ஆப்பிரிக்காவில் இப்படியும் ஓர் ஆசிரியர்!

ரிச்சர்ட்
ரிச்சர்ட்
Published on

ஓர் ஆசிரியராக இருந்து  உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்திருப்பவர்தான் ஆப்பிரிக்காவில் கானா என்ற பகுதியில் வாழும்  ரிச்சர்ட் என்பவர். இவர் ஒரு பள்ளியில் கணினி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் வாழும் பகுதி, ஆப்பிரிக்க நாட்டில் ஒரு கிராமப் பகுதி என்பதால், அங்கு இருக்கும் பள்ளிகளுக்குப் போதுமான எந்த ஒரு வசதிகளும் இல்லை. அந்த மாணவர்கள் நோட்டு புத்தகம் வாங்குவதே பெரும் பொருளாதார நெருக்கடியாக இருக்கும்.

இதில் கணினியின் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்பாட்டை எப்படி அவர்களுக்குப் புரிய வைப்பது? இந்த வாய்ப்பு இல்லாததால், அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கல்வியில் பின்தங்கி விடுவார்களோ என்று எண்ணி ஏற்கனவே இருக்கும் வசதிகளைக் கொண்டு இன்றைய சூழலுக்கு ஏற்ப மாணவர்களை எப்படி முன்னேற்றுவது என்று சிந்தித்து. கணினியின் பாகங்கள் மற்றும்செயல்களின்அமைப்புகளைப் படமாகக் கரும்பலகையில் வரைந்து அவர்களுக்குப் புரியும் வகையில் பாடமாக எடுத்து வருகிறார் ரிச்சர்ட். ‘மாணவர்களுக்கு ஏன் இப்படி பாடம் எடுக்கிறீர்கள்?’ என்று பலர் கேட்ட பொழுது, இன்றைய சூழலில் நவீனத் தொழில் நுட்பங்களின் வளர்ச்சி அதி பயங்கரமாகிவிட்டது. இதனுடன் போட்டியிட வேண்டும் என்றால் என் மாணவர்களுக்குக் கணினியின் முக்கியத்துவம் பற்றி நன்கு தெரிய வேண்டும் என்று மாணவர்களின் நலன் கருதிக் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
அதிகமாகச் செய்யக்கூடாத ஐந்து விஷயங்கள்!
ரிச்சர்ட்

இவர் பாடம் நடத்துவதைப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களிலும் பரவச் செய்துள்ளனர். இதனை அறிந்த பல நிறுவனங்கள் இத்தகைய ஒருவரின் விடாமுயற்சிக்காகவும் கடின உழைப்பிற்காகவும் அக்கிராமத்தில் இப்பொழுது ஒரு கணினி ஆய்வகத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

ஒரு தனி மனிதன் ஒரு சமூகத்தை மாற்ற முடியும் என்பதற்கு ரிச்சர்ட் போன்ற ஆசிரியர்கள் ஒரு முன்னுதாரணமாக உள்ளார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com