கவிதை: நாங்கள் கேட்பதெல்லாம்..!

Poor People
Poor People
ரெ. ஆத்மநாதன்

எழுத்தாளர் ரெ.ஆத்மநாதன் பொருளாதாரத்திலும், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். கதை, கவிதை, நாடகம் என்று முத்தமிழுக்கும் பணி செய்பவர். கதை, கவிதைகளை மாத,வார, ஆன்லைன் இதழ்களில் எழுதி வருபவர். இவரின் 4 நாடகங்கள் சென்னை, திருச்சி வானொலி நிலையங்களால் ஒலி பரப்பப் பட்டன. இளங்கலை முதலாண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வில் (1972-73) மாநில முதன்மை பெற்றவர்.பட்டி மன்றம், கவியரங்கம் ஆகியவற்றில் பங்கேற்பவர். அமெச்சூர் நாடகங்களில் நடித்தவர். தமிழக அரசின் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி முன்னவராகச் சேர்ந்து, அத்துறையின் பொறுப்பு இயக்குனராக ஓய்வு பெற்றவர். “தொடர்கதைகளும் முற்றும்” என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர்.

Updated on

பாலும் தேனுமா

கேட்கிறோம் நாங்கள்...?!

பச்சைத் தண்ணிதானே

குடிக்கக் கேட்கிறோம்!...

பங்களாவும் காருமா

பகட்டாய்க் கேட்கிறோம்...?!

குடிசை ஒன்றைத்தானே

குடியிருக்கக் கேட்கிறோம்!...

பிஸ்தா முந்திரியென்று

பிறவற்றையுமா கேட்கிறோம் ...?!

துவரம் பருப்பைத்தானே

துவையலுக்குக் கேட்கிறோம்!...

மணிமகுடம்  மாணிக்கம்

மரகதமா கேட்கிறோம்...?!

மணலை அள்ளாமல்

இருக்கத்தானே கேட்கிறோம்!...

ஆபரணமும் ஆடையும்

அணிகலனுமா கேட்கிறோம்...?!

ஆறு வாய்க்காலில் 

நீரைத்தானே கேட்கிறோம்!...

பட்டும் பகட்டும்

பலவுமா கேட்கிறோம்...?!

படித்த படிப்புக்கு

பணியைத்தானே கேட்கிறோம்!...  

இதையும் படியுங்கள்:
கவிதை: கருவண்ண கழுத்துமுடி சிலும்ப..!
Poor People

கோடி கோடியாய் 

கொட்டவா கேட்கிறோம் ...?!

உழைத்த உழைப்புக்கு

உரிய கூலிதானே கேட்கிறோம்!.

கிடைக்குமா?

logo
Kalki Online
kalkionline.com