தாடிக்கு ஒரு ரூல்; பெரிய மீசைக்கு ஒரு ரூல்! இதில் பராமரிப்புத் தொகை வேறு... எங்கு தெரியுமா?

Police
Police
Published on

ஒரு காலத்தில் மீசையை வைத்து தான் அவரது மரியாதை அளவிடப்பட்டது. அந்த காலத்தில் அரசர்கள் சற்று பெரிய மீசையை வைத்திருந்தனர். பிற்காலத்தில் கூட அதிகாரம் செய்ய நினைப்பவர்கள் பெரிய முறுக்கு மீசையை வைத்திருந்தனர். அதிகார தோரணையை காட்டும் மீசைகள் பெரியதாக இருக்கும். இதில் புலி வால் மீசை, முறுக்கு மீசை, இறால் மீசை, தொங்கு மீசை, கட்டை மீசை என பலவகைகளில் வைத்திருப்பார்கள். பிற்காலத்தில் தொங்கு மீசை சாந்தமானவர்களின் அடையாளமாக பார்க்கப்பட்டது. 

தில்லு முல்லு திரைப்படத்தில் தேங்காய் சீனிவாசன் "மீசை எவ்வளவு பெரிசா இருக்கோ, அந்த அளவுக்கு அவங்க மனசும் பெரியதாக இருக்கும்" என்று வசனம் பேசி இருப்பார். ஆனால், அதற்கெல்லாம் நிஜத்தில் சம்மந்தம் இல்லை. பெரிய மீசை என்பது கம்பீரம், தோரணை மற்றும் அதிகாரத்தின் அடையாளமாகத்தான் பார்க்கப்படுகிறது.

காவல்துறை மற்றும் ராணுவத்தில் மீசை தொடர்பான சில கடுமையான விதிகள் உள்ளன.

இந்திய காவல் துறை சீருடை விதிகள் 1954 இன் படி, காவல்துறை அதிகாரிகள் சீருடையில் இருக்கும் போது அவர்கள் தாடி வைக்கக் கூடாது. மீசை வைப்பதும் எடுப்பதும் அவரது தனிப்பட்ட விருப்பம். ஆனால், சில மதரீதியான சம்பிரதாயங்களுக்காக, சில நாட்கள் வரை தாடி வைக்க வேண்டும் என்றால் உயரதிகாரியின் அனுமதி பெற வேண்டும். ஆனால், இந்த அனுமதி சில வாரங்களுக்கு மட்டுமே! 

இதையும் படியுங்கள்:
சாதுவா தெரியும், சீண்டினால் போச்சு ... உலகின் மிகவும் ஆபத்தான 8 நாய் இனங்கள்!
Police

சில இந்திய மாநிலங்களில், போலீஸ்காரர்கள் பெரிய மீசை வைத்திருப்பதற்காக பராமரிப்பு தொகையை பெறுகிறார்கள்! இந்திய போலீஸ் சீருடை விதிகளின்படி, போலீஸ்காரர்கள் மீசையை நேர்த்தியாக டிரீம் செய்து, தாடியை முழுவதும் மழித்து இருக்க வேண்டும். இந்த விதி பிரிட்டிஷ் காலத்தில் இருந்தே இருந்துள்ளது. பிரிட்டிஷ் காலத்தில் இருந்தே தினசரி தாடியை மழிக்க வேண்டும் என்பது கட்டாயம். அவ்வாறு மழிக்கப்படாதவர்ககள் மீது சிறிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

தற்போது மாறி வரும் சூழலில் போலீஸ்காரர்கள் பலரும் மீசை வைப்பதில்லை. முன்பு உத்தரப்பிரதேச காவல் துறையைச் சேர்ந்த காவலர்களுக்கு பெரிய மீசை வைத்திருப்பதற்காக மாதம் ₹50 வழங்கப்பட்டு இருந்தது. நெடுங்காலம் இந்த தொகை உயர்த்தப்படாமல் இருந்தது. தற்போது உ.பி அரசு இந்த பராமரிப்பு தொகையை உயர்த்தி ₹250 ஆக வழங்கியுள்ளது. 

உ.பி தவிர, மத்தியப் பிரதேசத்தின் சில மாவட்டங்களில் காவலர்களுக்கு பெரிய மீசை வைப்பதற்காக மாதம் ₹33 பராமரிப்பு தொகையாக வழங்கப்படுகிறது. இந்த பராமரிப்பு தொகை என்பது மிகவும் குறைவு. இதை வைத்து காவலர்கள் மீசையை பராமரிப்பு செய்ய முடியாது. ஆயினும் பாரம்பரிய முறைப்படி அது வழங்கப்படுகிறது. பீகாரிலும் சில மாவட்டங்களில் போலீஸ் காரர்களுக்கு மீசையை பராமரிக்க ஒரு தொகை வழங்கப்படுகிறது. 

இதையும் படியுங்கள்:
மனிதன் கெட்டுப் போவதற்கு 'அமிக்டலா'வும் (Amygdala) ஒரு காரணம்... இந்த 'அமிக்டலா' யார்?
Police

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தாடி மற்றும் மீசை தொடர்பாக வெவ்வேறு விதிகள் உள்ளன. சில மாநிலங்கள் தகுதிவாய்ந்த அதிகாரி அல்லது மூத்த அதிகாரியின் ஒப்புதலுடன் மத காரணங்களுக்காக தாடியை வைத்துக் கொள்ள அனுமதி உள்ளது. இதில் சீக்கிய மதத்தினருக்கு விலக்கு உள்ளது.

நாட்டில் சீக்கிய மத காவலர்களைத் தவிர மாற்று மதத்தவர் யாரும் தாடி வைக்க சட்டம் அனுமதிக்க வில்லை. சீக்கியர்கள் ராணுவத்தில் சேர்ந்தாலும் அவர்களுக்கு தாடி வைக்கவும் தலைப்பாகை வைத்துக் கொள்ளவும் அனுமதி உள்ளது. மாற்று மதத்தை சேர்ந்த அனைவரும் கட்டாயம் முடியை ஒட்ட வெட்டிக் கொள்வதும் தாடியை எடுப்பதும் கட்டாயம். இராணுவத்தின் சில பாரம்பரிய பிரிவுகளில் பெரிய மீசைகள் வைத்துக் கொள்வது கட்டாயம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com