சோவியத் யூனியன்: லெனின் எழுதிய கடிதம்... காணாமல் போய் கிடைத்த மர்மம்!
மார்க்ஸ் முதல்முறையாக கம்யூனிஸ்ட் புரட்சி நடக்கும் என்று நம்பினார். ஆனால், அப்படி நடக்கவில்லை. முதலில் ரஷ்யாவில் பின் சீனாவிலும் புரட்சி வென்றது.
லெனின் ஒரு நேர்மையான, பொறுப்பு உள்ள தலைவராக இருந்தார். எதிரிகள் சுட்டதில் படுத்தபடுக்கையாக மாறி 1924ல் மறைந்தார். அவரது தியாகம் உலகம் உள்ளவரை நீடிக்கும்.
அவர் இறக்கும் சில நாட்கள் முன் போலிட்பீரோ (மத்திய செயற்குழு)விற்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் இருந்தது முக்கியமான 2 விஷயங்கள்.
1. தேசிய இனங்கள் சுயநிர்ணய உரிமை கோரினால் உடனே கொடுக்க வேண்டும் என்று எழுதி இருந்தார்.
2. அடுத்து தனக்குப் பின்னர் கட்சி அல்லது அரசு தலைவராக ஸ்டாலின் வரக்கூடாது என்றார். ஏன் அப்படி எழுதினார் என்று தெரியவில்லை.
இந்தக் கடிதத்தைத் தனது மனைவி குருப்ஸ்கயாவிடம் கொடுத்தார். அதை அவர் படித்தாரா என்று தெரியவில்லை. லெனின் இறந்த உடன் அந்தக் கடிதத்தை ஸ்டாலினிடம்தான் கொடுத்தார். ஸ்டாலின் அந்தக் கடிதத்தைத் தன்வசம் வைத்துக்கொண்டார்.
லெனினுக்கு பிறகு தலைவராக ஸ்டாலின்தான் வந்தார். மேலும், தேசிய சுயநிர்ணய உரிமை யாருக்கும் தரவில்லை. சோவியத் யூனியன் மட்டுமே அவருக்குப் பிடித்து இருந்தது.
ஸ்டாலின் செய்த ஒரே நல்ல விஷயம் உலகில் நாசிசம் (ஹிட்லர்) தலைதூக்க விடவில்லை. ஆனால், உள் நாட்டில் பெரிய சர்வாதிகாரியாக விளங்கினார். தன்னை எதிர்க்கும் யாராக இருந்தாலும் அவர்களைக் கொன்றுவிட்டார்.
டிராட்ஸ்கி ஐரோப்பாவில் தஞ்சம் புகுந்தார். அங்கு இருந்தபடியே சோவியத் பத்திரிகைக்கு ஸ்டாலின் பற்றி விமர்சனங்கள் எழுதினார். ஸ்டாலின் எரிச்சல் அடைந்தார். தனது ஆளை வைத்து ட்ராட்ஸ்கியை கொல்ல சதி திட்டம் தீட்டினார். முதல் முறை ட்ராட்ஸ்கி தப்பித்துவிட்டார். ஆனால், இரண்டாம் தடவை ட்ராட்ஸ்கி கொல்லப்பட்டார்.
ஸ்டாலின் 1953ல் இறந்தார். அப்போது அவர் மகள் அமெரிக்கா சென்று தங்க முடிவு செய்தார். விமான நிலையத்தில் நிருபர்கள் அவரிடம் அவர் அப்பாவைப் பற்றி கேட்டார்கள். அதற்கு.. “அவர் ஒரு அசூரன்…!“ (devil) என்று சொல்லி போய்விட்டார்.
கட்சி மாநாடு குருசேவ் தலைமையில் நடந்தது. அதாவது 1953-54ல். அப்போதுதான் லெனின் எழுதிய கடிதம் வாசிக்கப்பட்டது. அதற்குள் குருசேவ் சில சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். ஆனால், சோவியத் யூனியனில் உள்ள பல தேசிய இனங்கள் தேசிய சுயநிர்ணய உரிமை கோரினார்கள். போராடவும் செய்தார்கள். வேறு வழியின்றி சோவியத் யூனியன் சிறு சிறு நாடுகளாக பிரிந்தது. உலகமயமாக்கம், தாராளவாதம் மற்றும் பல விஷயங்களில் மாற்றம் ஏற்பட்டது.
சோவியத் யூனியன் துண்டுத்துண்டாக போனது. ரஷ்யா, தான் ஒரு வல்லரசு என்ற நிலையைத் தவறவிட்டது.
************
இப்போது நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் உள்ளது. இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காட்டும் நாடாக இருந்த போதிலும்… மொழி வழி மாநிலங்களாக இருந்தாலும்... இப்போது தேசிய இன உணர்வு ஓங்கிக்கொண்டே இருக்கிறது.
இது தேசிய சுயநிர்ணய உரிமை போரட்டங்களாக மாற பெரிதும் வாய்ப்பு உள்ளது.
இந்தியா வல்லரசாக மாற வேண்டும். அடுத்த கட்டம் அதுதான். மக்கள் பிரச்னைகள் இல்லாமல் வாழ வேண்டும். இது நடந்தே தீரும். நம்பிக்கையுடன் இருப்போம்!