சலிப்பின்றி வேலை செய்ய... பொமொடோரோ நுட்பத்தை இன்றே தொடங்குங்கள்!

ஒரே இடத்தில் அமர்ந்து அலுத்துப்போனீர்களா? இந்த 'தக்காளி' டெக்னிக் மூலம் வேலை நேரத்தை சுவாரஸ்யமாக்குங்கள்.
பொமொடோரோ நுட்பம் | Pomodoro Technique
பொமொடோரோ நுட்பம் | Pomodoro TechniqueImage credit: AI Image
ச. நாகராஜன்

மங்கையர் மலர், தினமணி, தினமணி சுடர், ஆனந்தவிகடன், குமுதம் பக்தி ஸ்பெஷல், மாலைமலர், தினபூமி, Hindu உள்ளிட்ட 46 இதழ்களில் 6000க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியவர். இதுவரை வெளியான புத்தகங்கள்; Pustaka - 139 புத்தகங்கள் (Paper back, Digital Printed books) Nilacharal - 61 புத்தகங்கள் (Digital books) (FROM LONDON) சென்னை விநாயகா பதிப்பகம், மணிவாசகர் பதிப்பகம் உள்ளிட்ட பதிப்பகங்களின் வெளியீடு 19 புத்தகங்கள் மொத்தம் 219 புத்தகங்கள்.

Updated on

பொமொடோரோ நுட்பம் வரலாறு:

காலையில் தினமும் வேலைக்குச் சென்றவுடன் மேஜை முன் உள்ள நாற்காலியில் அமர்ந்து கம்ப்யூட்டரிலோ அல்லது இதர லெட்ஜர்களை எடுத்தோ வேலை பார்ப்பவர் என்றால் அவருக்குத் தேவையான ஒரு நல்ல வழிமுறை பொமொடோரோ வழி! (POMODORO METHOD).

ஒரே இடத்தில் குந்தி ஸ்க்ரீனை எவ்வளவு நேரம் தான் பார்ப்பது? மனம் எங்கோ இருக்கும் போது வேலை திறம்பட நடக்குமா என்ன?

அலுப்பு, சலிப்பு, போர்.... 'இது என்னடா வேலை...' என்று வெறுப்பும் தோன்றும். இதன் விளைவாக வேலைத் திறனும் குறையும்.

இதை நீக்க மிகச் சிறந்த ஒரு வழியைக் கண்டுபிடித்தார் ஃப்ரான்செஸ்கோ சிரில்லோ (Francesco Cirillo).

இத்தாலியைச் சேர்ந்த இவர் மாணவராக இருந்த போது தினமும் போர் அடிக்கும் ஒரே விதமான வாழ்க்கைமுறையால் சலிப்படைந்தார்.

அதன் விளைவாக அவர் கண்டு பிடித்தது தான் பொமொடோரோ வழி. 'பொமொடோரோ' என்றால் இத்தாலிய மொழியில் 'தக்காளி' என்று அர்த்தம்.

சமையலறையில் பயன்படுத்திய நேரத்தைக் குறிக்கும் டைமர் மெஷின் ஒன்று தக்காளி போல இருக்கும்.

இந்த கிட்சன் மெஷினை உபயோகித்துத் தன் வாழ்க்கைப் போக்கை மாற்றினார் சிரில்லோ.

இதையும் படியுங்கள்:
ஞாபக மறதி உங்களை கஷ்டப்படுத்துதா... இதை செஞ்சா உங்க நினைவாற்றல் சூப்பரா மாறும்!
பொமொடோரோ நுட்பம் | Pomodoro Technique

இந்த டைமர் மெஷினைத் தன் முன் வைத்துக் கொண்டு 25 நிமிடம் முடிந்தவுடன் அதன் மூலம் தெரிந்து கொண்டார். அடுத்த ஐந்து நிமிடம் நிதானமாக ஓய்வெடுத்தார்.

என்ன ஆச்சரியம்? அவரது சலிப்பு நீங்கியது. கவனத் திறன் கூடியது. வேலை சிறப்பாக நடைபெற்றது.

இதை டைம் மேனேஜ்மெண்ட் என்னும் நேரத்தை நிர்வகிக்கும் வழிமுறைக்கு உதவுமாறு செய்தார். அதிலிருந்து உருவானது தான் பொமொடோரோ வழி.

1987-ல் உருவான இந்த 1980-களில் தொழில்துறையில் ஒரு பெரிய புரட்சியையே செய்தது.

பொமொடோரோ நுட்பம் மூலம் உங்கள் வேலை நேரத்தை திட்டமிடுவது எப்படி?

பொமொடோரோ நுட்பம் | Pomodoro Technique
பொமொடோரோ நுட்பம் | Pomodoro Technique

முதலில் நீங்கள் செய்ய வேண்டியதைத் தெரிவு செய்து கொள்ளுங்கள்.

அடுத்து டைமரில் 25 நிமிடத்தை செட் செய்யுங்கள்.

டைமர் உங்களுக்கு 25 நிமிடம் முடிந்ததை அறிவிக்கும் வரை நல்ல கவனத்துடன் உங்கள் வேலையைப் பாருங்கள்.

டைமர் ஒலித்தவுடன் ஒரு ஐந்து நிமிடம் ஓய்வெடுங்கள்.

இதே வழியை திரும்பத் திரும்ப வேலை நேரம் முடியும் வரை செய்யுங்கள்.

நான்கு பொமொடோரோ இடைவெளி வந்தவுடன் 15 முதல் 30 நிமிடம் வரை ஒரு நீண்ட இடைவெளியை எடுத்துக் கொள்ளுங்கள்.

டைமர் என்பது தக்காளி வடிவில் இருந்த சமையலறை டைமராக இருக்கலாம்; உங்கள் போனிலோ அல்லது கம்ப்யூட்டரில் உள்ள ஒரு ‘ஆப்பிலோ’ அல்லது சின்ன கடிகாரத்திலோ கூட இருக்கலாம்.

வேலையை ஆரம்பிக்கும் முன்னர் எத்தனை பொமொடோரோ இடைவெளி வரக்கூடும் என்பதை உத்தேசமாகக் கணித்து அதற்குத் தக வேலைகளைப் பல பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
CM விஜய்யின் அந்த ‘பாசிட்டிவ்’ வைப் பின் ரகசியம் என்ன?
பொமொடோரோ நுட்பம் | Pomodoro Technique

சரி, பொமொடோரோ இடைவெளியில் என்ன செய்வது?

நீர் அருந்தச் செல்லலாம். சின்ன உடற்பயிற்சியைச் செய்யலாம். அல்லது தியானத்தில் அமரலாம். இல்லை என்றால் ஒரு சின்ன நடையை மேற்கொள்ளலாம்.

இந்த உத்தியை உங்கள் வேலைக்குத் தக சற்று மாற்றியும் கூட பயன்படுத்தலாம். 25 நிமிடம் என்பதை சற்று மாற்றியும் பயன்படுத்தலாம்.

பொமொடோரோ நுட்பம் தரும் விளைவு எப்படி இருக்கும்?

நீங்களே உணர்ந்து பார்க்கலாம். வேலைத் திறன் கூடுவதோடு சலிப்பே இருக்காது.

இதை நமது வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளிலும் கூட செயல்படுத்திப் பார்க்கலாம்.

ரெடியா மக்களே?!

logo
Kalki Online
kalkionline.com