
துபாய், சவூதி அரேபியா போன்ற நாடுகள் தங்களிடம் உள்ள எண்ணெய் வளங்களை பயன்படுத்தி பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டுள்ளனர். ஆனால், இதுபோன்ற முக்கியமான வளங்கள் இருந்தும் சில நாடுகள் அதைப் பயன்படுத்தாமல் இருக்கின்றனர். என்னென்ன நாடுகள்?
காங்கோ ஜனநாயகக் குடியரசு DRC (Democratic Republic of Congo) நாட்டில் உலகின் அனைத்து மின்சார வாகனங்கள், ஸ்மார்ட்போன்களுக்கு முக்கியமாகத் தேவைப்படும் கோபால்ட்(Cobalt) இருப்பு 60% இந்த நாட்டில் தான் கிடைக்கிறது. வறுமை, மோதல், அங்குள்ள நலிவடைந்த நிறுவனங்களால் அந்த நாட்டில் இதைக் கையாள முடிவதில்லை. இதோடு வெளிநாட்டு சுரண்டல், தேவையான உள்கட்டமைப்பு இல்லாமை, உள்நாட்டு மோதல்கள் அந்த நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கின்றன.
வெனிசுலா உலகளவில் மிகப்பெரிய எண்ணெய் இருப்புக்களைக் கொண்டது வெனிசுலா(Venezuela). இருப்பினும் பல ஆண்டுகளாக அங்கு மேற்கொள்ளப்படும் தவறான மேலாண்மை (management), நிலையான அரசியல் இல்லாமை, பிற நாடுகளிடம் இருந்து எண்ணெய் ஏற்றுமதியை அதிகமாகச் சார்ந்திருப்பது ஆகியவை அந்த நாட்டின் பணவீக்கம், உணவுப் பற்றாக்குறை மற்றும் பொருளாதாரச் சரிவுக்கு வழிவகுக்கிறது.
நைஜீரியா ஆப்பிரிக்காவின் முன்னணி எண்ணெய் உற்பத்தியாளராக இருப்பது நைஜீரியா(Nigeria). இப்படி பரந்த பெட்ரோலிய வளங்கள் இருந்த போதிலும், அங்கு நிகழும் ஊழல், உள்நாட்டு போர்கள், மோசமான முதலீட்டு உத்திகள் மில்லியன் கணக்கான மக்களை வறுமையில் வைத்திருக்கின்றன.
மடகாஸ்கர் அரிய மண் தாதுக்கள்( rare earth minerals), பல்லுயிர் (biodiversity) வளம் நிறைந்த மடகாஸ்கர் (Madagascar) ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக தொடர்கிறது. நிலையான அரசியல் இல்லாமை, அங்கு நிகழும் சுற்றுச்சூழல் சீரழிவு, தேவைப்படும் நிலையான வளர்ச்சிக்குத் தடையாக உள்ளன. அதே நேரத்தில் அங்கு செய்யப்படும் சுரங்க பணிகள்(mining) உள்ளூர் சமூகங்களுக்குச் சற்று லாபம் வர பயனளிக்கிறது.
மொசாம்பிக் அதிக இயற்கை எரிவாயு (natural gas) இருப்புகளைக் கொண்ட மொசாம்பிக்கில் (Mozambique) மறைக்கப்பட்ட ஊழல்கள், தாமதமாக அரங்கேறும் உள்கட்டமைப்பு திட்டங்கள் காரணமாக வறுமையில் போராடி வருகிறது. பல்வேறு சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும் இந்தக் காரணங்களால் மொசாம்பிக் பொருளாதார ரீதியாக பலவீனமாகவே உள்ளது.
இந்த வறுமைக்குப் பின்னணியில் உள்ள முக்கியமான காரணங்கள்:
1. ஊழல் மற்றும் தெளிவற்ற நிர்வாகம்.
2. ஒற்றை வளத்தை அதிகமாக நம்பியிருப்பது.
3. பொருளாதார பன்முகத்தன்மை இல்லாமை (Lack of economic diversification).
4. அங்கு நிகழும் வெளிநாட்டு சுரண்டல், அதன் நியாயமற்ற ஒப்பந்தங்கள்.
5. இறுதியில் ஏற்படும் சுற்றுச்சூழல் சேதம்.