அரசியல் அலசல்: ஒன்றியத்தின் கண்டிஷனால் தத்தளிக்கும் தமிழகம்!

Rajapattai ragasiyam
Rajapattai ragasiyamஓவியம் பிள்ளை
Rajapattai Ragasiyam
Rajapattai Ragasiyam

“தரையில் விமானம் இறங்கியது சரியா?” உள்ளே நுழையும்போதே கேள்வியோடு நுழைந்தாள் சீவர சிந்தாமணி.

''ஏர்போர்ட் திறந்துட்டாங்கதானே, விமானம் தரையில் இறங்கினால் என்ன தப்பு?” நான் கேட்டதும், தலையை அசைத்தாள் சிந்தாமணி.

''நான் சொல்ல வர விஷயமே வேறு! இது, அந்தத் ‘தரையில் இறங்கிய விமான’ எழுத்தாளர் பற்றியது! அவங்க முகநூல்ல போட்ட பதிவு ஒண்ணு தேசியம், திராவிடம் எல்லோரையும் உசுப்பு ஏத்தி விட்டது. அவர் தனக்கு, ‘முதல் பெண்மணி’ செய்த உதவியைப் பற்றி பதிவு போட்டு, நன்றி தெரிவிப்பது போல எழுதி இருந்தார். ஆனா, விஷயம் அப்படியே திசை மாறிபோச்சு.

நவராத்திரி டைம்ல அந்த எழுத்தாளர், ‘முதல் பெண்மணி’ தன்னோட வீட்டு கொலுவுக்கு வந்ததைப் பற்றி பெருமையாகப் பதிவு செய்திருந்தார். ‘முதல் பெண்மணியே தனக்கு நெருக்கம்’னு சொல்லி, வெள்ளத்துக்கு உதவி கேட்டு, அமைச்சர்கள், அதிகாரிகள்னு போனை சுழற்றி இருக்கார். முதல் பெண்மணிக்கு வேண்டியவர்னு அவங்களும் பயந்துபோய், பதில் சொல்லி இருக்காங்க. அதோடு நின்றிருக்கலாம். முதல் பெண்மணிகிட்டயே போன் செய்து தனக்கு உணவு தேவைன்னு கேட்டு வாங்கி இருக்காங்க.

இதை பதிவாகப் போடாமல் இருந்தால், விஷயம் அதோடு அமுங்கி இருக்கும். ஆனால், இதை பதிவாகப் போட்டதால், ஆளும் கட்சியில் பெரிய பிரச்சினையே ஓடிக்கிட்டு இருக்கு. ‘விவிஐபிங்களுக்கு மட்டும் உதவி செய்றாங்க. பாமர மக்களுக்கு ஒண்ணும் செய்யலை'னு சமூக ஊடகங்களில் இந்தப் பதிவு பெரும் புயலைக் கிளப்பியது. அதனால எல்லோருக்கும் பிரச்சினை!

மூணு நாளுக்குப் பிறகு, ‘விமான எழுத்தாளர்’ அந்தப் பதிவை அவரே நீக்கிட்டார். இருந்தாலும், அந்தப் பிரச்சினை இன்னும் ஓடிட்டுத்தான் இருக்கு. அதனால, விமானம் தரையில் emergency landing செய்ததுல, air controller பெயர் டேமேஜ் ஆயிடுச்சு!'' சிந்தாமணி சொல்லி முடித்தாள்.

இத்தனை பிரச்சினை ஏன் ஏற்பட்டது? அரசு தயார் நிலையில் இல்லையா? முடிவு எடுக்க வேண்டியவங்க, எல்லா முடிவுகளையும் அதிகாரிகள் கையில கொடுத்தால் இப்படித்தான் நடக்கும். சென்னை முழுவதும் மக்கள் கொதிச்சுக்கிட்டு இருக்காங்க. இதில் எல்லாரையும் விட மேயர் நிலைதான் ரொம்ப பரிதாபம்.

முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கணும்னு அவங்களுக்குத் தெரியவே இல்லை. எல்லாம் முடிஞ்சு, தண்ணீர் வடிஞ்சு இரண்டு நாள் கழிச்சு, பால் பாக்கெட்டோட தன்னை தேர்ந்தெடுத்த வார்டு மக்களை பார்க்க போயிருக்காங்க. “செத்தவங்களுக்கு பால் ஊத்தவா வந்திருக்கீங்க''ன்னு அந்த வார்டு பெண்கள் முற்றுகை போராட்டம் செஞ்சிருக்காங்க. மேயரம்மா ரொம்பவே நடுநடுங்கி போயிட்டாங்களாம். மக்கள்கிட்ட அவ்வளவு உக்ரமாம்.

ஓவியம் பிள்ளை

''சரி! நிவாரண நிதி ஏதாவது மத்திய அரசு ஒதுக்கி இருக்காங்களா?'' நான் கேட்டதும், சட்டென்று உள்ளே நுழைந்த ராஜதானி ராஜப்பா, சேரை இழுத்துப் போட்டு அமர்ந்தபடி, பரபரப்புடன் பேசத் தொடங்கினார்.

''நாலாயிரம் கோடி என்னாச்சு?ன்னு தெருவுல எல்லோரும் கேட்கிறது தில்லிக்கு தெரியாம இல்லை. வெள்ள நிவாரணத்துக்கு 5,060 கோடி நிதி தேவைன்னு முதல்வர் கேட்ட உடனே, ராஜ்நாத் சிங் சென்னைக்கு பறந்து வந்து, எல்லா இடங்களையும் பார்த்துட்டாரு. அதோட, மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து  ‘450 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை எப்படி செலவழிக்கிறீங்கன்னு எங்களுக்கு அப்பப்ப ரிப்போர்ட் அனுப்பணும்’னு பல கண்டிஷன்கள் போட்டிருக்காராம். முதல்வர் எல்லாத்துக்கும் தலையை மட்டும் அசைச்சாராம்” என்று ராரா சொன்னார்.

இதையும் படியுங்கள்:
ஆட்சியாளர்களின் அசோகா அல்வா... வருது புது அறிவிப்புகள்!
Rajapattai ragasiyam

''முதல்வர் வேற என்ன செய்ய முடியும்?''

''அதுதான் பிரச்சினையே! முதல்வருக்கே, ‘ஏண்டா நாற்காலியில் உட்கார்ந்தோம்’ என்கிற நிலையாம். பிள்ளையை துணை முதல்வரா ஆக்கலாம்னு சொல்றாராம். ஆனா, அவரும் மக்கள் எதிர்ப்பைப் பார்த்து மிரண்டுபோய், ‘இப்ப வேண்டாம்’னு சொல்றாராம். மொத்தத்துல, துடுப்பு இல்லாத படகு போலதான் போய்க்கிட்டு இருக்கு இந்த ஆட்சி.

ஓவியம் பிள்ளை

''சரி, தில்லி விஷயம் என்னாச்சு?''

''வசுந்தரா ராஜே சிந்தியா மகன் துஷ்யந்த் பாஜக எம்எல்ஏக்களை கடத்தி வச்சுக்கிட்டு, ‘எங்கம்மாவுக்கு நாற்காலி கொடுத்தாதான் அவங்களை வெளியே விடுவேன்’னு சொல்றதா ஒரு தகவல் வந்திருக்கு. ‘அடுத்த தேர்தல்ல துஷ்யந்தை மத்திய அமைச்சரா நியமிக்கிறோம்’னு வாக்கு கொடுத்ததால, வசுந்தரா ராஜே சிந்தியா இறங்கி வந்திருக்காங்களாம்!''

Vasundhara Raje Scindia
Vasundhara Raje Scindia

“இதுல வேற எதுவும் இரகசியங்கள் இல்லையா?”

ராரா சொன்னார், ''ரகசியமா? மீண்டும் இலை கட்சியோட கூட்டணி பேச ஆரம்பிச்சு இருக்காங்க. மூணு மாநில தேர்தல் வெற்றிக்குப் பிறகு, எட்டுவழிக்காரர் மனசுலயும் ஒரு மாற்றம் ஏற்பட்டு இருக்காம். இது சம்பந்தமா சீக்கிரம் அறிவிப்பு வரலாம்னு பேசிக்கறாங்க.”

இதையும் படியுங்கள்:
‘காலச்சக்கரம் நரசிம்மா’வின் ராஜபாட்டை ரகசியம்..!
Rajapattai ragasiyam

சிந்தாமணி சொன்னாள், ‘‘அஞ்சாநெஞ்சர்’ மகன் அப்பல்லோவுல அட்மிட் ஆகி இருக்கார். அவருக்கு மூளையில கட்டிகள் இருந்திருக்கு. திடீர்னு மயங்கி விழுந்த அவருக்கு, ஆபரேஷன் நடந்திருக்கு. இதனால அப்பல்லோவுக்குப் போன முதல்வர், அங்கு இருபது நிமிஷம் இருந்தாராம். அதோட, அண்ணனைப் பார்த்து ரொம்பவே உருகிட்டாராம். விரைவில், ‘நாளை நமதே’ மாதிரி அண்ணன் தம்பி இணையறதோட, அண்ணனுக்கு கட்சியில பதவி கூட கிடைக்கலாம்னு பேச்சு அடிபடுது'' என்றாள் சிந்தாமணி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com