தொடர்கதை: கோட்டவூடு - அத்தியாயம் 1

Kottavoodu | கோட்டவூடு
Kottavoodu | கோட்டவூடுImg Credit: ChatGPT
ஜி. சியாமளா கோபு

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் 36 வருடங்கள் சமூக செவிலியாக பணி ஓய்விற்குப் பிறகு இப்போது முழு நேர எழுத்தாளர். சிறந்த சுகாதாரப் பார்வையாளர் என “NATIONAL FLORENCE NIGHTINGALE AWARD 2016 “PRESIDENT OF INDIA” SHRI PRANAB MUKERJEE அவர்கள் கையால் விருது பெற்ற மகத்தான அனுபவம். மாண்பிமிகு அய்யா மறைந்த திரு.அருணோதயம் அருணன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட எழுத்தாளர் என்பதில் பேருவகையும் பெருமகிழ்ச்சியும் கொள்கிறேன். அநேக சிறுகதைகள் வல்லினம், திண்ணை, பதாகை, குட் புக், My vikatan ல், Amazon kindle, Pustaka, கல்கி ஆன்லைன் வெளிவந்திருக்கிறது. 15 நாவல்கள் அருணோதயம் பதிப்பகத்தாரால் பதிப்பிக்கப்பட்டுள்ளது. பல சிறுகதைகள் பரிசுகளும் விருதுகளும் பெற்றுள்ளன. அது போக என் பணிக்காலத்தில் களப்பணியில் ஆராய்ச்சி செய்து மூன்று பதிப்புகளை இந்திய நர்சிங் ஜர்னலில் வெளியிட்டவள்.

Updated on
Kalki Strip
Kalki Strip

கோட்டவூடு - அத்தியாயம் 1

கோட்ட வூட்டுக்கு முன்னால நின்னுட்டு இருந்தேன்.

பதின்பருவ பெண்ணின் பிடரி மசிரைப்போல பொசபொசன்னு விரவியிருந்த இருட்டு, ராப்பூரா நிழலை விழுங்கியிருக்க, அப்போத்தான் தெளியத் தொடங்கியிருக்கும் நெனப்புத் தப்பினவன் மனசைப்போல சூரிய வெளிச்சம் பரவத் தொடங்கிய விடியகால நேரம்.

வெத்தலையைப் பாக்கோட மென்னு சவச்சி எச்சிலோட முழுங்கிட்டு, திண்ணையில கால்நீட்டிட்டு உக்காந்திருக்குறக் கிழவியைப்போல, பல ஆளுங்களையும், காலங்களையும் முழுங்கிட்டு உக்காந்திருக்கு... வானத்தைத் தொட்டுடற மாதிரி உசந்திருந்த அந்தக் கோட்ட வூடு, இதோ இப்போகூட, விருத்தாம்பாவை முழுங்கப் போவுதாம். விருத்தாம்பா என் பெரியப்பன் பொண்டாட்டி, இந்த வூட்டை, இடுப்பு சாவிக்கொத்துல வெச்சிட்டுருக்குற ஆளு. என்னைப் பாக்கணுமாம். ஒருக்கா ஒரு எட்டு வந்து என்னையப் பாத்துட்டு போச்சொல்லுன்னு ஆள் மேல ஆள் விட்டுட்டு இருக்கு. என்னோட அப்பனை, அம்மாவை, பாக்கியம் பெரியம்மாவை, எளயவன், பெரியப்பாவைன்னு எல்லாரையும் பாத்துட்டுது. என்னைப் பாக்க இன்னும் என்ன இருக்கு?

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com