

வான வில்லே! வான வில்லே!
வையத்தார் விரும்பும் வான வில்லே!
உதிரமாய் நீரை உள்ளுக்குள் நிரப்பிய
மேகத்தைத் தழுவும் வியத்தகு நிழலோ!
ஏழு வண்ணங்களில் எழிலைக் காட்டும்
ஏக உயர இயற்கை வளைவோ!
ஈரம் நிறைந்த எதுவும் அழகே
என்றே மனிதர்க்கு உணர்த்தும் பொருளோ!
ஊடுருவி விலகிப் பிரிகையின் கூட்டணியில்
ஒளியும் நீரும் விளையாடும் விளையாட்டோ?
சூரிய மன்னனின் சுயாட்சிக்கு எதிர்திசையில்
எதிர்க் கட்சியாகவே எப்பொழுதும் மிளிர்பவளோ(னோ)!
அழகாய் இருக்கும் அனைத்துமே உலகில்
நீடிக்கா தென்ற நிலையை உணர்த்தும்
நிரந்தர நியதியின் வெளிப்பாடோ நீயும்!
மாரியின் வரத்தை மகிழ்ந்தே காட்டிடும்
வானச் சாலையின் வண்ண இன்டிகேடரோ!
இதுவாய் அதுவாய் எதுவாய் ஆனாலும்
உன்னைக் காண்பதில் உளமெலாம் மகிழ்வே!
பேதை பெதும்பை மங்கை மடந்தை
அரிவை தெரிவை பேரிளம் பெண்ணென்றும்
பாலன் மீளி மறவோன் திறவோன்
காளை விடலை முதுமக னென்றும்
பெண்ணிலும் ஆணிலும் பருவங்கள் ஏழென்பதை
உலகுக்கு உணர்த்தவே உன்னிலும் ஏழோ!
அமைதியாய் தொங்கும் மேகங்கள் தனையே
அணைத்து நீயும் அகம் மகிழ்வாயோ!
அனைத்து மக்களும் அமைதியுடன் வாழ்ந்தால்
இயற்கையும் உதவும் என்பதின் விளக்கமோ!
எப்பொழுதாவது அரிதாய்த் தோன்றும் நீ
அதுவே உறவுக்கும் பொருந்துமென்று கூறவோ!
அத்தனை வயது ஆண்களை பெண்களை
அட்ராக்ட் செய்ய நீயும் கற்றதுஎங்ஙணம்?
அடிக்கடி வந்தால் அருமை குறையுமென்று
எண்ணியே நீயும் இருந்திடாதே வானவில்லே!
தினமும் வந்தாலும் திகட்டாமல் உன்னை