தொடர்கதை: ரோஸ் மில்க் - அத்தியாயம் 3

Sad Man - தொடர்கதை: ரோஸ் மில்க்
Sad Man - தொடர்கதை: ரோஸ் மில்க்AI Image
தேஜூ சிவன்

என் பெயர் சந்தானகிருஷ்ணன். என் மகளின் பெயரையும், மகனின் பெயரையும் இணைத்து தேஜூ சிவன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளை இணைய இதழ்களில் எழுதிக் கொண்டிருக்கிறேன். வாசிப்பும், எழுத்தும் என்னை நிறைவாக வைத்திருக்கின்றன என்பதை இங்கே மகிழ்வுடன் குறிப்பிடுகிறேன். நான் ஆயுள்காப்பீட்டுக் கழகத்திலிருந்து பணி ஓய்வு பெற்று என் சொந்த ஊரான தஞ்சாவூரில் என் கும்பத்துடன் வசித்து வருகிறேன் நிறைய இலக்கியக் கனவுகளுடனும், அதற்கான செயல் முனைப்புடனும்.

Updated on
Kalki Strip
Kalki Strip

‘மை டியர் ஸோனா,

இந்த வாட்ஸ் அப் செய்தியை நீ படித்து முடிக்கும்போது அந்தச் செய்தி உன்னை வந்தடைந்திருக்கும்.

நம் பீரோவில் ஒரு நீலநிற ஃபோல்டரில் நம் சேவிங்ஸ் டீடைல்ஸ், பாண்ட்கள் இருக்கும். கொஞ்சம் ம்யூச்சுவல் ஃபண்ட், கொஞ்சம் ஷேர்ஸ், ஆர்டி.

மூணு கோடி இன்சூரன்ஸ் கிடைக்கும். என் பிஎஃப்லேர்ந்து நாற்பது லட்சம் வாக்கில் கிடைக்கும். வீட்டுக்கடனுக்கான பாக்கியை கொலாட்ரல் செக்யூரிட்டியாய் கொடுத்திருந்த பாலிஸி அமெளண்ட்டிலிருந்து எடுத்துக் கொள்வார்கள்.

எனக்குத் தெரியும் உனக்கு எவ்வளவு கஷ்டமென. ஆனால் எனக்கு வேற வழி தெரியல. உன் வீட்டுக்கு போய்டு. அவங்களுக்கு நீ ஒரே பெண்தானே. உன் அப்பாவும், அம்மாவும் உன்னை நல்லாப் பாத்துக்குவாங்க.

உனக்கும், ரிதுக் குட்டிக்கும் என் அன்பு முத்தங்கள்.

என்னை மன்னித்து விடு கண்ணம்மா.

உன்,

ஆதி.’

மீண்டும் படித்துப் பார்த்தான். நிறைய எழுத வேண்டுமெனத் தோன்றியது.

போதும்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com