முடித்தார் .

"மாதமோ சித்திரை...மணியோ பத்தரை ...உங்களை கண்களைத் தழுவிக் கொண்டிருப்பதோ நித்திரை ..மறக்காமல் இடுவீர் எமக்கு முத்திரை! "

ஓவியம் மீது அலாதி பிரியும் அண்ணாவுக்கு. சில படங்களும் வரைந்து இருக்கிறார் அவர். அதேபோல் சினிமா பார்ப்பதில் அலாதி ஆர்வம் கொண்டவர். முதல்வரான பிறகும் முண்டாசு கட்டிக் கொண்டு போய் இரவு காட்சி பார்த்து வருவதை நிறுத்தவில்லை.

"சினிமாவை மட்டும் நான் பார்ப்பதில்லை. சினிமாவை மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதையும் சேர்த்து பார்க்கிறேன். மக்களின் எண்ண அலைகளைப் புரிந்து கொள்ளவும் ,அவர்களது ஏக்கங்களை தெரிந்து கொள்ளவும் சினிமாவும் உதவுகிறது" என்று ஒரு முறை சொல்லி இருக்கிறார்.

திருச்சி பிளாசா திரையரங்கில் மாலை காட்சி பார்க்க ஒரு முறை அண்ணா சென்றார். முண்டாசு அவிழ்ந்து விட, மக்களோடு மக்களாக உட்கார்ந்து இருக்கும் முதல்வரை கொண்டாடித் தீர்த்தது கூட்டம்.

1949 செப்டம்பரிலிருந்து ஒன்பது மாதங்களில் அதாவது 1950 மே மாதத்திற்குள் 2300 க்கும் அதிகமான கூட்டங்களில் பேசியிருக்கிறார். ரெண்டு வருடத்துக்குள் 3500 கூட்டங்கள் நடந்தன. சராசரியாக மாதம் 145 கூட்டங்கள். ஒரே நாளில் 27 கூட்டங்களில் கூட பேசியிருக்கிறாராம்! மாலை 5 மணிக்கு ஓர் ஊரில், ஆறு முப்பது மணிக்கு இன்னொரு ஊரில், 8 மணிக்கு மற்றொரு ஊரில், 9.30 மணிக்கு வேறு ஊரில் என்று விடிய விடிய மேடை ஏறியவர் அண்ணா. ஆனால் ஒரு ஊரில் பேசிய விஷயத்தை இன்னொரு ஊரில் பேசியதில்லை.

இதையும் படியுங்கள்:
கலைஞர் வழுக்கைக்கு அண்ணா சொன்ன டிப்ஸ் என்ன தெரியுமா? | கலைஞர் 100
பேரறிஞர் அண்ணா

பேசியதை திரும்பத் திரும்ப பேசும் வழக்கமும் அண்ணாவுக்கு கிடையாதாம். கோவா விடுதலை போராட்டம் பற்றியும் பேசுவார். நெப்போலியன் போனப்பார்ட் பற்றியும் பேசுவார். கோஷிமீன் பற்றியும் பேசுவார்.

தம்பிகளுக்கு அரசியல் ஞானம் வேண்டும் என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருந்தவர் அண்ணா. தன்னைப்போலவே இரண்டாம் கட்ட தலைவர்கள் படையையும் தயார்படுத்தி நாடு முழுக்கவும் கூட்டங்களுக்கு அனுப்பியவர் அண்ணா.

இப்படி பேச்சு, எழுத்து, ஓவியம், சினிமா, கலை, இலக்கியம், அரசியல், கட்சி என்று அனைத்து துறைகளிலும் கோலோச்சிய முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா. அவரால் எப்படி இவற்றையெல்லாம் நன்றாக கையாள முடிந்தது? அதற்கு உறுதுணையாக இருந்தது எது என்றால், அவரின் குடும்ப பின்னணியில் அமைந்த தொழில்தான் என்பதை அவரின் பேச்சின் மூலம் அறிய முடிகிறது.

உச்ச பச்சப் பொறுமைசாலியான அண்ணாவிடம், "எப்படி அண்ணா இப்படி?" என்று கேட்ட தம்பிகளிடம்,

"ஒரு புடவையினூடாக நூற்றுக்கணக்கான நூலிலைகள் ஓடும். அடிக்கடி அறுந்து போகும். பொறுமை இழந்தால் அறுந்த நூலை இணைக்க முடியுமா? ஒரு சேலையை நெய்து முடிக்க முடியுமா?"

என்று கூறி இருக்கிறார் .

நெசவுத்தொழில் குடும்ப பின்னணி அண்ணாவின் பொறுமையில் முக்கியமான அம்சத்தை பெற்றிருந்ததை இதன் மூலம் அறியலாம்.

இதையும் படியுங்கள்:
புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் உண்டா? அறிஞர் அண்ணா சொன்னது என்ன தெரியுமா?
பேரறிஞர் அண்ணா

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com