கவிதை: காதல் என்பது காதல் மட்டும் தானா?

Tamil love poem
Tamil love poem
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

- மகாலிங்கம் இரெத்தினவேலு , மதுரை

உடன்பயிலும் தோழியை 

உணர்வுகளை மறக்கச் செய்து

உருக்குலைத்தெறியும்

மிருகத் தோழர்கள்!

காதலித்து மணந்தபின்

நீதிமன்ற வாசலில்

பிரியக் காத்துக்கிடக்கும்

முன்னாள் காதலர்கள்!

பொருந்தாக் காமமே

பொங்கிப் பெருகும்

பதின்பருவத்துப்

பையன்கள்!

பள்ளிப்பருவத்தில்

பாழாய்ப்போகும்

பேதைச் சிறுமியர்!

தெருவெங்கும் நிகழும்

சில்லரைச் சில்மிஷங்கள்!

கடற்கரை மணல்வெளிகளில்

மடிகளில் முயங்கும் சல்லாபங்கள்!

சொல்லக்கூசும்

நெறிபிறழ் நடத்தைகள்

பொதுவில் அரங்கேறும்

அலைவரிசை அக்கிரமம்!

சமூக ஊடகங்களெங்கும்

மலிந்து கிடக்கும் 

நிர்மூல நிர்வாணங்கள்!

விற்பனைப் பையன்களை

விருந்துக்கழைக்கும்

வீட்டுப் பெண்டிர்!

இதையும் படியுங்கள்:
கவிதை - இலக்கினை நோக்கு!
Tamil love poem

அலைபேசியின் திரையில்

விழித்திரைகள் வீங்கிட

உரையாடி உறவாடும்

இரகசிய இரவுகள்!

ஓயாது ஒலிக்கிறது

உள்ளத்தின் செவிகளில்

காதல் என்பது

காதல் மட்டும் தானா?

logo
Kalki Online
kalkionline.com