சிரி(று)கதை - வாழையடி வாழை - boomer to gen beta!

Sirikathai: Vazhaiyadi vaazhai..
ஓவியம்; பிரபுராம்
Published on

டிசம்பர் 31, 2024 காலை பத்து மணியளவில், Gen Z அக்ஷ்தாவுக்கு லேசாக வலி ஆரம்பித்தது. கணவன் Millennial அனிருத்திடம் சொல்லவே,'வா வா ..வீட்ல இருக்கவேணாம்; ஹாஸ்பிடல் போலாம் என்றபடியே', தன் மாமியார் Gen X வித்யாவிடம் போய்.. 'ஆன்டி.. அக்ஷுக்கு பெயின் ஸ்டார்ட‌ ஆயிடுச்சு, நான் கார் எடுக்கறேன்; நீங்க அவள கூட்டிண்டு வந்துருங்க' என்றான். 

ஸ்டவ்வை அவசரமாக ஆஃப் செய்த வித்யா, தன் கணவன் GenX பாலுவிடம், 'நீங்க உங்க அம்மாவ (ராஜம் baby boomer) பாத்துக்கோங்க. நம்ம குழந்தைக்கு லேபர் பெயின் வந்துருச்சு. நான் ஹாஸ்பிடல் கெளம்பறேன்,' எனக் கூறியபடியே ஒரு பையில் தேவையான பொருட்களை கவனமாக எடுத்துக்கொண்டாள். அதில் மொபைலும், சார்ஜரும் அடக்கம்..

Baby boomer ராஜத்திற்கு சமீப காலமாக காது சரிவர கேட்பதில்லை. அவள் அறையில் இருந்து வெளிவந்தவள், வீடு ஏதோ களேபரமாக இருந்ததை பார்த்து, 'பாலூஊஊஊ.. என்னாச்சு?' எனக் கேட்டாள். மாமியாரின் குரலைக் கேட்ட வித்யா.. 'அக்ஷ்ஷூ.. பாட்டிகிட்ட blessings வாங்கிக்கோ' என்றாள்.

வலியுடனே, அக்ஷ்ஷு, 'பாட்டி நான் ஹாஸ்பிடல் போறேன். பெயின்‌ வந்துருச்சு. Bless பண்ணுங்க' என்றாள். பாட்டிக்கு காது சரிவர கேட்கவில்லை என்றாலும், 'இன்னிக்கு வருஷ கடசீ.. நாளைக்கு புள்ள பெத்துக்கோ. generation beta லிஸ்ட் ல வந்துரும் உன் குழந்த' என்றவுடன், பரபரப்பாக இருந்த எல்லோருக்கும் சிரிப்பு வந்துவிட்டது. பாட்டி Boomer என்றாலும், எல்லாவற்றிலும் அப்டேடட் குயின்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: கண்ணுக்குத் தெரியாதவன் கதை சொல்கிறேன்!
Sirikathai: Vazhaiyadi vaazhai..

பேத்தி ஹாஸ்பிடல் சென்றவுடன், மருமகள் வித்யாவிடம் வாட்ஸ்ஆப்பில் பேத்தியை பற்றி விசாரித்துக் கொண்டிருந்தாள். தன் உறவினர் மற்றும் நண்பர்கள் வாட்ஸ்ஆப் குழுக்களில் தன் பேத்தியின் பிரசவத்தைப் பற்றித் தெரிவித்தாள். பூஜை அறையில் அமர்ந்து ஸ்லோகங்கள் கூறினாள். மகன் பாலுவிடம், 'நான் தனியா இருந்துக்கிறேன். நீ வேணா ஹாஸ்பிடல் போய்க்கோ' என்றாள். பாலுவோ 'வேண்டாம்மா. மாப்ள இருக்கார் அவ பக்கத்துல. டாக்டர்ஸ் வந்து வந்து பாத்துட்டு இருக்காங்க. தேவப்பட்டா நான் போறேன்' எனக் கூறிவிட்டு, குழந்தை எந்த நேரத்தில் பிறந்தால் என்ன நட்சத்திரம் என்ன ராசி என தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கைபேசியை தொந்தரவு செய்து கொண்டிருந்தார்.

ஹாஸ்பிடலில் அனிருத், அக்ஷுக்கு ஆறுதலாக அருகில் அமர்ந்தபடியே, பேசிக்கொண்டு இருந்தான். வித்யாவும் மகளுக்கு  ஆதரவாக ஏதாவது சாப்பிட குடுத்தபடியே இருந்தாள். சீஃப் டாக்டர் வந்து பார்த்து, 'ஒண்ணும் பயமில்ல. இன்னும் கொஞ்ச நேரத்துல இவங்கள லேபர் வார்டுக்கு கூட்டிட்டு போயிடுவோம். நார்மல் டெலிவரி தான் மோஸ்ட்லி' எனக் கூறிவிட்டு, அங்கிருந்த நர்ஸுக்கு சில இன்ஸ்ட்ர்க்ஷன்ஸ் குடுத்துவிட்டு நகர்ந்தாள்.

'அனிருத் நீயும் வருவல்ல லேபர் ரூமுக்கு?' என அக்ஷ்ஷூ கேட்க.. 'கண்டிப்பா கண்டிப்பா' என பதிலளித்தான்.

ஒரு வழியாக இரவெல்லாம் வலியுடன் போராடிய அக்ஷுவுக்கு, புத்தாண்டின் விடிகாலையில், பெண் குழந்தை பிறந்தது. அனிருத்தோ மகிழ்ச்சியை, பிரசவ காலம் முதல் குழந்தை பிறப்பு வரை நடந்த சில சம்பவங்களை இன்ஸ்டாவில் ஸ்டோரியாக பதிவேற்றம் செய்தான். அன்பான மகள் வந்தாள்.. அம்பானி நான் ஆகிறேன் என‌ கேப்ஷன் போட்டிருந்தான்.. 

வித்யா, பாலு, ராஜம் எல்லோரும் ஆனந்தத்தைக் கைபேசியில் ஸ்டேட்ஸ் வழியாக வெளிக்காட்டிக் கொண்டிருந்தனர். 

ராஜத்திற்கு பேத்தியையும், கொள்ளு பேத்தியையும் உடனே பார்த்து விடவேண்டும். பாலுவிடம் ஹாஸ்பிடல் போலாம் வா எனக் கட்டளையிட்டு உடனே வந்து விட்டாள்.

வந்தவள் குழந்தையை பார்த்து  ரசித்து விட்டு, தன் மொபைலில் ஒரு க்ளீக் செய்தாள். அதுவும் செல்ஃபி. 'Me  boomer with gen beta kid. Thanks to God.' என எழுதி facebook , whatsapp status ல் பதிவு செய்தாள். எல்லோரும் சிரிக்க, 'gen beta kid இவ.. என்னல்லாம் challenges இருக்குமோ இவ வளரறப்போ! முதல்ல குழந்த கைல செல்ஃபோன் குடுக்கக்கூடாது' என்றாள்.

இதையும் படியுங்கள்:
இந்தியா - அறிய வேண்டிய சில ஆச்சரியமான உண்மைகள்!
Sirikathai: Vazhaiyadi vaazhai..

எல்லோரும் அவளைப் பார்க்க, அன்று பிறந்த gen beta kid ம்... 'இவ்ளோ நேரமா, கைல செல்ஃபோன் வச்சிட்டு இருந்த நீங்க, என்ன செல்ஃபோன் யூஸ் பண்ணக் கூடாதுன்னு சொல்றீங்களா? வர்றேன் வர்றேன்.. வீட்டுக்கு வந்து டெக்னாலஜிலயே வளரப்போற என்ன மாதிரி கிட்ஸ் பத்தி உங்களுக்குப் புரிய வக்கறேன்'... என மனதில் நினைத்தபடி சிரித்தது!

ராஜமோ..‌. 'குழந்த சிரிக்கறது பாரு. பகவான் அதுக்கு பூ காமிச்சிருப்பார். அதான்' என்றாள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com