கடிதம் போட்டால் 'பாம்பு கடி' சரியாகுமா..?

Snake Bite
Snake Bite
Published on

ஆந்திராவில் உள்ள போல் ரெட்டிபாளையம் என்ற ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டராக பல ஆண்டுகள் முன் பணியாற்றிய நரசைய்யா என்பவர் பாம்பினால் கடிப்பட்டவர்களை மந்திரம் உச்சரித்து காப்பாற்றியுள்ளார். யாரேனும் பாம்பினால் கடிப்பட்டால் செய்ய வேண்டியது இதுதான்.

நரசய்யாவுக்கு ஒரு தந்தி அனுப்ப வேண்டும். அது கிடைத்தவுடன் நரசய்யா தன் வேட்டியிலிருந்து ஒரு துண்டை கிழித்து எடுத்துக்கொண்டு ரயில் நிலையத்தில் இருக்கும் தன் குடியிருப்பின் பின்புறம் நிற்கும் ஒரு மரத்தின் கிளையில் ஒரு மந்திரத்தை முணுமுணுத்து கட்டிவிடுவார். அவ்வளவுதான். வெகு தூரத்தில் கடிபட்டவர் எழுந்து விடுவார். கடித்த விஷப்பாம்பு இறந்து விடும். இந்த மரத்தில் இப்படி கட்ட பட்ட துணி துண்டுகள் டஜன் கணக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்தவர்கள் பலர் உண்டு. இந்த அதிசயத்தை பற்றி அன்று பேசாதவர்கள் இல்லை.

பிரபல ஆட்கொல்லி புலி வேட்டைக்காரர் ஆண்டர்சன் அதை பற்றி தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமல்ல இது சம்பந்தமான தன் தனிப்பட்ட அனுபவத்தையும் எழுதியுள்ளார். ஒரு நாள் அவரது பக்கத்துக்கு வீட்டில் ஒரு நாகம் வந்து விட்டது. அதை பிடித்து துணிப்பையில் போடும் போது அசம்பாவிதமாக பாம்பு இவர் கையிலிருந்து துள்ளி அவரது கட்டை விரலை கடித்து விட்டது.

அனுபவசாலியான அவர் பதட்டப்படாமல் பாம்பை மறுபடியும் பிடித்து பையில் அடைத்து வைத்து விட்டு காரை எடுத்து கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு போனார். ஆனால், அங்கு ஆண்டை டோட் இல்லை என்று சொல்லி வேறு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டனர்.

இதற்கிடையில் ஆண்டெர்சனின் மனைவி நரசய்யாவுக்கு ஒரு தந்தி அனுப்பி விட்டார். வேறு மருத்துவமனைக்கு போகும் முன்னே ஆண்டர்சனுக்கு உடல் சோர்ந்து மயக்கம் வரும் போலாகிவிட்டது.

இதையும் படியுங்கள்:
கண் எதிரில் பாம்பு... எஸ்கேப்.... ஆவது எப்படி?
Snake Bite

ஊசியை போட்டு கொண்டு வீடு திரும்புகையில் அவர் உடல் நிலை முற்றிலும் நன்றாகி விட்டது. தன் மனைவியின் மூலம் நரசய்யாவுக்கு தந்தி அனுப்பப்பட்டத்தையும் அதற்கு patient cured snake died என்ற அவரிடமிருந்து பதில் தந்தி வந்ததையும் அறிந்த அவர் நேராக தன்னை கடித்த பாம்பை பிடித்து வைத்திருந்த கூடையை திறந்து பார்த்தார்.

அது இறந்து விட்டிருந்தது மட்டுமல்லாமல் இறந்து பல மணி நேரம் ஆகிவிட்டது போல உலோகம் போல விரைத்திருந்தது. தான் பிழைத்ததற்கு காரணம் தாமதமாக போடப்பட்ட ஊசியை விட நரசய்யாவின் மந்திரம் தான் காரணம் என்று முழுமையாக நம்பினார் ஆண்டர்சன். மந்திரத்தால் மாங்கனியும் விழும், பாம்பு கடியும் குணமாகும். ஏன் என்றால் அது நம்பிக்கை நிறைந்த அந்த காலம்.

இதையும் படியுங்கள்:
பாம்புக்கடியால் இறந்தவர்களில் பலர் பயத்தால் இறந்தவர்களே! பாம்பு கடித்தால்...
Snake Bite

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com