கவிதை: போரில் இளம் தளிர்கள்!

Children Struggling in the war field
Children Struggling in the war fieldAI Image
Updated on
Kalki Strip
Kalki Strip

போரின் குண்டு புகை மத்தியில் குழந்தைகளின் சுவாசம் துடிக்கிறது

பொம்மைகளுடன் விளையாட வேண்டிய கைகளில்

பயமும் நடுக்கமும் மட்டுமே நிறைகிறது.

சிரிக்கப் பிறந்த முகங்களில் கண்ணீர்தான் வழிகிறது

சின்ன இதயங்களில் சொல்ல முடியாத வேதனை குமுறுகிறது

யாரோ ஒருவரின் அகம்பாவம் எரியும் தீயாக மாறி

அவர்களின் கனவுகளை சாம்பலாக்குகிறது

வீடு என்ற அரண்மனை சிதிலமாகி மறைந்து போயிற்று

பள்ளிகள் சுவர் இல்லாததாக மாறிவிட்டது

பல நண்பர்கள் முகம் மண்ணில் புதையுண்டு போய்விட்டது.

ஓடிக்கொண்டே இருக்கிறார்கள் உயிர் காக்க

ஒளிந்துகொள்கிறார்கள் ஒவ்வொரு சத்தத்திலும் நடுங்கி

வானம் கூட அவர்களுக்கு பாதுகாப்பாக இல்லை

பூமி கூட அவர்களை தாங்க பயப்படுகின்றது

குழந்தை பருவம் காயங்களால் நிரம்பிய பாதையாகிறது.

அவர்களின் கனவுகள் கேள்விகளாக மாறுகின்றன

இதில் எங்கள் தவறு என்ன? என்று மௌனத்தில் கேட்கின்றனர்,

பதில் இல்லாத உலகம் அமைதியாக நிற்கிறது.

போரின் வெற்றி என்று சொன்னால்

அது எப்போதும் மனிதத்தின் தோல்வியே.

இதையும் படியுங்கள்:
கவிதை: அளவற்ற ஆசைகொண்டால் அத்தனையும் அழிவேதரும்!
Children Struggling in the war field

ஒரு நாள் அமைதி வரும் என்ற சிறு நம்பிக்கையுடன்

அவர்கள் இன்னும் உயிர் பிடித்து நிற்கிறார்கள்...

கண்ணீரோடு நம்பிக்கையோடு.

நாமும் இறைவனிடம் மனமார

பிரார்த்தனை செய்வோம் அவர்களுக்காக...

logo
Kalki Online
kalkionline.com