
இருநூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளில், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் பேசுவதாகச் சொல்லப்படுகிறது! அவற்றுள், பல மொழிகளுக்கு எழுத்து வடிவம் இல்லையென்றும், பேச்சு வழக்கு மட்டுமே உள்ளதென்றும் கூறப்படுகிறது! அதிக மக்களால் பேசப்படும் 13 மொழிகளுள், மிகப் பழமை வாய்ந்த தமிழ் மொழி மட்டுமே, மிக அதிக எழுத்துக்களைக் கொண்டுள்ளது!
அபூர்வ மொழியான தமிழை ஒழுங்காகப் பேசினாலே அது உடலுக்கு வேண்டிய ஆரோக்கியத்தை அளிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்! நாக்கை நன்கு பராமரிப்பதும், அதனை வளைத்து, நெளித்து சுழலச்செய்வதும் நல்ல உடற்பயிற்சி என்கிறார்கள் விபரமறிந்தோர்!
ண,ன,ழ போன்ற நம் எழுத்துக்களைச் சரியாக உச்சரிக்கும்போதே நமக்குத் தானாகவே அந்தப் பயிற்சி கிடைத்து, உடல் ஊக்கம் பெற்று விடுகிறதாம்!
நம் தமிழ் மொழிக்கு அடுத்த இடத்தைப் பிடிப்பது சீன மொழி! விபரம் இதோ!
-தமிழ்.............247
-சீனம்.............214
-ஜெர்மனி.........56
-சமஸ்கிருதம்...48
-பாரசீகம்..........31
-அரபிக்...............28
-துருக்கி...........28
-ஸ்பானிஷ்........27
-ஆங்கிலம்........26
-கிரேக்கம்........24
-லத்தீன்...........22
-இத்தாலி.........20
-ஹவாய்............12
தமிழின் பழமையும் ஆராதனையும்!
அமெரிக்காவிலுள்ள மிகவும் உயரமான நயாகரா நீர் வீழ்ச்சியின் நுழைவு வாயிலில் 'நல்வரவு' என்று தமிழிலும் எழுதப்பட்டுள்ளது! அவ்வாறு எழுதப்பட்டுள்ளதற்குக் கூறப்படும் காரணம் என்ன தெரியுமா? உலகின் மிக உயரமான நீர்வீழ்ச்சியுடன், உலகின் மிகத்தொன்மையான மொழியையும் இணைத்து வைப்பதுதானே முறை என்பதுதான். உண்மைதானே!
அந்நாட்டின் 'நாசா' விண்வெளி ஆய்வு நிலையத்திலிருந்து, 'சர்வேயர்' என்ற விண்கலத்தை செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பினர், அங்கு மனிதர்கள் வாழ்கின்றனரா என்பதை அறிய! அவ்விண்கலத்தில், தமிழில் பதிவு செய்யப்பட்ட ஒலிச் சுருளையும் வைத்து அனுப்பினார்களாம்! தமிழ் மிகப் பழமையான மொழி என்பதால்,செவ்வாய்க்கிரக மக்கள் தமிழ் அறிந்திருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில்!
இவற்றிலிருந்து, தமிழின் தொன்மையை உலகமே அறிந்துள்ளது என்பது தெரிய வருகிறது!
தமிழன் என்று சொல்வோம்! தலை நிமிர்த்தி நடப்போம்!