தொடர்கதை: ஈரமில்லாத இதயங்கள் - அத்தியாயம் - 5

Iramillatha Ithayangal - தொடர்கதை
Iramillatha Ithayangal - தொடர்கதைImage Credit: ChatGPT
மைதிலி ராமையா

நான் எழுதிய பல கதைகள், கவிதைகள், நாடகங்கள் வானொலியிலும், ராணி, பாக்யா, குங்குமம், பத்மா, மங்கையர் மலர் மற்றும் மின்னிதழ்களிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளன. புலனக்குழுக்களில் கதைப்பயிற்றுனராகவும், நடுவராகவும் பணியாற்றி வெற்றியாளர்களை உருவாக்கவும் தேர்வு செய்யவும் உதவி வருகிறேன். எனது சிறுகதைத் தொகுப்புநூலும், கவிதை தொகுப்புநூலும் கின்னஸ் சாதனையாக வெளியிடப்பட்டது. வென்ற விருதுகளில் சில - குறிஞ்சிக் கவி, தமிழினியாள், கண்ணதாசன் விருது, பூவையர் பாமணி, அம்பேத்கார் விருது, காமராசர் விருது, ஆகச்சிறந்த எழுத்தாளர்.

Updated on
Kalki Strip
Kalki Strip

ஈரமில்லா இதயங்கள் அத்தியாயம் - 5

கண்களில் இருந்து மாலை மாலையாக கண்ணீர் வழிய அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த சிவராமன் அவன் கைகளைப் பிடித்து கண்களில் ஒற்றிக் கொண்டு, “என் மனபாரம் இறங்கிடுச்சுப்பா. இனி என் பெண்ணைப் பத்தி கவலைப்படவே மாட்டேன். உன் வார்த்தைகள் எனக்கு ரொம்ப தெம்பாயிருக்கு,” என்று ரொம்பவும் எமோஷனலாகப் பேசிக் கொண்டே மயங்கிச் சரிந்துவிட்டார்.

என்ன முயன்றும் திரும்ப அவரை எழுப்ப முடியவில்லை. கார்டியாக் அரெஸ்ட் என்று ஜெகன் சொன்னபோது உலகமே இடிந்து தலையில் விழுந்ததாக துடித்தாள் யோகம்.

முன்பு போல் இல்லாமல் ஊர்க்காரர்கள் சிலரும் உறவினர்களும் வந்தார்கள். ஒரு மகன் போல நின்று சகல காரியங்களையும் ஜெகன்தான் முடித்து வைத்தான்.

காரியங்கள் முடிந்ததும் உறவுக் கூட்டம் பறந்தது. பொறுப்புகள் ஏதும் தலையில் விழுந்து விடும் என்ற பயம் ஒவ்வொருவர் முகத்திலும் அப்பட்டமாகத் தெரிந்தது.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com