சிறப்புக் கவிதை; நடமாடும் தெய்வங்கள்!

செப்டெம்பர் - 5 ஆசிரியர்கள் தினம்!
teachers day...
teachers day... image credit - pixabay
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

-நா.பா.மீரா

றிவின் ஊற்றுக்கண்

சுரக்கச் செய்யும்

மணற்கேணியாய்…

பாதைகள் பல …

தெளிவாய்ப்

பகுத்திடும்

வழிகாட்டியாய் ….

இறைவனின்

பிரதிநிதிகளாய் …

மாணவச்

செல்வங்களின்

மூன்றாம் கடவுளாம்

ஆசிரியர்கள்!

முளைத்த

சிறகுகளுக்கு

இறக்கைகள்

கொடுத்து …

பேதை

விழிகளின்

தேடலுக்கு

அறிவுக்கண்

கொண்டு

வடிவும், உருவும்

கொடுக்கும்

நடமாடும்

தெய்வங்களே!

logo
Kalki Online
kalkionline.com