Tamil Nadu Election 2026: முடிவை தீர்மானிப்பது நீங்களா? இவர்களா?

அது என்ன, தேர்தலில் வெற்றி பெற ரகசியக் கூட்டணி? அதுவும் மக்களுக்குத் தெரியாமல்…?
Tamil Nadu Election 2026
Tamil Nadu Election 2026AI Image
Published on

அரசியல் கட்சிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இடையே உள்ள பந்தம்:

இந்தியாவில் பெருநிறுவன (corporate-backed) ஆதரவு பெற்ற தேர்தல் மேலாண்மை நிறுவனங்களின் பங்கு கடந்த இரண்டு தசாப்தங்களாக சீராக வளர்ந்துள்ளது. இந்த நிறுவனங்கள் அரசியல் ஆலோசனை, பிரசார உத்தி, வாக்காளர் தொடர்பு மற்றும் டிஜிட்டல் மீடியா மேலாண்மை ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவையாக உள்ளன. பாரம்பரிய கட்சி ஊழியர்களைப் போலில்லாமல், தேர்தல் தாக்கத்தை அதிகரிக்க தொழில்முறை நிபுணத்துவம் (Professional expertise), தரவு பகுப்பாய்வு (Data analytics) மற்றும் சந்தைப்படுத்தல் நுட்பங்களை (Marketing techniques) அவர்கள் கொண்டு வருகிறார்கள்.

பெயர் பெற்ற நிறுவனங்கள்: இந்தத் துறையில் மிக முக்கியமான சில நிறுவனங்களில் லீட்டெக் மேனேஜ்மென்ட் கன்சல்டிங் (Leadtech Management Consulting), பிரசாந்த் கிஷோர் நிறுவிய IPAC (Indian Political Action Committee) மற்றும் குறிப்பிட்ட மாநிலங்களுக்கான உத்திகளை வடிவமைக்கும் சில மாநில ஆலோசனை நிறுவனங்கள் என்று பல இருக்கின்றன. அவற்றில் IPAC மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இது முக்கிய தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கான பெரிய அளவிலான திட்டங்களைக் கையாளுகிறது.

இதற்குக் கட்டணமாக அவர்கள் எவ்வளவு வசூலிக்கலாம்?: இவர்களின் வேலையே, விரிவான தரை ஆய்வுகள் (Extensive ground surveys), பூத்-நிலை தரவு சேகரிப்பு (Booth-level data collection) மற்றும் சமூக ஊடகப் பிரசாரங்கள் (Social media campaigns) ஆகியவை அடங்கும். இந்நிறுவனங்களுக்கு அரசியல் கட்சிகளால் கொடுக்கப்படும் சரியான லாப புள்ளிவிவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை என்றாலும். அத்தகைய நிறுவனங்கள் கையாளும் திட்டத்தின் அளவு மற்றும் கால அளவைப் பொறுத்து, அதுவும் மாநில அளவிலான தேர்தல்களை நிர்வகிப்பதற்கு ‘நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்’ கூட பெறலாம் என்று தொழில்துறை மதிப்பீடுகள் (Industry estimates) தெரிவிக்கின்றன.

மக்களுக்கு இந்தக் கூட்டணி பற்றிய செய்திகள் தெரிவுபடுத்தப்படுமா?:

அதிகாரப்பூர்வமாக இந்தக் கார்ப்பரேட், அரசியல் கட்சிகள் இடையான கூட்டணி அரிதாகவே அறிவிக்கப்படுகின்றன. மாறாக அவை பெரும்பாலும் ஊடக அறிக்கைகள் (Media reports), உட்கட்சி நபர்கள் அல்லது கட்சித் தலைவர்களுடன் சம்மந்தப்பட்ட ஆலோசகர்களின் பொதுத் வெளிப்பாடுகள் (Public appearance) மூலம் வெளிப்படுத்தப்படுகின்றன. ஆனால், முன்னர் கூறியதுபோல் இதற்கான ஒப்பந்தங்கள் மற்றும் சரியான நிதி விவரங்கள் அவ்வளவு எளிதில் வெளியாகாது.

இதையும் படியுங்கள்:
முதல்வர் வீட்டிலேயே விஜய்க்கு ஓட்டு! அலற விடும் நாஞ்சில் சம்பத்.!
Tamil Nadu Election 2026

இந்த ரகசிய கூட்டணியால் சந்திக்கப்பட்ட சமீப தேர்தல்கள்: பீகார் மற்றும் உத்தரபிரதேசம் போன்ற சமீபத்திய மாநிலத் தேர்தல்களில் பெருநிறுவன ஆலோசனை நிறுவனங்கள் (Corporate consultancies) அதிக அளவில் ஈடுபட்டன. பல நிறுவனங்கள் இதற்கான பிரசார தளவாடங்கள் (Campaign logistics), வாக்காளர் தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் விளம்பரத்தை ஒருங்கிணைத்தன. இது நவீனத் தேர்தல் பிரசாரத்தின் யுக்தியை இந்தியா முழுக்கப் பிரதிபலித்தன.

இந்த ரகசியக் கூட்டணியின் தாக்கம் தமிழ்நாட்டில் எப்படி உள்ளது?: தமிழ்நாட்டில் வரவிருக்கும் தேர்தலைப் (Tamil Nadu Election 2026) பொறுத்தவரை கட்சிகள் ஏற்கனவே முக்கிய ஆலோசனை நிறுவனங்களுடன் (Major consultancies) பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இருப்பினும் எப்பொழுதும்போல் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை. நம் மாநிலத்தின் அரசியல் போட்டி நிலவரங்களை கருத்தில்கொண்டு பார்த்தால், பிரசார உத்திகளை வடிவமைப்பதில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் குறைந்தபட்சம் ஒன்று இதில் ஈடுபடும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

மக்களுக்குத் தேவையானதையும், அவர்களின் முன்னேற்றத்திற்கும் செய்ய வேண்டியதை செய்தாலே போதுமே; வெற்றி தானாகவே வரப்போகிறது. பின் எதற்கு இந்த ரகசியக் கூட்டணி?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com