மினி தொடர்கதை: மறக்க முடியுமா? அத்தியாயம் 1

மனிதநேயத்தையும் அன்பையும் இணைக்கும் நெகிழ்ச்சியான தமிழ்ச் சிறுகதை
Tamil serial story - marakka mudiyumaa
Tamil serial story - marakka mudiyumaaImage credit: Chatgpt

லட்சுமி ராமானுஜம், ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியை. கடந்த ஓராண்டாகச் சிறுகதைகள் எழுதி வருகிறார். வாழ்வின் நிதர்சனங்களையும், துன்பங்களை வென்று மீளும் நம்பிக்கையையும் மையமாகக் கொண்டு இவரது கதைகள் அமைகின்றன.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

மினி தொடர்கதை: மறக்க முடியுமா? அத்தியாயம் 1

ராமசாமி, வேதா தம்பதியரின் ஒரே மகள் மேனகா. மேனகா, அவள் கணவன் ராஜேந்திரன் இருவரும் கல்லூரிப் பேராசிரியர்களாக இருக்கின்றனர்.

மேனகா, "அப்பா, நான் காலேஜ் கிளம்பறேன், அவர் இன்னிக்கு சாயங்காலம் சீக்கிரமா வந்துடுவார். பத்திரமா கதவை பூட்டிக்கோங்க."

வேதாவும் ராமசாமியும் ஒரு ஆறு மாதமாகத்தான் மகள் மேனகா வீட்டிற்கு வந்து இருக்கின்றனர். அதற்குமுன் இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தள்ளியுள்ள ஆனந்தா காலனி என்ற தெருவில் தனியாகத்தான் இருந்தனர். சில மாதங்களுக்கு முன் வேதாவிற்கு 'அல்சீமெர்' எனும் மனபாதிப்பு ஆரம்பத்திருந்தது.

அதனால் திடீரென்று தன் நினைவு மறந்தவராய் பழைய நினைவுகள் அவ்வப்போது உண்டாக, தன்னையறியாமல் பேசுவார். சில சமயங்களில் அமைதியாக இருந்தாலும் தன்னையறியாமல் அவ்வப்போது வீட்டிலிருந்து தனியே வெளியே சென்றுவிடுவார். அருகிலுள்ள தெருவில் நின்றுகொண்டோ அல்லது ஏதோ ஒரு கடை வாசலில் அமர்ந்துகொண்டோ இருப்பவரை ராமசாமி தேடிச்சென்று அழைத்து வருவார்.

அதனால் மனைவியை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு ராமசாமிக்கு ஏற்பட, அவருக்கும் வயதானதில் மேனகா அவரிடம், "அப்பா நீங்க இனிமே அந்த வீட்டுல தனியா இருக்க வேண்டாம். அம்மாவை நீங்கத் தனியா பார்த்துக்கறது ரொம்ப கஷ்டம், எங்களோடு வந்து இருந்துடுங்க."

Loading content, please wait...